கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“ அவள் அறைக்குள் பாய்ந்து இங்குமங்கும் ஓடினாள் … தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள் … அலமாரியை திறந்து கையில் கிடைத்த பணத்தை அள்ளிக்கொண்டாள். அம்மா நீயும் வர்றியாம்மா …
“ சுந்தரியை கட்டிக்கொண்டு விம்மினாள்.
“செல்வா … என்னடா உனக்கு இப்படி ஆகிப்போச்சு … பாவி பாத்து வரக்கூடாதாடா … வண்டியை வேகமா ஓட்டாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் … கேட்டியாடா பாவி … கிக்கா இருக்குடி பைக்ல பறக்கும் போதுன்ன்னு சொல்லுவியடா பாவி … நீ என்னைப் பாக்க வரும் போது உனக்கு இப்படி ஆச்சுன்னு தெரிஞ்சா உன் அம்மா என்னை உயிரோட புதைச்சுடுவாளேடா? … இப்ப நான் அவங்க மூஞ்சியில எப்படிடா முழிப்பேன்; இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு புரியலேயே?”
“டேய் செல்வா … எல்லாம் அந்த முண்டக்கண்ணி சாவித்திரி கண்ணுதாண்டா … உன்னை இப்படி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிச்சு இருக்கு; நம்பளை உசுரோட திண்ணனும்ன்னு பாக்கறடா அவ … அவ கண்ணு தான் கொள்ளிக்கண்ணாச்சே … நல்லா இருப்பாளா அவ; அவள் கட்டிலில் விழுந்து தலையில் அடித்துக்கொண்டு கத்தினாள் … உனக்கு ஏதாவது ஓண்ணு ஆச்சு; அவளை நான் சும்மா விட மாட்டேன் …. ஓவென கத்தி அழ ஆரம்பித்தாள். அவள் போட்ட கூச்சலையும் அதை தொடர்ந்து வந்த அழுகை சத்தத்தையும் கேட்டு கீழே வெரண்டாவில் நின்று கொண்டிருந்த சங்கர் பதறியாவாறு மேலே ஓடி வந்தான்.”
“சரிடா கண்ணு சுகா .. நாம போகலாம்ம்மா … கிளம்பு நீ … இப்ப அழுவாதே நீ… தைரியமாயிரு … ஒண்ணும் ஆகியிருக்காது … ரகு தன் உடையை மாற்ற ஆரம்பித்தார்.
“என்னாச்சு சுகன்யாவுக்கு … ஏன் அழறா இப்படி?” சங்கர் திகைத்தான்.
“சங்கர் உங்க கார்ல சீக்கிரமா என்னை லட்சுமி ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போறீங்களா? என் செல்வா அங்க சீரீயஸா கிடக்கிறான் …” எழுந்து ஓடி அவன் கையை பிடித்துக்கொண்டாள் சுகன்யா.
“நான் எல்லாம் விவரமா சொல்றேன் … நீ கொஞ்சம் வண்டியை எடுப்பா சங்கர் … உனக்கு வேலை ஒண்ணும் இப்ப இல்லையே … நீ கொஞ்சம் எங்க கூட வரலாம் இல்லே? வேணி சாயந்திரம் தானே வர்றா … அக்கா, நான் என் ஏடிம் கார்டு எடுத்துக்கிட்டேன்; நீ உன் கிட்ட இருக்கற பணத்தை மொத்தமா எடுத்துக்கோ… சுகா நீங்க ரெண்டும் பேரும் கிளம்புங்க … சங்கருடன் ரகு கீழே இறங்க ஆரம்பித்தார். *** மீனாவின் செல் சிணுங்கியது… யாராக இருக்கும் இப்ப … ஜெயந்திதான் காலையில கால் பண்றேன்ன்னா; ஆனால் போனில் தெரியாத நம்பராக இருக்க … மீனா தயங்கினாள் … அடித்து அடங்கிய போன் மீண்டும் சிணுங்கியது.
“ஹலோ … யாரு

“நான் தீபக் … இன்ஸ்பெக்டர் … செல்வா உன் அண்ணனா? சுகன்யாதான் இந்த நெம்பரை குடுத்தாங்க … செல்வா பைக்ல ….. கிண்டிக்கு கிட்ட ….. ட்ரக் இடிச்சு … நந்தனம் லட்சுமி ஆஸ்பிட்டல்ல …. அட்மிட் ஆயிருக்கான் … சுகன்யாவுக்கு தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறேன் … நீங்க அங்க உடனடியா போங்க … ராமச்சந்திரன் ஹெல்ப் பண்ணுவார் … மீதியை அப்புறம் பேசலாம் …”
“அப்பா … நம்ம செல்வாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சாம்.. சீரியஸா இருக்கானாம். சுகன்யா ஆஸ்பத்திரிக்கு போய்கிட்டு இருக்காளாம் … நந்தனத்துல லட்சுமி ஹாஸ்பெட்டலாம் … போலீஸ்லேருந்து போன் பண்ணி சொல்றாங்க … நீ பேசுப்பா இன்ஸ்பெக்டர் கிட்ட…