இடை அழகி மேடம் சங்கீதா 15 69

என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை வருடினாள்…. அவளுடைய பதிலும், முத்தமும் அவனுக்கு மிகவும் சந்தோஷம் குடுத்தது.. இருந்தும் அவன் கண்களில் எதோ ஒரு ஏக்கமும் தயக்கமும் இருப்பதை கவனித்தாள் சஞ்சு.. என்னடா யோசிக்குற? இல்ல… ஒண்ணுமில்ல… ஏய்ய் வாத்து… எனக்கு உன்ன பத்தி நல்லாவே தெரியும்.. நீ இல்லன்னு சொன்னாலும் உன் கண்ணு ஏதோ இருக்குன்னு சொல்லுதே ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு….. இல்ல சஞ்சுநீ எனக்கு குடுத்துட்ட… ஆனா நான்தான் இன்னும் உனக்குஒண்ணுமேகுடுக்கல.. – என்று சொன்னபடி சஞ்சு முத்தம் குடுத்த பகுதியை கன்னத்தில் தடவிப் பார்த்தான்.. ஹேய் கார்த்தி.. நீதான சொல்லி இருக்க காதலிக்குறேன்னு சொல்லுறது கேள்வி இல்லை ஆனா எல்லோரும் பதிலை எதிர் பாக்குறாங்கன்னு…. அது மாதிரி தான் முத்தம் வாங்குற சந்தோஷம் குடுக்குறதுலையும் இருக்கு… நான் உனக்கு முத்தம் குடுத்து சந்தோஷத்தை அடைஞ்சுட்டேன் …..உனக்கு எப்போ என்கிட்டே தயக்கம் போயி நான் உன்னுடையவனு மனசார நினைக்குறையோ எனக்கு நீ அப்போ குடுத்தா போதும்” என்று படபடவென்று பேசிவிட்டு தலையை சாய்த்து சிரித்தவளை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான் கார்த்திக்…. இப்போ இருக்குற சந்தோஷத்துக்கு எனக்கு உன்ன இறுக்கி கட்டிக்கிட்டு முத்தம் குடுக்கனும்னு ஆசைதான் சஞ்சு….. ஆனா.. என்ன ஆனா..? ஆமா பின்ன இவ்வளோ நேரம் உருகி உருகி காதலிக்குறேன்னு சொல்லிட்டு கடைசியா எப்படா சான்ஸ் கிடைக்கும்.. மேல கை வெக்க வரானேனு ஒரு செகண்ட் கூட நீ தப்பா நினச்சா என்னால தாங்க முடியாது சஞ்சு?.. நீ ஒரு வேல அப்படி நெனச்சிடுவியோன்னு – என்று கார்த்திக் இழுப்பதை பார்த்து சஞ்சுவுக்கு ஒரு நொடி பேச்சு வரவில்லை… “ஹாய்” என்று ஒரு வார்த்தை சொன்னாலே அந்த ஒரு வார்த்தையை அடுத்து பல வார்த்தைகளை மணிக்கணக்கில் பேசி, தோளில் கை போட்டு படுக்கை வரை வசியம் செய்ய முயற்சிக்கும் ஆண்களுக்கு நடுவில் கார்த்திக் அவள் கண்களுக்கு ரொம்பவும் அபூர்வமாக தெரிந்தான் என்ன யோசிக்குற சஞ்சு? ஒன்றும் பேசாமல் அவனையே மெளனமாக சற்று பார்த்துக்கொண்டிருந்தவள்…. சில நொடிகள் கழித்து ஏதோ யோசித்து அவன் கையைப் பிடித்தாள்..

இங்க வா…. என்றாள் எங்க சஞ்சு? சும்மா வாடா…. மரியாதையா கூப்பிட்டா வரமாட்டியா… என்று அழைத்து (இழுத்து) தன் வீட்டின் ஹாலில் உள்ள ஒரு மிகச்சிறிய கதவுகளைக்கொண்ட குட்டி பூஜை அறையின் முன் நிற்க வைத்தாள்.. அதனுள் அவளுடைய அம்மாவின் படத்தைத் தவிர வேறு எந்த சாமியின் படங்களும் இல்லை…. ஒரு சிறிய அணையா விளக்கின் ஒளியில் ஜொலித்த அந்தபடத்தின் அருகே உள்ள சிறிய குங்கும டப்பாவை எடுத்து கார்த்தியின் கையில் குடுத்து “என் மேற்புற நெத்தியில நடுவுல வெய்.” என்றாள்.. என்ன சொல்லுற சஞ்சு..? தாலி கட்டினாதான இப்படி வெச்சிபாங்க?…நமக்கு இன்னு…. “ஷ்ஷ்….” என்று சொல்லி அவனது வாயில் தன் கை வைத்து மூடினாள்.. “என்ன பொருத்த வரைக்கும் என் வாழ்க்கைல நான் சாமியா நினைக்குறது என் அம்மா மட்டும்தான்டா… இன்னைக்கி வரைக்கும் நான் என் மனசார விரும்பி செய்யுற காரியங்க எதையுமே அவங்க முன்னாடிதான் செஞ்சி இருக்கேன்… என்னதான் நாளைக்கு ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சாலும், மாலை மாத்தி தாலி கட்டினாலும், இப்போ என் அம்மா முன்னாடி நீ என் நெத்தியில பொட்டு வெச்சா என்ன பொருத்தவரைக்கும் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துடுச்சின்னு அர்த்தம்..” கார்த்தி ஒரு நிமிடம் யோசித்தான்.. “ராகவ் கிட்ட ஒரு வார்த்த..” என்று அவன் இழுக்கையில்..