ஆகவே scientific ரீதியில் பார்த்தாலும் முதலில் சக்தி இல்லையேல் சிவம் இல்லை. (உலகநாயகனின் வாயால் இதைக் கேட்டதில் பெண்களின் கரகோஷம் சற்று பலமாக உயர்ந்தது.. சங்கீதாவையும் உட்பட.) “Ships are made to sail in the sea not to rest in harbour” என்கிற பழ மொழிக்கு இணையாக IOFI நிறுவனம் ஏற்கனவே பல கண்டங்களில் பயணித்தாலும், இன்னும் ஊடுருவி பல இடங்களுக்கு சென்று பல வெற்றிகள் அடைய வேண்டுமென்று வாழுத்துகிறேன்.. (பேசி முடித்து மேடையை விட்டு இறங்குவதற்குள் சத்தமின்றி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் ராகவ் மேடையின் மீது ஏறி கலைஞானியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.) புல்லரித்து நெகிழ்ந்து நின்றார் Dr.கமல். அப்போது mike பிடித்து மீண்டும் ஒரு விஷயத்தை சொன்னார். “கீழ உட்கார்ந்து இருக்கும்போது இந்த வாலிபர் ஒரு கவிதையை என்னிடம் சொன்னார், அதில் ஒரு தேவதை அடிக்கடி வந்தாள், யாரது என்று கேட்டேன், என் காதலி என்று சொன்னாரே தவிர பெயரை சொல்ல வில்லை. ஆனால் நான் அந்த கவிதையை ரசித்தேன். அதை இங்கே உங்களின் அனைவரின் முன்பாக ராகவ் படிக்க வேண்டுமென்று கேட்டுகொள்கிறேன்… இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இளைஞர்களுக்கும் தமிழ் ஆர்வம் இருக்கிறது என்று காமிக்க இது ஒரு ஆதாரம்.” (ராகவை நோக்கி படியுங்கள் என்று கலைஞானி mike ல் சொல்ல ராகவ் தொடர்ந்தான்…) ராகவ் கடிதம்….( இது ஒரு காதல் கடிதம்..)
“மனதில் பல விதமான உணர்வுகளின் தாளம், கண்களை மூடி நானும் அப்படியே அந்த தாளங்களை ரசித்தேன், எனது மனதுக்குள் உலகில் பிரம்மன் படைத்த ஏராள இயற்கை அழகுகளுடன் சுவையாகவும் அமைதியாகவும் வாக்கு வாதம் நடந்துகொண்டிருந்தது., அவைகளை இங்கே குறிப்பிடுகிறேன். எனது மண ஓட்டத்தில் நான் பேசத் தொடங்கியது முதலில் இமய மலைகள் கூடத்தான்: சத்தங்கள் பலவிதம் என் காதில் வந்து விழுந்தாலும் அவை அனைத்தும் இமய மலையை புகழும் வார்த்தைகளாக வந்து கொண்டிருந்தது. அந்த புகழ்ச்சி சத்தங்களுக்கு மத்தியில் நான் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இமய மலைக்கு ஆச்சர்யம், காரணம் நான் அதன் அழகையும் பிரமிப்பையும் பார்த்து பாவப்பட்டு “நல்ல வேலை அவள் இங்கே வரவில்லை, இல்லையென்றால் நீதான் இந்த உலகில் கம்பீரதுக்கு அடையாளம் என்று எண்ணும் பலகோடி மக்கள் அவர்களுடைய முடிவை மாற்றி இருப்பார்கள்” என்று நான் சொன்னதைக் கேட்டு சற்று முகம் தொங்கியது….. ( அரங்கம் முழுதும் எதிரொலிக்கும் விழா ரசிகர்களின் கரகோஷ சத்தத்துக்கு சில நொடிகள் குடுத்து பிறகு கூட்டத்தை ப் பார்த்து அழுத்தமாக சொன்னான் ராகவ்) ..அந்த இமயத்துக்கு. அடுத்ததாக நான் கண்டது அழகிய இலைகளையும் கனிகளையும் தாங்கி பகல் வெளிச்சத்தில் காட்சி அளிக்கும் மரங்களையும், பூக்களையும் தான், அவைகளை மிகவும் ரசித்து பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான இயற்கை ரசிகர்களுக்கு “தானே இவ்வுலகின் அழகு எண்ணும் எண்ணத்தில் pose குடுத்துக் கொண்டிருக்கும் வானுயர்ந்த மரங்களுக்கும் பூத்து குலுங்கி சிரித்துக் கொண்டிருக்கும் பூக்களுக்கும்” நான் கூறிய சில விஷயங்கள் ஆச்சர்யப் படுத்தின: அவை :- ங்கணம் இயற்கை ரசிகர்கள் அனைவரும் கண்களுக்கு பார்த்தவுடன் மனதை கவரும் விஷயமாக எது பட்டாலும் அதை உடனடியாக மனமுவந்து பாராட்டுவது வழக்கம். நானும் அவர்களில் ஒருவன்தான், ஏனென்றால் அதிகாலையில், எழுந்தவுடன் எங்கள் கண்களுக்கு பச்சைபசெலென்று காட்சி அளித்து, கண்களுக்கு இதமாக குளிர்ச்சி அளிக்கும் உங்களை தான் நானும் இன்றளவு விழிகளுக்கு உற்சாகம் தரும் அழகு என்று நினைத்திருந்தேன். ஆனால் சமீபமாக அது பொய் என்று ஒரு தேவதையின் சிரிப்பை பார்த்தபோது உணர்ந்தேன். கண்களுக்குள் ஊடுருவி மனதுக்குள் சென்று மயக்கும் சக்தி அந்த சிரிப்பில் தெரிந்தது எனக்கு. அதை மனதில் புகைப்படம் எடுத்து வைத்து தினமும் அதிகாலை எழுந்தவுடன் ஒரு நொடி மனதில் ஓட்டி பார்ப்பேன்.