கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 8 12

“எனக்கு என்ன பிரச்சனைம்மா? நிஜமாகவே எனக்குப் பசிக்குது; நான் சாப்பிட ரெடி; எனக்கு ஒரு தக்காளி சாதம் பொட்டலம் குடும்மா; மல்லிகா, சும்மா பிகு பண்ணிக்காம வந்து சாப்பிடுடி; உனக்குப் பிடிச்ச தயிர்சாதம், மசால்வடைன்னு சுகன்யா ஏகப்பட்டது வாங்கிட்டு வந்திருக்கா …
“ ஒரு பொட்டலம் தயிர்சாதத்தையும் ஒரு வடையையும் எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தார்.
“ரொம்பத் தேங்க்ஸ்ம்மா சுகன்யா; என்னம்மா எங்க வீட்டுல யாருக்கு என்ன என்ன பிடிக்கும்ன்னு அவன் உங்கிட்ட சொல்லி வெச்சிருக்கானா? அவர் சுகன்யாவை மன நிறைவுடன் பார்த்தார்.
“நம்மளை விட்டுவிட்டு சாப்பிட ஆரம்பிச்சிட்டீங்களா, சாப்பிடுங்க சாப்பிடுங்க; இது மாதிரி இங்க எதாவது நடக்குமுன்னு தெரிஞ்சுதான், சுகன்யாவோட அம்மா சுடச் சுட ஊத்திக் குடுத்த ஊத்தப்பத்தையும், பக்கோடா குருமாவையும் ஒரு புடி புடிச்சுட்டு வந்துட்டேன்; பாவம் நம்ம ஹீரோவுக்காக ஆசை ஆசையா காலையில எல்லாம் ரெடி பண்ணியிருக்காங்க; அவன் என்னடான்னா காலை ஒடைச்சிக்கிட்டு இங்க கட்டில்ல கிடக்கிறான்; மீனா … எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணும்டா கண்ணு …” சொல்லியவாறு மரத்தடி நிழலில் புல் தரையில் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்த சீனு ஒரு மசால் வடையை எடுத்துக் கடித்தான்.
“சீனு, உங்களை நான் விட்டுடலை; உங்களுக்கும் சேத்துத்தான் வாங்கிட்டு வந்தேன். இப்ப உங்களுக்கு வேணும்ன்னா நீங்க தாராளமா சாப்பிடலாம் …” சுகன்யா அவன் பக்கம் சாப்பாட்டு பையை நகர்த்தினாள்.
“ச்சே … ச்சே … நான் சும்மா உங்களை கலாய்ச்சுப் பாத்தேன்; நான் திருப்தியா உங்கம்மா கையால சாப்பிட்டாச்சு; சூப்ப்ப்பரா இருந்தது குருமா; உங்களுக்கும் இந்த அயிட்டமெல்லாம் பண்ணத்தெரியுமில்லியா; லெமன் ரைஸ் … அப்புறம் புளிசாதம் நல்லாப் பண்ணுவீங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்; அவன் சுகன்யாவைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.
“உனக்கெப்படிடாத் தெரியும்” மீனா குறுக்கிட்டாள்.
“ம்ம்ம் … வேறெப்படி … எல்லாம் நம்ம ஹீரோ சொல்லித்தான் தெரியும் … அவரு இங்க சென்னையில வேலையில இருந்த வரைக்கும், ஆபீசுல லஞ்சுல மனசுக்குப் பிடிச்சவாளுக்கெல்லாம், தவறாம பிரசாத வினியோகம் நடக்குமாம் …
“ சொல்லிவிட்டு அவன் சுகன்யாவைப் பார்த்து ஹோவென சிரித்தான்.
“உங்க கிண்டல்லாம் போதும் சீனு … இப்ப உங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இங்க அவசியம் சொல்லித்தான் ஆவணுமா … அத்தை என் மேல ஏற்கனவே கோபமா இருக்காங்க; அவங்க புள்ளையை நான் என் கையில போட்டுகிட்டேன்னு; சுகன்யா தன் முகம் சிவக்க புன்னகைத்தாள்.
“டேய் … சீனு … இவங்க ரெண்டு பேரையும் பத்தி உனக்கு வேறென்னல்லாம் தெரியும்டா” சொல்லுடா கேக்கறதுக்கு ரொம்ப இண்ட் ரஸ்டிங்கா இருக்கு” மீனா ஆர்வத்துடன் கேட்டாள்.
“நீ இன்னும் சின்னப்பொண்ணு … அப்படியே அம்மாவுக்கு பாப்பாவா ஒரு ஓரமா ஒதுங்கி நில்லு; பெரியவா பேசும் போது நீ குறுக்க வரப்படாது; இதுக்கு மேல வேற எதுவும் கேக்காதே; அதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி விவகாரம் … உனக்கு வேண்டாம் … நோக்கு புரிஞ்சிக்கறதுக்கு வயசு பத்தாது … சீனு சொல்லிவிட்டு வெட்கமில்லாமல் மேலும் உரக்கச்சிரித்தான். *** சுகன்யா, மல்லிகா சாப்பிட ஆரம்பிப்பதற்காக காத்துக்கொண்டிருந்தாள். அவள் தன் கணவன் கொடுத்ததை கையில் வைத்துக்கொண்டு சீனு பேசுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாள். சீனு என்ன சொல்றான்? இவங்க ரெண்டு பேர் நடுவில வேற என்னல்லாம் நடந்திருக்கும்? சாப்பிடும்மா, நீ சாப்பிட்டாத்தான் சுகன்யாவும் சாப்பிடுவாங்கன்னு தோணுது” மீனா தன் அம்மாவின் இடுப்பில் கிள்ளினாள். அதற்கு மேல் மறுப்பெதுவும் சொல்ல முடியாமல் மல்லிகா மவுனமாக சாப்பிடத்தொடங்க, சுகன்யாவும் தக்காளி சாதத்தை சாப்பிடத்தொடங்கினாள். இரண்டு கவளம் சாப்பிட்ட சுகன்யாவுக்கு தொண்டையை அடைத்து பொறை ஏறியது … இருமத் தொடங்கியவள் .. தன் கண் கலங்க, கையிலிருந்த சாதத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தண்ணீரை குடித்தாள்.
“என்னாச்சு சுகன்யா, ஏன் அழறீங்க, மீனா பதைபதைப்புடன் அவள் பக்கத்தில் நகர்ந்து உட்கார்ந்து அவள் தலையை இலேசாகத் தட்டினாள்.
“ஒண்ணுமில்லே மீனா … காலையில ஆசையா சாப்பிட வரேன்னு சொல்லிட்டு உன் அண்ணன் என் வீட்டுக்கு வந்தார்… வழியில அடி பட்டு … இப்ப தூக்க மருந்து மயக்கத்துல பசியோட உள்ளே படுத்து கிடக்கறதை நினைச்சேன் … துக்கம் என் தொண்டையை அடைச்சிடுத்து; அவரை சாப்பிட கூப்பிட்டப்ப இப்படியெல்லாம் நடக்கும்ன்னு நான் நெனைக்கவேயில்லே …