இடை அழகி மேடம் சங்கீதா 12 171

“எப்படியும் முயற்சி பண்ணி திருப்பி அவனை பிடிக்கிறோம்….” என்று ராஜேந்திரன் சொல்ல…. ராகவ் ஒன்றுமே பேசாமல் சில நிமிடம் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து மெளனமாக பார்த்தான்.. “என்ன சார் யோசிக்குறீங்க?.. சொல்லுங்க” என்றார் ராஜேந்திரன்… மீண்டும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்…. “மிஸ்டர் ராகவ்.. நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே?…” என்று மீண்டும் இன்ஸ்பெக்டர் கேட்க ஒரு நொடி யோசித்துவிட்டு “இல்ல.. ஒண்ணுமில்ல…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மெதுவாக விலகி சென்றான் ராகவ். அப்போது “சார்…” என்று கார்த்திக் போலீஸ் அருகே சென்று மெதுவாக அழைக்க… “என்ன?..” என்று வாயால் கேட்காமல் பார்வையால் பார்த்து கேட்டார் இன்ஸ்பெக்டர்…. “என்னோட சேர்ந்து சொல்லுங்க…. ஆல் இஸ் வெல்…. ஆல் இஸ் வெல்….” என்று அவரின் நெஞ்சில் கை வைத்து கார்த்திக் சொல்ல.. கடுப்பின் உச்சத்துக்கு சென்று “ஷட் அப்….” என்று கத்தினார்.. அப்போது “அடுத்த தடவ உங்க கிட்ட மோப்பம் பிடிக்குற நாய்ங்க ரெண்டு மூணு இருந்தா கூட்டிட்டு வாங்க சார்.. மஃப்டில இருக்குறவங்களை விட அது உங்களுக்கு அதிகமா உதவி செய்யும் சார்….” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து மெதுவாக இன்ஸ்பெக்டரின் முறைப்புக்கு பயந்து ஓடினான்…. “கய்ங்….கய்ங்….” என்று சதம் குடுத்துக் கொண்டே கார் கதவுகள் திறக்கப்பட்டன.. விரக்தியுடன் உள்ளே ஏறினான் ராகவ்.. நால்வரும் காரில் IOFI அலுவலகத்துக்குள் இருக்கும் வி.ஐ.பி லாஞ் செல்வதற்கு பதிலாக நேரத்தையும், தூரத்தையும் மனதில் கொண்டு அருகில் உள்ள தனது IOFI நிறுவனத்தின் வெளிநாட்டு விருந்தாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஐந்து நட்சதிர ஹோட்டல் வசதிகளைக் கொண்ட கெஸ்ட்ஹவுஸுக்கு சென்றார்கள். ராகவின் கோட்டா படி அவனுக்கு எப்பொழுதும் அவனுடைய சிறப்பு விருந்தாளிகளுக்கு என்று மூன்று அறை ஒதுக்கப் பட்டிருக்கும்… “ஹலோ சார், ஹவ் ஆர் யூ?…. யூ நீட் த கீஸ்?” என்று அந்த இடத்தை கண்காணிக்கும் சீனியர் மேலாளர் ராஜேஷ் ராகவிடம் முகமலர்ந்து சிரித்து கை குலுக்கி வரவேற்றார்.. அப்போது “எஸ்… ப்ளீஸ்…” என்று சொல்லி சாவியைப் பெற்றுக் பெற்றுக்கொண்டான். “டேய் மச்சி…. சாவிய ஸ்டைலா வாங்கிட்டு நீ பாட்டுக்கு போகாதடா…. பசிக்குதுடா…. முதல்ல அதுக்கு வழி பண்ணு” – என்றான் கார்த்திக்.. “ஆங்.. ராஜேஷ்… எங்களுக்கு சாப்பிட… ” என்று ராகவ் கேட்க.. “உங்க ரூமுக்கு அனுப்பிடவா சார்…” – என்றார் ராஜேஷ் “இல்ல இல்ல… புஃப்பே (buffet) இன்னும் இருக்குல்ல?” “ஒஹ் எஸ் இருக்கு….” “அது போதும் நாங்க பார்த்துக்குறோம்….” அவ்வளவாக பசி ஏதும் இன்றி வெறுமென ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான் ராகவ்.. அப்போது அவன் முகத்தில் உள்ள விரக்தியையும் பசி இல்லாமல் ஏதோ அவன் மனதை வாட்டுவதையும் கவனிக்க தவறவில்லை சங்கீதா.. மற்றொரு புறம் கார்த்திக்கும் சஞ்சனாவும் சாப்பிட தயாரானார்கள்…. கார்த்திக் சிட்டி பையன் கிடையாது. அவனுக்கு இந்த மேல்தட்டு பழக்க வழக்கங்கள் பற்றிய அறிவு சற்று கம்மிதான் என்றாலும் புஃப்பே என்றால் தானாகவே தட்டில் எது வேண்டுமோ அதை எடுத்து வைத்து சாப்பிடவேண்டுமென்ற விஷயம் அவனுக்கு தெரியும். வெளி நாட்டு விருந்தாளிகளுக்கு அவர்களின் ருசிக்கு ஏற்ப இந்திய உணவு மற்றும் சைணிஸ் வகை உணவுகளும் அங்கே வைக்கப் பட்டிருந்தன. “சாப்பாட்டுக்கு ஒரு வழி பன்னுடானா என்னை இப்படி பல வகையான சாப்பாடுக்கு மத்தில நிக்க வெச்சிட்டு ஒரு வழி பண்ணிட்டு போய்டானே…. எனிமி..எனிமி….” என்று எண்ணி ராகவை ககடிந்து கொண்டான். அவன் அருகே சஞ்சனா நின்றிருந்தாள். கொஞ்ச நேரம் அவள் எந்த உணவெல்லாம் அவளது தட்டில் எடுத்து வைக்கிறாள் என்று பார்த்து அதை எல்லாம் தானும் அப்படியே எடுத்து வைக்கலாம் என்று எண்ணி அப்படியே அவள் பின்னால் நின்றான். ஆரம்பத்தில் அவள் ஒரு சிறிய கப்பில் லெமன் கோரியாண்டர் சூப் எடுத்தாள். அவனும் அதையே எடுத்தான். கொதிக்க கொதிக்க இருந்த அந்த சூப்பில் ஒரு ஸ்பூன் சிப் செய்து அவள் குடிப்பதை கவனித்தான். இருவரும் ஒரு சிறிய மேஜையில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்தார்கள். உள்ளே இருந்த இன்டீரியர் டிசைன்கள் கண்களை கொள்ளை கொண்டது… மெதுவாக சத்தம் கேட்கும் பியானோ இசை காதுகளுக்கு இதமாக இசைத்துக் கொண்டிருந்தது. மேஜையில் அவனுக்கு எதிரில் சஞ்சனா வந்தமர்ந்தாள். இருவரின் தலைக்கும் மேலே ஒரு சிறிய மஞ்சள் நிற வெளிச்சம் தரும் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. டார்க் பிரவுன் நிற பளபளக்கும் மர மேஜையின் மீது சஞ்சனாவின் கைகள் மிக அழகாக தெரிந்தது. மெல்லிய சில்வர் காப்பு, சிறிதளவும் ரோமம் இல்லாத பளபளப்பான கைகள். காலையில் இருந்து மாலை ஸ்டேஷனில் இருந்து கிளம்பும்வரை அவளின் முகத்தை அவன் பெரியதாய் கவனிக்கவில்லை. சங்கீதா அளவுக்கு உயரமோ நிறமோ அவளிடம் கிடையாது. இருந்தாலும் அவளைப் பார்த்தால் “ஏ ப்ரிட்டி வுமன்” என்று யாருமே சொல்லக் கூடிய தோற்றம் அவளுடையது.

10 Comments

  1. Sir eathu sex story pola thriyala sir eana story onum puriyala please sex part eapo varum tell me

  2. Next post please.

  3. Next post please sir

  4. சூப்பர் கதை

  5. Hello next post varuma varatha. Summa delay panni kadupu ethitu. Story theriuma ella theriyatha. Pls podunga….

  6. Ney la thooku la thoongnum story theeiyala na. Ennum subject ku varave ella.

  7. Next post please

Comments are closed.