இடை அழகி மேடம் சங்கீதா 12 171

ஒரு வெள்ளை நிற ஷர்ட் அணிந்து முதல் இரண்டு பட்டன்கள் போடாமல் கார்கோஸ் பேன்ட்டுடன் தலை முடியை வாராமல் அப்படியே கலைத்தவாறு மிகவும் காஷ்வலாக வந்தான். சங்கீதாவுக்கு உண்மையில் அவனது தோற்றம் ஈர்த்தது ஆனாலும் அவன் பார்க்கும்போது வேறெங்கோ பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள். சங்கீதாவின் ஆடையைப் பார்த்து ராகவ் ஒரு நிமிடம் அப்படியே அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்று எண்ணினான், ஆனால் அருகே சஞ்சனாவும் கார்த்திக்கும் இருப்பதால் கொஞ்சம் தவிர்த்தான். “ஓகே ஃபிரண்ட்ஸ் லெட்ஸ் ஸ்டார்ட்…. என்று சொல்லிக்கொண்டே முந்தைய இரவு கண்ணாடி உடைந்த காரை விட்டுவிட்டு வேறொரு BMW காரை எடுத்தான்…. அதில் நால்வரும் அமர்ந்தார்கள். யாருக்கும் எங்கே செல்கிறோம் என்று சொல்லாமல் வண்டியை ஓட்டினான் ராகவ்.. ஒரு எக்ஸ்ஹிபிஷன் உள்ளே நுழைந்தது வண்டி. வண்டியை ஓட்டும்போது ரியர் வியூ மிரர் மூலமாக சங்கீதாவின் முகத்தை அடிக்கடி பார்த்தான் ராகவ்.. அந்த கண்ணாடியிலேயே “நேரா பார்த்து வண்டிய ஓட்டு” என்று விரலை நீட்டி சொல்லாமல் சொல்லி செல்லமாய் எச்சரித்தாள் அவனுடைய சரா.. வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நுழைவு கட்டணம் கட்டி டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள் நால்வரும். அமைதியாய் அனைவரும் நடக்க சஞ்சனா பேச்சை ஆரம்பித்தாள். “கார்த்திக்.. எனக்கு ஒரு கேள்வி…” “சொல்லுங்க சஞ்சனா..” “எதுக்கு ராகவை எனிமின்னு கூப்பிடுற?” “ஒண்ணா ரெண்டா எத்தினி விஷயத்துக்கு என்னை பகொடாவா யூஸ் பண்ணி இருக்கான் தெரியுமா?..” பேசிக்கொண்டே ஒரு ஃபாஸ்ட் புட் சென்டர் அருகே அமர்ந்தார்கள்.. “ஒரு நாள் குவிஸ் ப்ரோக்ராம் இருக்குன்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனான் பாருங்க..” – அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது ராகவ் சிரித்தான்.. “சிரிக்காதடா எனிமி… வலி எனக்குதான் தெரியும்…” என்றான் கார்த்திக்..

“ஹா ஹா.. அப்படி என்ன ஆச்சு… சொல்லுங்க கேட்கலாம்..” – ஸ்வாராஸ்யமாக கேட்டாள் சங்கீதா.. “டி.என்.சேஷன் சீஃப் கெஸ்டா வந்தாருங்க.. நேர்ல பார்க்கும்போது இன்னும் உர்ருன்னு இருந்தாரு. அவருக்கு பக்கத்துலதான் எங்க பெஞ்ச்… அந்த ஆளு கூட ஒரு பொன்னும் வந்துச்சி. அவருக்கு கொஸ்டீன்ஸ் எடுத்துக் குடுக்க!.. முதல் ரவுண்டு முழுக்க சைன்ஸ் பத்தி இருந்துச்சி.. ஒரு கேள்விக்கு எங்க ரெண்டு பேருக்கும் பதில் தெரியும்.. ஆனா உஷாரா உடனே என்கிட்டே இருந்து மைக் வாங்கி ரொம்ப ஸ்டைலா ஆன்சர் பண்ணிட்டான். கீழ கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் ஆடியன்ஸ் இருந்தாங்க.. எல்லாரும் ரொம்ப பலமா கைத் தட்டினாங்க.. அப்போ நான் இவனை கூப்டு அடுத்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா நான்தான் சொல்லுவேன்னு சொன்னேன்.. இவனும் சரின்னு சொன்னான்.. அதுக்கப்புறம் ரெண்டாவது ரவுண்டு.. மூணாவது ரவுண்டுன்னு கிட்டத்தட்ட இருவது கேள்வி இருக்கும்… எல்லாத்துக்கும் மைக்ல நானேதான் சொனேன்.. “வாவ்.. எல்லாத்துக்கும் நீங்களேதான் பதில் சொன்னீங்களா?” – சங்கீதா சாப்பிடுவதை நிறுத்தி ஆச்சர்யமாக கேட்டாள்.. “அந்த கன்றாவிய ஏங்க கேட்க்குறீங்க? எல்லா கேள்விக்கும் நான் ஒருத்தனே “பாஸ்” ன்னு சொன்னேங்க.. பாவிப்பய அதுக்கு மட்டும் என் கிட்ட மைக் குடுத்துட்டு அவன் கால் மேல கால் போட்டு ஸ்டைலா கூட்டத்துக்கு போஸ் குடுத்துக்குட்டு இருந்தான்.” சஞ்சனாவும் சங்கீதாவும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்….

“இதை விட மோசமா இன்னொரு விஷயம் அன்னிக்கி மேடைல நடந்துச்சிங்க..” “ஹா ஹா… என்ன அது?..” – சங்கீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.. “நாலாவது ரவுண்டுல முதல் கேள்வி கேட்டாங்க.. அப்போ இவங்கிட்ட காதுல மெதுவா ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தேங்க.. நான் என்னமோ பதில் சொல்ல வரேன்னு நினைச்சி இவனும் சுறுசுறுப்பா என் கைல இருந்த மைக் புடிச்சிகிட்டான். அப்போ….” -சொல்ல வந்து நிறுத்தினான்… “அப்போ… என்ன ஆச்சு சொல்லு..சொல்லு..” – சஞ்சனா மிகவும் ஆர்வமாக கேட்டாள். “லாஸ்ட் மூணு ரவுண்டுக்கும் நாந்தான் ‘பாஸ்’ சொன்னேன்… இந்த ரவுண்டு ஃபுல்லா நீதான் பாஸ் சொல்லணும்னு மெதுவா அவன் காதுல சொன்னேங்க… இந்த பாவிப் பய என் வாய் கிட்ட மைக் வெச்சி இருக்கான்னு எனக்கு தெரியல..

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.