இடை அழகி மேடம் சங்கீதா 8 68

ஒரு முப்பது அடி நீளத்துக்கு அந்த பாதை இருந்தது. இன்னும் சில நொடிகளில் சங்கீதாவின் image ஐ ஆயிரக்கணக்கானவர்களின் மனதில் புரட்டிப் போடும் நேரத்தை தொடுவதற்கு பாதை குறைந்து கொண்டே வந்தன. சஞ்சனா, ரம்யா, நிர்மலா, ஆகிய அனைவரும் சங்கீதாவின் கண்ணத்தில் முத்தம் குடுத்து, “All the best dear, you are going to rock, just perform well dont think about anything…. we will be standing just behind you only…. go go go…. its time..” என்று தோழிகள் சொல்லி முடிக்க அடுத்த பாதத்தை எடுத்து வைத்தாள் சங்கீதா. இப்போது அங்குள்ள ஒரு பணிப்பெண் curtains எடுத்து விட மேடையின் மீது காலடி எடுத்து வைத்தாள் அந்த தேவதை. ஆடிட்டோரியம் அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருந்தனர். காரணம் இந்த awards வழங்கும் விழா வெறும் IOFI பணியாளர்களுக்கு மட்டும் அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக ராகவின் தந்தை Mr.Mahesh Yadhav பலதரப்பட்ட VIP களுடன் வைத்திருந்த நட்பை பாராட்டி அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள். அதில் சில முக்கிய திரையுலக நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் விதம் சில விருதுகளும் வழங்கும் திட்டம் இருந்தது அந்த விழாவில். சங்கீதா mike பிடித்து மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

அப்போது stage மேலே ஒரு focus light ஒன்று வெறும் சங்கீதா நிற்கும் இடத்தை மட்டும் குறி வைத்து வட்டமாக வெளிச்சம் அடிக்க அவள் மாட்டி இருக்கும் அந்த தக தகவென மின்னும் gagra choli பார்பவர்களின் கண்களுக்கு மின்னியது. இப்போது அவள் பேச ஆரம்பிக்கும் தருவாயில் பல நூறு கணக்கில் flash lights camera மூலம் அவளின் முகம் மீது விழுந்தது. ஒரு நொடி முகத்தை நிமிர்த்தி கூட்டத்தை ப் பார்த்தாள் சங்கீதா. பெரும்பாலும் இருட்டாக இருந்தது ஆடிட்டோரியம், மிதமான சிறு வெளிச்சத்தில் அலை கடல் போல அமர்ந்திருக்கும் கூட்டாம் கண்ணுக்கு தெரிந்தது அவளுக்கு. ஒரு நொடி இதயத் துடிப்பு அதிகரித்தது. நிமிர்ந்து பார்தவளின் முகத்துக்கு மேலே இன்னும் இரு மடங்காக paparazzi ( சரமாரியான camera clicking தொல்லை என்று பொருள்) போல camera flash lights விழ என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சில நொடிகள் மெளனமாக நிற்க, பின்னாடி இருந்து சஞ்சனா குரல் குடுத்தாள் “start sangeetha start… dont wait… start start..” என்று கத்த அடித் தொண்டையில் எச்சிலை முழுங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.

Dear Ladies & Gentlemen, (சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதியானது. அதில் வெறும் camera கிளிக் ஆகிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.) இந்த ஆண்டு IOFI Annual awards function க்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிமையான மாலை வணக்கங்கள். என் பெயர் சங்கீதா. (

புதியவள் என்பதால் கரகோஷம் சற்று மெதுவான சத்தத்தில் கேட்டன. கடந்த ஆண்டு compere செய்த நடிகை ஷோபனா, கீழே அமர்ந்திருந்தாள்) சென்ற ஆண்டு விழாக்களைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானவை. காரணம் IOFI fashion நிறுவனம் 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. (கரகோஷம் பலமாக ஒலித்தன..) இன்னும் வெற்றிகரமாக இதன் வேர்களை உலகின் பல இடங்களுக்கு மின்னல் வேகத்தில் பரவியும் வருகின்றன. இந்த நேரத்தில் IOFI நிறுவனம் உருவான கதையை சற்று பின் நோக்கி ப் பார்ப்போம். (சஞ்சனா பின்னாடி இருந்து மெதுவாக அழைத்து, “smile the crowd and continue, dont continuously bend down your head…”) என்று tips சொல்ல.. சுதாரித்துக் கொண்டு அவள் சொன்னது போலவே செய்தாள் சங்கீதா.. (கூட்டத்தைப் பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்…)