கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“அந்த பையன் ப்ளட் ஒரு ரேர் க்ரூப். அதை வரவழைக்கச் சொல்லியிருக்கேன். இன்னும் குறைஞ்சது ரெண்டு யூனிட் ப்ளட் பேஷண்ட்க்கு குடுக்க வேண்டியிருக்கலாம். அதுக்காக நீங்க ப்ளட் எங்களுக்கு இம்மிடியட்டா ரீப்ளேஸ் பண்ணணும். முதல்ல ரிஸப்ஷன்ல 50,000 ரூபாய் அட்வாண்ஸா பணம் கட்டிட்டு வாங்க. பையனோட பேரண்ட்ஸ்க்கு தகவல் சொல்லியாச்சா. சில ஃபார்ம்ஸ்ல அவங்க யாராவது ஒருத்தரோட கையெழுத்து வேணும்.
“பணம் உடனடியா நான் கட்டறேன்.. அதுக்காக நீங்க வெய்ட் பண்ண வேண்டாம். அடுத்து என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க டாக்டர்”, அவள் அவரை கை கூப்பினாள்.
“மாமா டாக்டர் சொல்றதை கேட்டீங்களா … நீங்க முதல்ல பணத்தை கட்டிடுங்க மாமா … அவங்க வரும் போது வரட்டும்” சுகன்யா பதறலுடன் சொன்னவள், சார் என்னோட ப்ளட் க்ரூப்
“ஓ”. நான் எவ்வளவு ரத்தம் வேணா குடுக்க தயார் சார். நீங்க எப்படியாவது அவரை காப்பாத்திடுங்க சார்.
“சிஸ்டர் இந்த பொண்ணோட ரத்தம் சேம்பிள் எடுத்துக்குங்க … மத்த ஏற்பாடுகளையும் பண்ணுங்க”
“சார் நான் அந்த ஃபார்ம்ஸ்ல கையெழுத்து போடலாமா”
“நீங்க அந்த பையனுக்கு என்ன உறவு”? டாக்டர் மெலிதாக புன்னகைத்தார்.
“நான் … நான் அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறவ சார் … நான் அவரோட லவ்வர்”
“உன் பேரு என்ன சொன்னே? … நான் நிறைய பொண்ணுங்களை பாத்து இருக்கேன். இந்த மாதிரி நேரத்துல அழுது புலம்புவாங்க; ஆனா நீ ரொம்ப தைரியசாலியா இருக்கே! நீ எதையும் யோசிக்காம பணம் கட்ட சொன்னே; ஒரு வினாடி கூட தயங்காம ரத்தம் கொடுக்க தயாராயிட்டே; ஐ அப்ரிஷியேட் யூ, ஆனா நீ அந்த ஃபார்ம்ஸ் சைன் பண்ணறதுல சில சிக்கல்கள் இருக்கு. பையனோட பேரண்ட்ஸ் வரட்டும். சீனு மவுனமாக அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான். சும்மா சொல்லக்கூடாது, நம்ம மச்சான் செல்வா ரொம்ப ரொம்ப குடுத்து வெச்சவன் … இப்படி ஒரு பொண்ணு அவனுக்கு லவ்வரா கிடைச்சிருக்கா … அவன் மனதுக்குள் வியந்தான் … இவளையா செல்வாவோட அம்மா வேணாங்கிறா? *** ரத்தம் கொடுத்துவிட்டு சுகன்யா வெளியில் வந்து அமர்ந்தாள். அதே நேரத்தில் செல்வாவின் குடும்பத்தினர் எதிரில் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். சீனு அவர்களிடம் செல்வாவின் உடல் நிலையையும், சுகன்யாவின் பக்கம் தன் கையை காட்டி, செல்வாவுக்காக அவள் ரத்தம் கொடுத்துவிட்டு வந்ததையும், ஸ்கேனுக்காவும் மற்ற டெஸ்ட்களுக்காக அவர்களுக்காக காத்திராமல் பணம் கட்டிய விவரங்களையும் முழுவதுமாக சொல்ல, மீனா சுகன்யாவிடம் வேகமாக ஓடி, கலங்கிய கண்களுடன் அவள் கைகளை பிடித்துக்கொண்டு அவள் காதில் முணுமுணுத்தாள் …
“தேங்க்யூ வெரி மச் சுகன்யா… செல்வா ட்ருலீ லவ்ஸ் யூ வெரி மச் … அவன் உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்க விரும்பறான் …
“ அதற்கு மேல் அவளால் எதுவும் பேச முடியாமல் கண்கலங்கினாள். நடராஜன் சுகன்யாவிடம் சென்று மவுனமாக நின்றார். மனதில் பொங்கும் பலவித உணர்ச்சிகளையும் உதட்டில் காட்டாமல் அவள் தலையை மெதுவாக வருடினார். ரகுவையும் சுந்தரியையும் பார்த்து கை கூப்பி நின்றார். அதுவரை எல்லாவற்றையும் பேசாமால் கேட்டுக்கொண்டிருந்த மல்லிகா சுகன்யாவை நோக்கி சென்றாள். அவள் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள்.
“சுகன்யா … நீ என் புள்ளைக்காக ரத்தம் குடுத்தியாம் … என்ன ஏதுன்னு கேக்காம பணத்தை அள்ளி கட்டினாயாம் …. நீ அவனுக்காக ரொம்ப பண்ணியிருக்கே … அதுக்கு ஒரு தாயா உனக்கு நான் என் முழு மனசோட நன்றி சொல்றேன் … உனக்கு நான் பதிலுக்கு என்ன வேணா செய்ய தயாரா இருக்கேன். ஆனா செல்வாவை என் மனசார உனக்கு கட்டி வெச்சு உன்னை என் மருமகளா ஏத்துக்க எனக்கு இஷ்டமில்லே … ஏன் … என்ன காரணம்ன்னு என்னை எதுவும் கேக்காதே? என் புள்ளையை நீ முழுசா எங்கிட்ட விட்டு குடுத்துடு … தயவு செய்து நீ இங்கேயிருந்து போயிடு … ப்ளிஸ் … அவள் அவளை நோக்கி கை எடுத்து கும்பிட்டாள்.” மல்லிகாவின் முகம் உணர்ச்சிகள் ஏதுமின்றி வரண்டு கல்லாக இறுகி அவள் குரல் தீர்மானமாக ஒலித்தது.