கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“மாமா, உடம்பு வலின்னு இவர் சொன்னா, உடனே என்னை கூப்பிடுங்க; நான் வலிக்கு ஊசி மருந்து போடச்சொல்றேன்னு டாக்டர் மாதவன் சொல்லிட்டு போனார். நான் போய் அவரு எங்க இருக்காருன்னு பார்த்து கூப்பிட்டுக்கிட்டு வர்றேன்.” என நயமாக பேசினாள். சுகன்யா, தன்னை மாமா என அன்புடன் அழைத்ததும் நடராஜன் ஒரு நொடி திகைத்து, தன் மனைவி மல்லிகாவை வியப்புடன் பார்த்தார்.
“சுகன்யா, நீ செல்வா பக்கத்துல இரும்மா, நான் போய் டாக்டரை கூப்பிட்டுகிட்டு வரேன்.” நடராஜன் தன் மனம் நெகிழ்ந்து போனார். மல்லிகாவின் கண்கள் வியப்பால் விரிந்தது. அவள் முகம் இலேசாக சுருங்கியது. இந்த பொண்ணு சித்த முன்னாடி எங்கிட்ட என்ன சொன்னா? மீனாவும், சீனுவும் போய் என்ன சொல்லி இவளை திருப்பி இழுத்துகிட்டு வந்தாங்கன்னு தெரியலேயே? வந்த வேகத்துல, உள்ள வந்து கட்டில்ல கிடக்கறவனை கட்டிப்புடிச்சி முத்தம் குடுக்கறா; மயக்கத்துல கிடக்கற என் புள்ளை இவ பேரைச் சொல்லி சொல்லி மாஞ்சு போறான்.

இவ அப்படி என்னாதான் சொக்கு பொடி போட்டு என் புள்ளையை மயக்கி வெச்சிருக்கான்னு தெரியலையே? பத்தாக்குறைக்கு இவ கிட்ட பேசி இவ எவ்வளவு நல்லவன்னு தெரிஞ்சுக்கணுமாம்; பாக்கறதுக்கு லட்சணமா இருந்துட்டா போதுமா? போன வாரம் இவனை தன் ரூமுக்கு கூப்பிட்டு பாதி உடம்பை அவுத்து காட்டினான்னு சொன்னான். இன்னைக்கு என் கண்ணாலேயே பாத்துட்டேன் அவ லட்சணத்தை. சே.. சே… பொண்ணுன்னா ஒரு அடக்கம் வேணாம்; கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி அலையறாளே? என் புள்ளை இவ கழுத்துல இன்னும் தாலியை கட்டலை. அதுக்குள்ள இவ என்னடான்னா என் புருஷனை மாமாங்கறா; என்ன தைரியத்துல இப்படி கூப்புடுவா? என் புருஷனுக்கு தலை கால் புரியல; அப்படியே உச்சி குளுந்து போய் நிக்கறாரு. அடுத்தது என்னை இவ அத்தைன்னு கூப்பிடுவாளா? இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலையே? கொஞ்சம் விட்டா இங்கேயிருந்தே இவ என்னை மொத்தமா பார்சல் பண்ணி, காசி, ராமேஸ்வரம்ன்னு அனுப்பிடுவா போல இருக்கே? அப்புறம் இவகிட்டதான் நான் எல்லாத்துக்கும் கை ஏந்தி நிக்கணுமா? மல்லிகா தன் கண் விரிய அவர்கள் இருவரையும் மாறி மாறிப்பார்த்தாள்.
“மாமா, அப்படியே வெளியில நிக்கறவங்களையும் கொஞ்சம் உள்ளே வர சொல்லுங்களேன்; இவரைப் பாத்துட்டா அவங்களுக்கும் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்” கண்களில் கனிவு பொங்க அவரைப் பார்த்தாள். நடராஜன் அறையை விட்டு வெளியில் போகத் தொடங்கியதும், மல்லிகா வெற்றுப் பார்வையொன்றை சுகன்யாவின் மீது வீசியவள், விருட்டென திரும்பி தன் கணவனின் பின் நடக்க,
“அத்தைக்கு இன்னும் கோபம் தீரல போல இருக்கு” மல்லிகா போன வேகத்தைப் பார்த்த சுகன்யா தன் மனதில் சிரித்துக்கொண்டாள் சற்று முன்பு மீனாவும், சீனுவும், செல்வாவை பார்த்துவிட்டு போன பின், முழுசாக ஐந்து நிமிடம் கூட தூங்க முடியாமல் உடல் வலியால் தவித்து கண் விழித்த செல்வாவுக்கு புரண்டு படுக்க வேண்டும் போலிருந்தது. செல்வாவுக்கு ரத்தம் ஏற்றி முடித்து, டிரிப்ஸையும் நிறுத்தி இருந்தார்கள்.
“செல்வா, ஒரு நிமிஷம் கண்ணைத் தொறந்து பாரேன்; எங்கம்மாவும், மாமாவும் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க”. தன் நெருங்கிய உறவினர்களை அவனுக்கு அறிமுகப்படுத்திய சுகன்யாவின் குரலில் மிதமிஞ்சிய அன்பும், பரிவும் ஒருங்கே தொனித்தன. செல்வா, சுந்தரியைப் பார்த்ததும் சட்டெனத் திரும்பி சுகன்யாவை ஒரு முறை நோக்கிப் புன்னகைத்தான். அம்மாவும் பொண்ணும் ஓரே பிரஸ்ல அச்சடிச்ச மாதிரி இருக்காங்களே; ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனான் அவன்.
“முதல் தடவையா உங்க ரெண்டு பேரையும் பாக்கிறேன்; என்னாலே எழுந்து விஷ் பண்ணமுடியலே” அவன் முகத்தில் உண்மையான வருத்தம் படர்ந்திருந்தது.
“பரவாயில்லே தம்பி, நீங்க சீக்கிரமா குணமாகி வீட்டுக்கு வாங்க அது போதும் எங்களுக்கு” சுந்தரி மெல்லிய புன்னகையுடன் பேசினாள்.
“ஸார், அன்னைக்கு, உனக்கும், எனக்கும் நடுவுல இனி எதுவுமே இல்லன்னு இவ சொல்லிட்டு போனதாலே, சுகன்யாவை எனக்குத் தெரியாதுன்னு உங்ககிட்டே மடத்தனமா பேசிட்டேன்; அதுக்கு நீங்க என்னை மன்னிக்கணும்.” செல்வா மெல்லிய குரலில் சுகன்யாவை பார்த்தவாறு பேசினான்.
“தம்பி, நான் அதை எப்பவோ மறந்துட்டேன்; வீட்டுக்கு வந்து உங்க குடும்பத்துல இருக்கறவங்களை நேரா ஒரு முறை பார்த்து பேசணும்ன்னு வந்தேன். துரதிருஷ்டவசமா, நாம ஒருத்தரை ஒருத்தர் இங்க மருத்துவமனையில சந்திக்க வேண்டியதாப் போச்சு.”