உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 150

மறுநாள். .! காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அவனை எழுப்பிவிட்டு விட்டாள் மிருதுளா.
நந்தாவுக்கு ஐந்தரை மணிக்கு எழுந்து பழக்கமில்லை.. என்பதால் மிகவும் கஷ்டமாக இருந்தது.! ஆனாலும் வேறு வழியில்லை. வசமாக மாட்டிக்கொண்டாகி விட்டது. இவள் ஒரு ஆசிரியை என்பதால் மிகவும் கண்டிப்பாகத்தான் நடந்து கொள்வாள்.!
அவள் கொடுத்த காபியைக் குடித்துவிட்டு. . வாக்கிங் என்ற பெயரில் நடந்துவிட்டு வந்தான். பிறகு மாடியில் நின்று கொண்டு. .கை.. காலை அசைத்தான். அறைக்குள் நின்று.. தண்டால் எடுத்துப் பழகினான்.! அதன் பின்.. குளித்துவிட்டு சாப்பிடப் போனான். !

மிருதுளாவும் புறப்பட்டிருந்தாள்.
” தினமும் இது மாதிரி பண்ணனும். . அப்பதான் ஒடம்பு ஆரோக்யமாவும்.. அழகாகவும் இருக்கும்..” என்றாள்.
” இனிமே பாருங்க.. உங்கள அசத்திக்காட்றேன்..” என்றான் ஜம்பமாக.
” ம்.. ம்..! நல்லதுதான்..!” எனச் சிரித்தாள்.

ஒரு மெல்லிய பரவசத்துடன் அவளைப் பார்த்தான்.
” ஒண்ணு சொல்லவா ஆண்ட்டி. .?”
” ம்..ம்.. சொல்லு..”
” உங்களப் பாத்தா வயசான மாதிரியே தெரியல..! இன்னும் இளமையாத்தான் இருக்கீங்க.!”
”ம்கூம். .” பெருமிதமாகச் சிரித்தாள் ”தேங்க்ஸ்..”
” எங்கம்மாக்கும். . உங்களுக்கும் ஒரே வயசுதான ஆண்ட்டி. ?”
” ஆமாப்பா..”
” ஆனா எங்கம்மா வயசானவங்கன்றது.. நல்லாவே தெரியும். ! முடி நரைச்சிருச்சு… முகத்துல லேசா சுருக்கம் விழ ஆரம்பிச்சிருச்சு..”
”என்னைக் கூட நல்லாபாரு தெரியும்.! முடில நரை விழ ஆரம்பிச்சாச்சு.. முகத்துல சுருக்கம் இருக்கு..! என்ன நான் பியூட்டி பார்லர் போறதால.. அது அவ்வளவா தெரியறதில்ல..”

சிறு வயது முதலே.. அவள் ஒரு அழகி என்ற எண்ணம் அவன் மனதில் உண்டு..! அந்த பிம்பம் இன்னும் கூட அவன் மனதுக்குள் அப்படியே இருந்தது. இப்போதும். . அவள் முகத்தைப் பார்ப்பதே அவனுக்குப் பிடித்தமான ஒரு விசயமாக இருந்தது. அவளது தோற்றத்தில்.. ஆசிரியை என்கிற கம்பீரம் மிளிர்ந்தது.!

சமயத்திற்கு ஏற்றார் போல.. அவளது கண்களில் கண்டிப்பும்.. கருணையும் மாறி மாறி வரும். அது இரண்டுமே அழகானவைதான். சில சமயம் அவள் கண்களைப் பார்க்கும் போது..
‘ என்னையே பார்த்துக்கொண்டிரு ‘ என அவளது காந்த விழிகள் மெஸ்மரிசம் செய்வது போலிருக்கும். !

அவள் மனதில் எவ்வளவோ.. ஆழமான காயங்களும். . வேதனைகளும்.. இருந்தும் இவளால் எப்படி. . இயல்பாக நடந்து கொள்ள முடிகிறது? என்கிற வியப்பு அவனுள் எழுந்தது.
‘ இத்தனை துயரங்கள் இருந்தும்.. எப்படி இந்த முகம்.. இத்தனை அமைதியாக… இத்தனை தெளிவாக… அடக்கமாக… பார்ப்பவர் மனதில் ஒரு மதிப்பும்… மரியாதையும் உருவாகும் வண்ணம்… கம்பீரமாக இருக்கிறது…?’ என மனதில் எண்ணினான்.
அந்த சமயம். . அவள் மீது. . அவனுக்கு உண்டான அன்புக்கும்… பிரியத்துக்கும் அளவே இல்லை. .!

” ஸோ.. நீ.. சாப்பிடறதா இல்ல.?”
அவளையே ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கேட்டாள் சுய உணர்வு பெற்றவனாகப் புன்னகைத்தான்.
” ஓ..! ஸாரி ஆண்ட்டி. .”
” என்ன யோசனை அப்படி.. ம்..?” புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.
” உங்களப் பத்திதான்..”
” என்னைப் பத்தி.. அப்படி என்ன. .. ரொம்ப தீவிரமா..?”
” உங்கள பாக்கற யாரும் உங்க வயச கணிக்க முடியாது. .”
” சரிதான்..” சிரித்தாள் ”இவ்ள நேரம் இதவா யோசிச்சிட்டிருந்த..?”
” ஐயோ. . வெளையாட்டில்ல..! நெஜமாதான் ஆண்ட்டி…!” தலையாட்டிச் சொன்னாள்.
”உடற்பயிற்சி… யோகா எல்லாம் தினமும் பண்ணா… ஒடம்பு ஆரோக்யமா இருக்கும்.. வயசையும். . அனுமானிக்க முடியாது. .! சரி… சாப்பிடு. .”

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.