இடை அழகி மேடம் சங்கீதா 15 69

எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. நான் நாளைக்கு பேசுறேன்.. ப்ளீஸ்… என்ன புரிஞ்சிக்கோ..” – என்று சொல்லி டைனிங் டேபிள் மீது தலை சாய்த்து படுத்தாள் சஞ்சனா… அவளிடம் இதற்கும் மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு.. “அப்போ நான் கிளம்புறேன்…” என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றான்.. மதியம்… சாயுங்காலம்… இரவு…. நடு இரவு… இப்படி நேரம் கடந்து கொண்டே போனது.. ஆனால் சஞ்சனா ஒரு ரோபோவைப் போல அவள் வீட்டினுள்ளேயே சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தாள், நேரம் அதிகாலை 4 மணி இருக்கும்…. இதற்கும் மேல் முடியாதென்று எண்ணி கார்த்திக் மொபைலுக்கு கால் செய்தாள் சஞ்சனா.. ஹலோ.. – பரபரப்புடன் ஃபோன் எடுத்தான் கார்த்திக்..

“டேய்.. மணி காலைல 4 ஆகுது, ஒரு ரிங் கூட போய் முடியல அதுக்குள்ள ஃபோன் எடுத்துட்ட?… நீ தூங்கவே இல்லையா?” – என்று மிகவும் ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா.. “முக்கியமான பரீட்சை எழுதிட்டு ரிசல்டுக்காக காத்துட்டு இருக்கேன்.. எப்படி தூக்கம் வரும்?.. அதெல்லாம் சரி.. நீயும் தூங்கலையா?.. இத்தன மணிக்கு ஃபோன் பண்ணுற?” – என்றான் தெம்பாக.. சில நொடி மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள்….” நீ பாட்டுக்கு உன் மனசுல இருக்குறத கொட்டிட்டு போயிட்ட.. எனக்கும் ஒண்ணுமே நாள் முழுக்க ஓடல டா.. எனக்கு இப்போவே உன்ன பார்க்கணும் போல இருக்கு.. கொஞ்சம் வர முடியுமா?.. உன் கிட்ட நிறைய பேசணும்…” – அவள் குரலில் மிகுந்த ஏக்கம் தெரிந்தது அவனுக்கு.. “ஒஹ்.. அப்படியா?… ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் தூங்காம இருந்ததால கொஞ்சம் தலை சுத்துது.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பத்து மணிக்கு காண்டீன்ல பொங்கல் சாப்டுட்டு வரேன்.. சரியா?” – என்று கொட்டாவி விட்டுக்கொண்டே ஃபோன் கட் செய்தான் அந்த வாத்து… “இது உண்மையாவே வாத்து மடயந்தான்.. எந்த நேரத்துல எப்படி பேசிட்டு ஃபோன் வெக்குது பாரு?… இவன மதிச்சி ஃபோன் பண்ணதுக்கு என்ன அடிச்சிக்கனும்…” என்று அவள் புலம்பி முடித்த அடுத்த செகண்ட் காலிங் பெல் சத்தம் கேட்டது.. எக்கச்சக்க சந்தோஷத்தில் ஓடிப்போய் கதவைத் திறந்தாள் சஞ்சனா.. வெளியே நம் கார்த்திக் முந்தைய நாள் அணிந்துகொண்டு சென்ற அதே புது பான்ட், ஷர்ட் கூட கழட்டாமல் அதே காஸ்ட்யூமில் அவள் செல்ஃபோனில் அழைத்த அடுத்த கணமே அப்படியே அவள் முன் அதிகாலை 4 மணிக்கு வந்து நின்றான்.. கதவை திறந்து பார்த்த சஞ்சனாவிடமும் ஒரு நீண்ட மௌனம்.. கார்திக்கிடமும் ஒரு நீண்ட மௌனம்.. இருவருடைய வாயும் பேசவில்லையே தவிர்த்து அவர்கள் மனதில் எழும் மௌனம் அதிகமாக பேசிக்கொண்டிருந்தது… அந்த மௌனராகம் அவர்களுகிடையில் எப்படி ரீங்காரமாய் ஒலித்ததென்று காண்போம்….விடிகாலை நான்கு மணியளவில் சஞ்சனாவின் வீட்டின் அருகில்எந்த ஒரு சத்தமுமின்றி அமைதியான சூழல் இருந்தது.. கதவின் வெளியே நிற்கும் கார்த்தியின் காதுகளுக்கு சஞ்சனாவின் வீட்டினில் உள்ள கடிகாரத்தின் முட்கள் சுத்தும் சத்தம் கூட தெளிவாக கேட்டது..! எப்படியும் சஞ்சு தன் மனதில் உள்ளதை சொல்லுவாள் என்று காத்திருந்தவன்அவள் அழைத்த அடுத்த கணமே காலிங் பெல் அழுத்த வேகமாய் படிக்கட்டுகளில் மூச்சு வாங்கஓடிவந்தான்….

கதவைத் திறந்து ஒரு கண நொடி கார்த்திக்கை நேருக்கு நேர் பார்த்த சஞ்சனா.. பின்வேகமாக தன் தலையை கீழே தாழ்த்தினாள்.. அங்கிருந்த கதவில் அவள் கன்னங்கள் அழுந்திக்கொண்டிருந்தது.. அந்த இருள் சூழ்ந்த விடிகாலை நேரத்தில் இருவருக்கும் சந்தோஷம் கலந்த படபப்பில் அவர்களின் மூச்சு காற்றின் சப்தம் கூட தெளிவாக கேட்டது.. “நீ….” – என்று இருவரும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பார்த்து எதோ கேள்வி எழுப்ப, சில நிமிடங்கள் ஒழிந்திருந்த வெட்க சிரிப்பு இப்போது இருவருடைய முகத்திலும் ஒரு வித சந்தோஷத்தை பொங்கி வழிய செய்தது..