இடை அழகி மேடம் சங்கீதா 8 68

எந்த ஒரு உறுதியான மரத்துக்கும் அதன் வேர் தான் காரணம் என்று சொல்வார்கள். அந்த வகையில் IOFI என்கிற மரத்துக்கு விதை போட்ட மாமனிதர் Mr.Mahesh Yadhav வை நாம் யாரும் மறக்க முடியாது. முற்றிலும் உழைப்பால் உயர்ந்தவர். தற்போதிய CEO Mr.Raghav Yadhav னுடைய தந்தைதான் இவர். (இப்போது, கூட்டாம் முழுவதும் சங்கீதா பேசுவதைக் கேட்பதற்காக நல்ல அமைதி நிலவியது..)

Mr.Mahesh Yadhav ஒரு திறமையான வியாபாரி. ஆரம்ப கட்டத்தில் வெறும் தையல் வேலை பார்த்தவர், நாடகங்களில் நடிப்பவர்களுக்கு துணிகளை தைக்க ஆரம்பித்து, பின் low budget படங்களுக்கு costume designer ஆக பணியாற்றி, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 2000 மாவது வருடத்தில் இருந்து ஹிந்தியிலும் கால் பதித்து, இன்று அகில இந்தியா முழுவதும் பிரபலமாகி ஒரு நிறுவனத்தை மாபெரும் வெற்றிக்கு கொண்டு சென்றார். இவர் ஆரம்பித்த இந்த IOFI நிறுவனம் இன்று உலகில் எங்கெல்லாம் அதி நவீன கலை நிகழ்ச்சிகள், costume designing, நடக்கிறதோ அங்கு மட்டும் இல்லாமல், Industries, corporates, மற்றும் அதிக பொருட்செலவில் எடுக்கப் படும் இந்திய த் திரைப்படங்களும் உட்பட பல இடங்களில் எங்கெல்லாம் fashion எண்ணும் வார்த்தைக்கு இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் தனது கால்களைப் பதித்து இருக்கிறார். இந்த நிறுவனத்தின் செயலாளராக இருந்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இந்த நிறுவனத்தை தலைமை தாங்குவது Mr.Raghav, அவருடைய தவப் புதல்வன். புலிக்கு பிறந்தது பூனை ஆகாது என்பது போல தன் தந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் வருமானத்தை சேகரித்ததைக் காட்டிலும் அதைவிட 80% நிறுவனத்தின் லாபத்தை இவர் அதிகரித்துள்ளார். (கரகோஷம் பலமாக ஒலித்தன. அப்போது சங்கீதா மென்மையாக கூட்டத்தைப் பார்த்து சிரித்து கை தட்டல்கள் அடங்க சில நொடிகள் குடுத்து மீண்டும் ஆரம்பித்தாள்.) “பல முறை என்னையே முந்திவிட்டான் எனது தவப்புதல்வன்” என்று பெருமைப் பட்டு மார்தட்டிக் கொள்ளும் தந்தையை நாம் இங்கே நம் கண் முன் காணலாம். – என்று சங்கீதா பேசி முடிக்க camera Mr.Mahesh Yadhav மீது பாய, stage ல் உள்ள ஒரு பெரிய screen மீது projector உதவியால் அவருடைய முகம் திரையில் தெரிய அனைவரும் அதிக சத்தம் கேட்கும் வண்ணம் பலமாக கை தட்டினார்கள்

இப்போது அவர் மேடையில் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்வர் என்று அழைப்பு விடுத்ததும்… (கை தட்டல்கள்.) Mr.Mahesh Yadhav பேசத் தொடங்கினார்…. விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரே ஒரு வரியை சொல்லிக்கொள்கிறேன். 25 ஆண்டுகளுக்கு முன் IOFI, Mahesh என்கிற ஒரு ஏழையை மட்டும் கொண்டு வாழ்ந்தது, இப்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேருக்கும் மேல் France, Germany, London, USA, Italy, India, Australia ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. நான் அதிகம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை, மற்றவர்களின் programs நடக்கட்டும். மீண்டும் ஒரு முறை இந்த IOFI சிகரத்தை எட்டுவதற்கு உலகம் முழுதும் இருந்து எனக்கு உதவி வரும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் பல ஜாம்பவான் நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.