இடை அழகி மேடம் சங்கீதா 8 68

I pray god that Mr. Yadhav family & his great son Raghav have a successful life and wishing them many more success ahead in future endeavours with IOFI. – என்று சிக்கனமாக பேசி முடித்து மேடையை விட்டு கம்பீரமாக இறங்கினார் BigB. Much Thanks Big B, you are an inspiration for many.. – என்றாள் சங்கீதா. ரசிகர்களே, இப்போது நாம் கௌரவிக்க இருக்கும் மனிதரை எப்படி பாராட்ட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. தமிழில் பாராட்டும் வார்த்தைகள் பத்தாது. பிறந்ததிலிருந்தே சினிமாவுக்கு தன்னை தாரை வார்த்து குடுத்த ஞானி இவர். என்று சொன்னவுடன் கூட்டத்தில் யாரென்று யூகிக்க முடிந்து அரங்கம் அதிரும் வண்ணம் கை தட்டினார்கள். இது வரை இருந்தவர்களுக்கு எழுப்பிய சத்தம் பத்து மடங்காக திமிறிக்கொண்டு அரங்கம் முழுதும் கை தட்டல்கள் ஒலித்தன. -சந்கீதாவால் பேச முடியவில்லை. இருப்பினும் கொஞ்சம் பொருத்து மீண்டும் ஆரம்பித்தாள். இவருடைய தைரியத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு இந்த காட்சி. ( Click to view) இன்றைக்கு இருக்கும் commercial நாயகர்கள் யாருக்கும் இந்த காட்சியில் நடிக்க துணிச்சல் வேண்டும். இப்படிப்பட்ட காட்சியில் நடித்துவிட்டு அதுத்த படத்திலேயே commercial hit குடுக்கும் mass நாயகன்தான் நம்முடைய பொக்கிஷமான உலக நாயகன்…. (மீண்டும் சந்கீதாவால் பேச முடியாத வண்ணம் கைத் தட்டல்கள் ஒலித்தன இருப்பினும் அந்த சத்தத்துடன் சேர்த்து mike ல் கத்தி ஒரு முறை அந்த கலைத் தாயின் தவப் புதல்வனின் பெயரை சொல்லி விட்டாள்).. Padmashree Dr. கமல்ஹாசன் அவர்கள். (கமல் அருகே அமர்ந்திருந்த நண்பர் Super Star ரஜினி, கமலைக் கட்டி அணைத்து நட்பை பகிர்ந்து கொண்டார்.)(அரங்கம் அதிர்ந்து முடிய சற்று அவகாசம் குடுத்து விட்டு மீண்டும் பேசினாள் சங்கீதா.) நாடே போற்றும் இந்த மாமனிதனின் சிறிய குறும்படம் ஒன்றை பார்ப்போம்.

திரையில் biography வீடியோ முடிந்ததும், பல நிழல் நாயகர்களுக்கு மத்தியில் இருக்கும் நமது நிஜ நாயகன் எழுந்து மேடைக்கு வந்தார். மீசை இல்லாத மொழு மொழு முகத்துடன் அதே pushpak படத்தில் பார்த்த smart டான தோற்றத்துடன். தனது IOFI cine Legend award டினை BigB யிடம் இருந்து பெற்றார் கலைஞானி. மெதுவாக பேச ஆரம்பித்தார் Dr.கலைஞானி: விழாவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். (கரகோஷம் ஆடிட்டோரியம் கூரையை பிளந்தது.) அவை அடக்கம் காத்து விழாவை நன்கு இயங்க செய்து கொண்டிருக்கும் சகோதரி சங்கீதாவுக்கு எனது பாராட்டுகள். (சங்கீதாவின் சந்தோஷம் உச்சத்துக்கு போனது). என்னைப் பொருத்த வரையில் இது எனக்கு ஒரு குடும்ப விழா. நானும் Mahesh Yadhav வும் நீண்ட நாள் நண்பர்கள். யாரிடமும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் மனிதர் அவர். ஒரு முறை எனது heyram படத்தைப் பார்த்து விட்டு என்னிடம் “sir, என்னை தப்பா நினைச்சிகாதீங்க, இந்த படத்தோட costumes விடவும் நாயகன் படத்துல உங்க costume ரொம்ப நல்லா இருந்துச்சி.. அது என்னமோ தெரியலை sir மனசுல பட்டுச்சி, பட்டுன்னு சொல்லிட்டேன்” னு சொன்னார். நல்ல வெகுளி மனிதர். ( சில நொடிகள் தாமதித்து மீண்டும் விழாவைப் பற்றி பேச தொடங்கினார் கமல்.) இந்த விழாவில் ஆரம்பமாக ஒரு தாயின் பாடலைப் பாடினார் பாடகர் உண்ணி கிருஷ்ணன்.

அது எனது நெஞ்சைத் தொட்டது. அது மட்டும் இல்லாமல் நண்பர் Aamir சொன்னது போல மிக வித்யாசமாக compere பண்ணிய புது முக பெண்ணை வைத்து நடனத்தையும் இயக்கி காமித்து விழாவுக்கு ஒரு புது இலக்கணம் படைத்து விட்டார் இளைஞர் ராகவ். IOFI நிறுவனம் சினிமாவில்தான் எங்களுக்கு உடை அலங்காரம் எல்லாம் செய்ய உதவி வருகிறார்கள். நிஜத்தில் அவர்கள் focus செய்வது பெண்களுக்குத் தான். அதில் எனக்கு மகிழ்ச்சியும் உண்டு. பெண்ணின் இனம் உலகில் முதலில் தோன்றியவை. அதைப்பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்வது ஆண்களின் அறிவுக்கு நல்லது என்று நினைக்கிறேன். ( இதற்கும் கரகோஷம் ஒலித்தது..) உலகில் முதலில் தோன்றியது ஆதாம் அல்ல ஏவாள், அதுவும் வெண்மையான தோள் கொண்ட அழகிய பெண் அல்ல, ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றிய கருப்பு மிருகம் தான். “ஹோமொசேபியன்” என்ற வகையை சார்ந்த நாம் அனைவரும் முதலில் தோன்றியது ஆப்பிரிக்க நாட்டின் நடுப்பகுதியில்தான். இன்றைக்கும் கோடிக்கணக்கில் இருக்கும் மனித உயிரினங்களுக்கெல்லாம் அஸ்திவாரம் போட்ட இடம் ஆப்பிரிக்கா!!!… எந்த ஜாதி மதமும் இல்லாமல் சடை முடியுடன் உடல் முழுதும் கரடியைப் போல முடிகளை வளர்த்து வளாத்திக் கொண்டிருந்த அந்த மிருகம் தான் முதல் ஆதி மனிதன், அதுவும் அது ஒரு பெண்!! அதற்க்கு வரலாற்றில் சான்றுகள் இருக்கிறது. சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண் ஆப்பிரிக்க தென் பகுதியில் ஒரு மலைச் சரிவில் நடந்து இருப்பாள் போல தெரிகிறது, கடலோரமாக ஏதோ இறந்த மாமிசம் உண்பதற்காக சென்றிருக்கலாம், அப்போது அற்புதமான ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது, அந்தப் பெண் அவளுடைய காலடிச் சுவடுகளை மண்ணில் விட்டுச் சென்றிருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த காலடிசுவடுகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட சந்திரனில் neil armstrong வைத்த காலடி சுவடுகளுக்கு இணையானது அல்லவா இது?!!! அப்போதுதான் நம்மைப் போலவே கைகளை வீசி சாவகாசமாக நடந்து சென்ற அந்த பெண்ணிடம் ஒரு விசேஷ ஜீன் இருப்பது தெரிய வந்துள்ளது, அது “மீட்டோ கான்ட்ரியல்” DNA என்கிற ஜீன். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் உருவாக அடிப்படைக் காரணமாக ஆதார சக்தி அந்த ஜீன் தான் என்று விஞ்ஞானிகள் பிற்பாடு தெரிவித்தார்கள்.