கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“சாரி சுகன்யா; வெரி வெரி சாரி; எங்க அம்மா அப்படி பேசினதுக்காக உங்க கிட்ட நான் மன்னிப்பு கேக்கிறேன்; அவங்க ஏன் அப்படி பேசினாங்க, என்ன காரணத்தால பேசினாங்கன்னு சத்தியமா, எனக்கோ, எங்க அப்பாவுக்கோ தெரியாது.” மீனா கெஞ்சும் குரலில் பேச, சுகன்யா தன் முகம் சுருங்கி பதிலுக்கு முகத்தில் வேதனையுடன் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள்.
“சுகன்யா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க; உங்களுக்கு இப்ப கோபம் நிச்சயமா வரும்; எங்கம்மாவை கோச்சுக்கறதுக்கு உங்களுக்கு நிறைய காரணங்கள் இருக்கு; அதுக்கு மேல உங்களுக்கு உரிமையும் இருக்குன்னு நான் நினைக்கிறேன்; நீங்க சொல்ல நினைக்கற அவ்வளவையும் நான் பொறுமையா கேக்கத் தயார்; ஆனால் … ப்ளீஸ் … இப்ப நீங்க எழுந்து உள்ள வாங்க; செல்வாவுக்கு நினைவு வந்துடுச்சாம்; அவன் உங்க பேரைத்தான் திரும்ப திரும்ப சொல்றானாம். இப்ப உங்களை பாத்தா அவனுக்கு மனசு நிம்மதியா இருக்கும்.”
“டாக்டர் உங்களை மட்டும்தான் உள்ள கூப்பிடறார். அடிபட்டு கிடக்கற இந்த நிலைமையிலும் என் அண்ணன் உங்கப் பேரைத்தான் சொல்றான்; எங்க யார் பேரையும் சொல்லலை; உங்களுக்கு நீங்க நேசிக்கற செல்வா முக்கியமா? இல்ல எங்க அம்மா மேல கோபப்படறது முக்கியமா?” கண் கலங்கி பேசிய மீனா சுகன்யாவின் கைகளை பற்றியவள், எந்த நேரத்திலும் அழுதுவிடுவாள் போல் இருந்தாள்.
“சுகன்யா, நான் சீனு, செல்வாவோட ஃப்ரெண்டு; அவனுக்கு அடிபட்டுதுன்னு தெரிஞ்ச உடனே, யாரைப்பத்தியும், எதைப்பத்தியும், கவலைப்படாமா ஓடிவந்து ரத்தம் குடுத்து, பணத்தைக்கட்டி, எல்லாம் பண்ணிட்டு, அவன் உங்களை பார்க்கணும்ன்னு சொல்ற நேரத்துல, அவன் அம்மா அர்த்தமில்லாம எதையோ பேசினாங்கன்னு, திரும்பி போனா, நீங்க பண்ண அத்தனைக்கும் அர்த்தமில்லாம போயிடும்; ப்ளீஸ், சீக்கிரமா உள்ள வாங்க” சீனு அவளை நோக்கித் தன் கையை கூப்பினான்.

“சீனு, ப்ளீஸ், கையை கீழே போடுங்க முதல்ல; நான் வரேன்; என் செல்வாவுக்காக நான் வர்றேன்; எனக்கு வேற எதுவும் முக்கியமில்லை.” சுகன்யா தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே மீண்டும் வந்தாள். மல்லிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உட்க்கார்ந்திருந்த தன் தாயிடம் தன் கைப்பையையும், செல் போனையும் கொடுத்தவள், தன் மாமாவின் முகத்தைப் பார்த்தாள்; அவள் பார்வையில் உள்ளே போகட்டுமா என்ற கேள்வி தொக்கியிருந்தது. அவரும் தன் கண்ணாலேயே விடைக்கொடுக்க, அவள் தன் ஜீவனைப் பார்க்க படபடக்கும் நெஞ்சுடன் உள்ளே விரைந்தாள். *** அந்த அறையினுள் இரு கட்டில்கள் போடப்பட்டிருக்க ஒரு கட்டில் காலியாக இருந்தது. பக்கத்து கட்டிலில் செல்வா தலையில் கட்டுடன் கண்கள் மூடி படுத்திருந்தான். அவன் முகம் வீங்கியிருக்க இடது கை மணிக்கட்டில் கட்டுப்போடப்பட்டிருந்தது. இடது கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, ஒரு நர்ஸ் அவனுடய ரத்த அழுத்தத்தை அளந்து கொண்டிருந்தாள். வலது கையில் இரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. செல்வாவின் தலைப்பக்கத்தில், வயது முதிர்ந்த ஒரு டாக்டர் நின்றவாறே ஒரு பேப்பரில் வேகமாக கிறுக்கிக் கொண்டிருக்க, காலையில் அவளுடன் பேசிய டுயூடி டாக்டர் நின்று கொண்டிருந்தார்.