இடை அழகி மேடம் சங்கீதா 15 69

நான் முதல்ல சொன்னது பொய் தான்… நான் என் மனசுல 1000 தடவ திரும்பி திரும்பி சாகுறதுக்கு தாயார்னு யாருக்காகவாவது நினைக்க தோனும்னா அது உனக்காக மட்டும்தான் தோணும்….” – என்று மனதில் உள்ளவற்றை பட படவென சொல்லி முடித்தான் கார்த்திக்.. சஞ்சனா இவற்றை கேட்ட பிறகு என்ன பேசுவதென்று தெரியாமல் சில நொடிகள் அப்படியே அமைதியாய் நின்றாள்…. ஒரு நொடி அவளாள் கார்த்திக் சொல்வதை உண்மையாக நம்ப முடியவில்லை.. மற்றொரு புறம் அது நிஜமாக இருந்தாள் இந்த ஜென்மத்தில் அவள் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று எண்ணினாள்.. சில நிமிட மௌனத்துக்கு பிறகு சஞ்சனா கார்த்திகைப் பார்த்து “ஏன் உன் மனசுல என்ன தோணுச்சி கார்த்திக்?” என்றாள் “இன்னிக்கி நேத்து இல்ல சஞ்சு.. உன்ன முதல் நாள் பார்த்ததுல இருந்தே உன் மேல ஒரு ஈர்ப்பு இருந்துச்சி.. கூடவே நாம புஃப்பே சாப்பிடும்போது நீ என் கிட்ட காமிச்ச கவனம், அக்கறை, அது போக மனசுல இருக்குறது எல்லாத்தையும் எந்தவிதமான தயக்கமும் இல்லாம என் கிட்ட பகிர்ந்துக்குற விதம், கூடவே கடந்த ஒரு மாசமா நாம ஒருத்தருக்கொருத்தர் ஃபோன்ல பேசிக்கும்போது எனக்கு மனசளவுல ஏற்படுற ஒரு விதமான ரிலாக்சேஷன்னு, கூடவே இன்னிக்கி உன் வீட்டுல எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.. இதயெல்லாம் விட முக்கியமா….” – என்று சொல்லவந்து நிறுத்தினான்.. “முக்கியமா?.. என்ன சொல்லு?” – என்றாள் சஞ்சனா.. “முக்கியமா எனக்கு எந்த மாதிரி டிரஸ் போட்டா நல்லா இருக்கும்னு நினைச்சி இன்னிக்கி நீ என் கிட்ட இப்படி ஒரு மாற்றத்தை பார்க்க நினைச்சதால தான் எனக்கே என்னை இப்படி பார்த்தா பிடிக்கும்னு கூட தெரிஞ்சிக்க முடிஞ்சிது…. உண்மைய சொல்லனும்னா எங்கம்மாவுக்கு அடுத்து ராகவ் என் கிட்ட இப்படியெல்லாம் இருடான்னு சொல்லி கூட கேட்டுகாத என் மனசு இன்னிக்கி நீ என்ன அதையே செய்ய சொல்லி கேட்டபோ என்னால அந்த வார்த்தைகள தட்ட முடியல.. அது ஏன்னு என்னாலையும் சொல்ல முடியல.. என் கிட்ட சில விஷயங்கள கண்ட்ரோல் எடுக்க கூடிய ஒரே ஆள் என் அம்மா மட்டும்தான், அவங்களுக்கு அடுத்து அதை என் கிட்ட செஞ்ச ஒரே ஜீவன் நீ ஒருத்தி மட்டும் தான்..” – ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ் மனதிலிருந்து நேரடியாக கொட்டினான் கார்த்திக்.. “ரொம்ப தெளிவா சொல்லுறேன் சஞ்சு, இப்படி ஒரு தோழியாவும், கைடாவும், எந்த நேரத்துலயும் வெளிப்படையாவும் உண்மையாவும் நடந்துக்குற உன்ன மாதிரி ஒருத்தி என் வாழ்க்கை முழுக்க என் கூட வந்தா நல்லா இருக்கும்னு சத்தியமா ஆசை படுறேன்.. என்னை ஏத்துக்குவியா?” – என்று கார்த்திக் அவன் கேள்வியை வைக்க, சஞ்சனாவின் கண்களில் கண்ணீர் மல்கியது.. “நான் எதாவது தப்ப சொல்லிட்டேனா?….” – கார்த்திக் அவளின் கண்ணீருக்கான அர்த்தம் புரியாமல் கேட்டான்.. “உ.. உன்ன என் மனசுல ஏத்துக்க முடியல கார்..த்திக்..” – சற்று அழுதுகொண்டே விம்மியபடி பேசினாள் சஞ்சனா…. “ஒஹ்.. புரியுது.. ஏன்னா நான் மத்த ஆம்பளைங்க மாதிரி இல்ல.. அதனாலதான?…” அவன் அப்பாவியாக கேக்க.. “வாய மூடு.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சதே நீ மத்த ஆம்பளைங்க மாதிரி இல்லைங்கற காரனத்தாலதான்.. ஸ்ஷ்”.. சற்று மூக்கை உரிந்தபடி பேசினாள்.. “ப்ச்.. ஃபர்ஸ்ட் அழாம பேசு சஞ்சு.. எதுக்காக உன் மனசுல என்ன ஏத்துக்க முடியல? அதுக்கு காரணம் சொல்லு.. ப்ளீஸ்..” என்றான்.. சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள்.. “உனக்கு என் விஷயங்கள் எல்லாமே தெரியுமே… எனக்கும் மிதுனுக்கும் நடந்தது..” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டான் கார்த்திக்…. “அது உன்ன அறியாம அவங்க உன் கிட்ட இருந்து எடுத்துகிட்டது.. அதுக்கு நீ என்ன செய்ய முடியும்?… நாய் கடிச்சா தொப்புல சுத்தி ஊசி போடுறதில்லையா?.. அந்த மாதிரி அந்த நாய் கடிச்ச கடிக்கு என்ன ஊசியா நினைச்சிக்கோ.. இவ்வளோ ஏன்?… இந்த விஷயத்துல எனிமி எனிமின்னு நான் சொல்லற என் ராகவ் கிட்ட இருந்தே நான் கத்துகிட்ட ஒரு நல்ல விஷயம் அது.. ஏற்கனவே அண்ணி இன்னொருத்தருடைய மனைவின்னு தெரிஞ்சேதான கல்யாணம் செஞ்சிகிட்டான்?.. அவங்க இப்போ சந்தோஷமா இல்லையா?..” – என்ன ஆனாலும் இவளை இழக்க முடியாதென்கிற தீர்கமான முடிவு கார்த்திக் மனதினுள் தெளிவாக தெரிந்ததால் அனைத்துக்கும் தயாராய் இருந்தான் அவன்.. நீண்ட நேரம் மௌனம் நிலவியது அவர்கள் நிற்கும் இடத்தில்… “என்ன இருந்தாலும் என்னால உடனடியா ஒரு முடிவை சொல்ல முடியல கார்த்திக்.. என்ன மன்னிச்சிடு..