இடை அழகி மேடம் சங்கீதா 15 69

கார்த்திக் சிரிப்பதைப் பார்த்துவிட்டு சில நொடிகள் கழித்து மௌனம் களைந்து ஜூஸ் டம்ளரை மெதுவாக கீழே வைத்து தரையைப் பார்த்தபடி மெல்லிய குரலில் பேச தொடங்கினாள் சஞ்சனா.. “கூர்மையான முட்கள் பொதிந்த கூறுகெட்ட சமுதாயமே.. நான் அவ்வப்பொழுது தலைகுனிந்து நிற்பதற்குக் காரணம் நான் ஏன் பெண்ணாக பிறந்தேனோ என்று எனக்குள் நான் வருந்துவதாக எண்ணி விடாதே.. என்னிடம் இருக்கும் கண்ணியம் இறங்கி விடக் கூடாதென்பதற்காக என் கண்களில் தென்படும் கண்ணீர் துளிகளை உன் கண் பார்வையிலிருந்து மறைப்பதற்காகத்தான்….” என்று அவள் சொல்லி முடிக்கும்போது தரையில் ஒரு துளி கண்ணீர் சிந்தியதை கவனித்தான் கார்த்திக்.. “ஹே சஞ்சு.. என்ன ஆச்சு?… ஐ அம் வெரி சாரி டி… ந…நான்….” – கார்த்திக் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க.. டைனிங் டேபிளில் உள்ள டிஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்து மெலிதாய் எட்டிப் பார்த்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டாள் சஞ்சனா.. “இந்த வாக்கியத்தை மிதுன் விவகாரம் ஆனாப்போ எழுதினேன்.. ஆனா செவுருல மாட்டிவெக்க தோனல.. காரணம் அந்த நியாபகம்… எ… எனக்…..” மன வலியில் சாதாரணமாக தொடர முடியாமல் மீண்டும் நன்கு மூசிழுத்துவிட்டு சுதாரித்துக்கொண்டு பேச தொடங்கினாள்.. “அந்த நியாபகம் திருப்பி வர வேண்டாம்னு நினைச்சிதான் அதை நான் மாட்டி வெக்கல….” கார்த்திக் அவளை அப்படியே பார்துக்கொண்டே இருந்தான்.. “ஹஹ்ஹா… டேய் லூசு கிறுக்க.. நான் நார்மலாதான் பேசுறேன்.. நீ ஏன் என்ன அப்படியே ஒரைஞ்சி போயி பார்த்துட்டு இருக்க?..” ஒன்றும் பேசாமல் கார்த்திக் மீண்டும் அப்படியே அவளை சீரியசாக பார்த்தான்.. “டேய் நீ சீரியஸா பார்த்தா சிரிப்பு வருது டா.. சாதாரணமா லூசு மாதிரியே இருடா.. அதுதான் உனக்கு எப்போவுமே எடுப்பா இருக்கும்… என்று சொல்லி சஞ்சனா இப்போது சிரிக்கும்போது உண்மையில் இவள்தானா சில நொடிகளுக்கு முன்னாடி கண்ணுல தண்ணி வெச்சி நம்ம கிட்ட பேசினா?.. என்று கார்த்திக் சத்தியமாகவே ஆச்சர்யப்படும் அளவுக்கு சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் ஒரு கன நொடியில் எப்படி இவளால மனசளவுல டக்கு டக்குன்னு மாத்திக்க முடியுதுன்னு எண்ணி மீண்டும் ஃப்ரீஸ் ஆனான்..

“டேய்.. வாத்து…” – கொஞ்சம் சத்தமாக கத்தினாள் சஞ்சனா.. “ஆங்..” – என்று இப்போது சுய நினைவுக்கு வந்தான் அந்த வாத்து..! பார்ர்றா… உன்ன மரியாதையா லூசு கிறுக்கான்னு கூப்டா கூட காதுல கேக்கல.. ஆனா வாத்துன்னா டக்குன்னு திரும்புற?.. ஹா ஹா ஹா…. – நன்கு சத்தம் வர சிரித்தாள் சஞ்சனா.. “இன்னொன்னும் சொல்லுறேன் கேளு…” – என்று தொடர்ந்தாள்.. “வரதட்சனை என்ற பெயரில் அமௌன்ட் கேட்பதும் ஒரு ஆண்.. குடுப்பதும் இன்னொரு ஆண்… இவற்றுக்கு நடுவில் ஒன்றும் செய்யாமல் அவர்களுடைய கோவத்துக்கு ஆளாகிறேன் நான்…” அவள் சொன்ன அந்த இரு வாக்கியங்களையும் கேட்டு “நிஜமாவே நீதான் எழுதினன்னு ஒத்துக்குறேன்.. எனக்கு நிரூபிக்குறேன்னு சொல்லி இப்போ எனக்கு சொல்லி காமிச்ச வார்த்தைகளால நீ எதுவும் மனசளவுல கஷ்ட படல இல்ல?…” கார்த்திக் இப்படி கேட்கும்போது அவன் வார்த்தைகளில் இருக்கும் அக்கறையை ரசித்தாள் சஞ்சனா..