உன்ன எனக்கு ரொம்ப புடிச்சு போச்சுடா! – 1 151

காலை.! நந்தா கண்விழித்த போது.. மணி ஆறரை ஆகியிருந்தது. அவன் கீழே இறங்கிப் போனபோது.. மிருதுளா.. சமைத்துக் கொண்டிருந்தாள்.
”குட் மார்னிங் ஆண்ட்டி. .” என்றான்.
” குட்மார்னிங் ” சொல்லிச் சிரித்தாள்.
காபியை அடுப்பில் வைத்துச் சூடாக்கினாள்.
” இதான் நீ… வழக்கமா எந்திரிக்கற நேரமா..?” எனக் கேட்டாள்.
புன்னகைத்தான்.
” சில நேரங்கள்ள… எட்டு மணிகூட ஆகும் ”
” இன்னிக்கு மொத நாள் அதான் விட்டுட்டேன். ஆனா நாளலருந்து நீ சரியா ஆறுமணிக்கெல்லாம் எந்திரிச்சாகனும்..”
” ஓகே ஆண்ட்டி. .” என்றான். ”பட் ஆறுமணிக்கு எந்திரிச்சு என்ன பண்றது ..?”
”எவ்வளவோ பண்ணலாம்.! ஜாகிங் போகலாம். வீட்லயேகூட எக்சர்சைஸ் பண்ணலாம்.. அப்றம் யோகா கூடப் பண்ணலாம்..”
” கரெக்ட் ஆண்ட்டி. .! ஆனா இதெல்லாம் எனக்கு எதுமே பழக்கமேயில்லயே..”
” பழகிக்கோ.. ! ஆரோக்ய வாழ்க்கை வாழக்கத்துக்கோ..! ஒண்ணும் தப்பில்ல..!”
” ம்…சரி.” என்றுவிட்டு அவளைக் கேட்டான். ”உங்க ஆரோக்யத்துக்குக்கூட அதான் காரணமோ..?”

அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
” ஆமாப்பா..”
” இப்பயும் கன்டினியூ பண்றீங்களா..?”
” ரெகுலரா பண்றதில்ல..! நேரம் கெடைக்கறப்ப கண்டிப்பா பண்ணிருவேன்..! அதிகமா… யோகா பண்ணுவேன்..” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு. சூடாகிவிட்ட காபியை. .. டம்ளரில் ஊற்றி…அவனுக்கு ஆற்றிக் கொடுத்தாள்..!
” நாளைலருந்து உன்கிட்ட ஒரு டிசிப்ளினை எதிர்பாக்கறேன்..”

பரிதாபமாகச் சிரித்தான் நந்தா. காபிக்குப் பின் தன் அறைக்கு போய்.. காலைக்கடன்களை முடித்துவிட்டு. . குளித்துப் புத்துணர்ச்சியோடு கிளம்பிக் கீழே போனான் நந்தா.
காலைச் சிற்றுண்டி தயாராக இருந்தது.! தினசரியை எடுத்துக்கொண்டு. . அவன்.. உணவு மேஜைமுன்உட்கார்ந்தான்.

”சாப்பிடலாமா..?” எனக் கேட்டபடி அறைக்குள்ளிருந்து வெளியே வந்த மிருதுளா.. மிக நேர்த்தியாக ஆடை உடுத்தி.. அற்புதமாகத் தோன்றினாள்.
” ம்.. ம்..” தலையாட்டினான்.

அவள் அருகில் வந்தபோது… அவளிடமிருந்து பரவின நறுமணம் அவனை… உற்சாகமடையச் செய்தது. ஆண்ட்டி உணவைப் பறிமாற.. அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ இந்த வயதிலும் எத்தனை அழகு..? ‘ என வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால். ‘இப்போதே இத்தனை அழகென்றால்… இளமையில் எப்படி ஜொலித்திருப்பாள்.?’

” ம்.. சாப்பிடு..” அவள் சொல்ல..
” அங்கிள் இல்லையா.. ஆண்ட்டி. .?” எனக் கேட்டான்.
” போயாச்சு..”
” எப்ப போனார்…?”
” நீ… குளிக்கப் போனப்பறம்..”
” டிபன் சாப்பிடலை..?”
” இல்லை. .”

அதற்கு மேல் அவரைப் பற்றிக் கேள்வி கேட்க அவன் விரும்பவில்லை. அது அவளது மனநிலையைக் கெடுத்துவிடக் கூடும்..! எக்காரணத்தாலும் அதைச் செய்து விடக்கூடாது என நினைத்தான் நந்தா. பறிமாறியபின்… மிருதுளாவும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினாள்.!!!

அன்று மாலை..! நந்தா வேலை முடிந்து… வீடு போனதும் அவனுக்குக் காபி கொடுத்து உபசரித்தாள் மிருதுளா !

”வேலை எப்படி இருந்துச்சு நந்தா. .?”
” பைன் ஆண்ட்டி. .! ரொம்ப புடிச்சிருக்கு..”
” பிராப்ளம் எதும் இல்லையே.?”

1 Comment

  1. Nice.. very nice… superb…

Comments are closed.