கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

எழுதிக்கொண்டிருந்தவர், சுகன்யா நுழைந்தவுடன் ஒரு முறை நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தவர் மீண்டும் எழுதத் தொடங்கினார். எழுதி முடித்ததும், சுகன்யாவை நோக்கி புன்முறுவலுடன் மென்மையாக பேசத்தொடங்கினார்.
“சுகன்யா, ஆர் யூ ஹிஸ் ஃபியான்சி”
“ஸார் ..”
“யூ ஆர் வெரி வெரி லக்கி கேர்ள் … இவரை டயம்ல கொண்டு வந்து சேர்த்துட்டாங்க … ஹெல்மெட் போட்டுகிட்டு இருந்ததால பொழைச்சுக்கிட்டான். ஹி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நவ் … ஹீ வில் பீ ஆல்ரைட் இன் எ வீக் … அவனுக்கு நினைவு வந்ததுலேருந்து உன் பேரைத்தான் சொல்லிக்கிட்டிருக்கான்..”
“செல்வா, மிஸ்டர் செல்வா, கண்ணைத் தொறங்க … சுகன்யா வந்திருக்கா உன்னைப்பார்க்க” சொல்லிவிட்டு அவன் கன்னத்தை லேசாகத் தட்டினார். அவன் மெதுவாக தன் கண்களைத் திறக்க அவர் வெளியே நகர ஆரம்பித்தார்.
“ப்ரெய்ன் ஸ்கேன் பண்ணதா டாக்டர் சொன்னார் … ப்ரெய்ன்ல்ல ப்ராப்ளம் ஒண்ணுமில்லேயே ஸார்? …
“நத்திங்க் … டியர், ஜஸ்ட், ஒரு சின்ன டௌட் … அதை ரூல் அவுட் பண்றதுக்காக ஸ்கேன் எடுத்தேன். ஒரு வாரத்துல அவன் எழுந்து பழையபடி உன்னை பின்னாடி உக்கார வெச்சுக்கிட்டு பைக் ஓட்டுவான் பாரும்மா. ஸ்பீடா போனான்னா முதுகுல ஒண்ணு போடு; நீ அவன் கிட்ட சீக்கிரமா ரெண்டு நிமிஷம் பேசிட்டு அவனைத் தனியா விடு. ரெஸ்ட் எடுக்கட்டும். அவர் சிரித்தபடியே நகர, டாக்டர் மாதவன் அவரைப் பின் தொடர்ந்தார். *** டாக்டர்கள் இருவரும் வெளியே வந்ததும், வெளியில் காத்திருந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொள்ள, சீனியர் பேச ஆரம்பித்தார். நீங்க தான் செல்வாவோட பேரண்ட்ஸ்ஸா? … நீங்க சுகன்யாவுக்கு அம்மாவா, இவரு அவளோட மாமாவா – சுகன்யா ரொம்ப தைரியமான பொண்ணு – காலையில டக் டக்குனு முடிவு எடுத்திருக்கா … மாதவன் சொன்னார் …
“ உங்க பையன் செல்வாவுக்கு நினைவு வந்திடுச்சி … பயப்படற மாதிரி ஒண்ணுமில்லே … தலையில ஒரு காயம் மட்டும் கொஞ்சம் நீளமாவும் ஆழமாவும் இருந்தது; அதுக்கு மட்டும் எட்டு தையல் போட்டிருக்கோம் … மூளையில எந்த டேமேஜும் இல்ல … ப்ளட் லாஸ் மேக் அப் பண்ணியாச்சு … கடைசி யூனிட் ரத்தம் கொடுத்துகிட்டு இருக்கோம். மத்த படி உடம்புல அங்கங்க இருக்கிற ஸ்கேரச்சஸ், நார்மலா ஹீல் ஆயிடும்”
“இன்னைக்கும் நாளைக்கும் ரெண்டு நாள் செல்வா இங்க I.C.U வில அப்சர்வேஷன்ல்ல இருக்கட்டும்; நாளைக்கு மறு நாள் அவனை வார்டுக்கு அனுப்பிச்சிடறேன். நாளைக்கு ஒண்ணு ரெண்டு எக்ஸ்ரே எடுக்கலாம்ன்னு இருக்கேன் … ஒண்ணும் அட்வெர்ஸா இல்லன்னா, இந்த வீக் எண்ட்ல அவனை டிஸ்சார்ச் பண்ணிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்துல, அவன் நார்மலா பேச ஆரம்பிச்சுடுவான்னு எதிர்பார்க்கிறேன்.”
“சாயந்தரத்துலேருந்து நார்மல் புட் குடுக்கச் சொல்லியிருக்கேன், உடம்பெல்லாம் வலிக்குதுன்னு சொல்லுவான். பயப்பட வேண்டாம். செடேட்டிவ் குடுத்துடலாம். இன்னைக்கு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். சும்மா பேசி பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதீங்க..”
“நீங்கள்ளாம் ரெண்டு ரெண்டு பேரா போய் செல்வாவை பாத்துட்டு குயிக்கா வெளியில வந்துடுங்க. உங்கள்ல்ல யாராவது ஒருத்தர் மட்டும் இங்க இருந்தா போதும். பேஷண்ட்டுக்கு இன்ஃபெக்ஷன் ஆயிடக்கூடாது பாருங்க – மெலிதாக சிரித்தவாறு சொன்னார் – மத்ததெல்லாம் டாக்டர் மாதவன் பார்த்துக்குவார். ஓ.கே.” அவர் நடராஜன் கையை குலுக்கிவிட்டு நகர்ந்தார். *** செல்வா மெதுவாகத் தன் கண்ணைத் திறந்தான். அவன் முகத்தில் என்ன ஆகுமோ என்ற பயமும் பீதியும் இன்னும் பாக்கியிருந்தது. சுகன்யாவைப் பார்த்ததும், அவன் நிறையப் பேச நினைத்து, ஏதும் பேச முடியாமல், கலங்கிய அவன் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. நீண்டப் பெருமூச்சு அவன் உதடுகளில் இருந்து வந்தது.