யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 254

“கலக்கலா இருக்கு. செம ஃபிட். மொத நாளே எவனெவன் பிளாட்டாகறானனு தெரியல”
கண்கள் சுருங்கச் சிரித்து மூக்கை வருடிக் கொண்டாள்.
“சரி நான் போறேன்”
“காட் ப்ளஸ் யூ”
“தேங்க் யூ” உதடுகளை வாய்க்குள் இழுத்து எச்சில் விழுங்கும் மெல்லிய ஓசையெழுப்பி வெளியே விட்டாள்.
“லிப்ஸ்டிக் போட்டியா?” அவள் உதடுகளின் மீது பார்வையை ஊன்றிக் கேட்டான் நிருதி.
“லைட்ட்ட்ட்டா” புன்னகைத்து “ஓவரா தெரியுதா?” என்று உதடுகளை நீவினாள்.
“இல்ல.. இப்படித்தான் இருக்கணும். செம்ம க்யூட்”
“ஓகே, நான் நைட் சொல்றேன் காலேஜ் எப்படினு”
“நைட் நான் வரப்ப நீ தூங்கிருவ”
“லேட்டாகுமா?”
“எப்படியும் ஒம்பதுக்கு மேலாகிரும்”
“ஆமா சரி” தலையாட்டினாள் “வாட்சப்ல சொல்றேன்”
“ஓகே” அவள் கன்னத்தில் கிள்ளினான் “ஃபீல் ப்ரீ. கிளாஸ நல்லா என்ஜாய் பண்ணு”
“பர்ஸ்ட் டே.. செமையா இருக்கும்” அவள் கன்னத்தை கிள்ளி எடுத்து வாயில் வைத்து முத்தமிட்டான்.
“அழகு பொண்ணு”
குளிர்ந்தாள். “செம ஃபீல்”
“என்னது?” அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
“இல்ல.. உங்கள பாத்தா ரொம்ப எக்ஸைட்டாகறேன்”
“ஏன்? ”
“தெரியலியே..” அவன் கண் பார்த்து சிரித்து விட்டு முகத்தை ஒரு பக்கம் திருப்பி கன்னத்தைக் காட்டினாள்.
“என்ன? ”
“கிஸ் குடுங்க”
“ஏய்..” சிலிர்த்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
“ஓகே பை..” லேசான படபடப்புடன் சொல்லிவிட்டு சட்டெனத் திரும்பி ஓடினாள் அகல்யா.. !!

அகல்யாவின் கல்லூரி நாட்கள் சிறப்பாகவே தொடங்கியது. கல்லூரி அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது. மெல்ல மெல்ல அதில் ஒன்றி சில மாதங்களிலேயே பிசியாகி விட்டாள். அதனால் நிருதியை அவள் பார்ப்பதே அரிதாகிக் கொண்டிருந்தது. விடுமுறை நாட்களில் மட்டுமே அவனைப் பார்த்து பேசினாள். அதில் கூட பழைய நெருக்கம் இருக்கவில்லை. பெரும்பாலும் விடுமுறை நாட்களில் அவன் வீட்டிலும் ஆட்கள் இருப்பதால் சாதாரணமாக சிரித்து பேச மட்டுமே முடிந்தது. அவளின் காதலைப் பற்றியோ காதலனைப் பற்றியோ வட்சப்பில் மட்டும் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தனர்.. !!
சில நேரங்களில் தோழிகளுடன் சேர்ந்து குரூப் போட்டோவாக செல்பி எடுத்து அனுப்புவாள். பெண்கள் அத்தனை பேரிலும் அவள் மட்டும் அழகாய் தனித்து தெரிவதை அவன் குறிப்பிட்டுச் சொல்வது அவளை உவகை கொள்ளச் செய்யும். அவள் விரும்பியதையும் அதைத்தான். அவனிடம் இருந்த நெருக்கம் குறைந்திருந்தாலும் அவனின் அன்பில் தான் இருக்க வேண்டும் என்கிற உள்ளத் தவிப்பில் இருந்து அவளால் மீள முடியவில்லை.
‘நான் இருக்கிறேன்’ என்பதை அவ்வப்போது தனது செல்பி படங்கள் மூலமாக அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள்.
அவளது தோழிகளில் அவளே அழகி என்பதை அவளே பெருமிதாமகச் சொல்வாள். அதே சமயம் அவளின் காதலன் வெளியூர் ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருந்ததால் அவனை அதிகம் பார்க்காமலிருந்தாள். அவர்கள் இருவரும் போனில் பேசி வாட்ஸப்பில் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டிருந்தனர். படிப்பைப் பொறுத்தவரை அவள் எந்த குறையும் வைக்கவில்லை. மிக நன்றாகவே படித்துக் கொண்டிருந்தாள்.. !!
கல்லூரியின் முதல் வருடம் மிக எளிதாக இறுதியைத் தொட்டது. அவள் கல்லூரி சென்று ஒரு வருடம ஆகிவிட்டது என்பதே அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. சில நாட்களிலேயே ஒரு வருடம் முடிந்து விட்டதாக அவளுக்குள் ஒரு எண்ண பிரமையாக எழுந்தது. ஒரு சில மாதங்களில் ஒரு வருடமே முடிந்து விட்டதைப் போல வியப்பாக உணர்ந்தாள்.. !!
முதலாமாண்டு இறுதி தேர்வு எழுதி விடுமுறை விட்டபின்தான் அவள் மீண்டும் நிருதியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினாள். விடுமுறை என்பதால் அவளுக்கு வீட்டில் இருப்பது மிகவும் போரடிக்கத் தொடங்கியது. இந்த முறை அவள் ஊர்களுக்கு எங்கும் செல்லவில்லை. அம்மாவுக்கு உதவியாக சின்ன சின்ன வீட்டு வேலைகள் செய்து கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டாள். ஒரு வருட இடைவெளிக்குப் பின் அவர்களின் பழைய நாட்கள் மீண்டும் திரும்பி வந்ததைப் போலிருந்தது. ஆனால் இந்த முறை அவர்களுக்குள் இன்னும் சற்று நெருக்கம் கூடியது. அந்த நெருக்கத்தை அவளேதான் விரும்பி ஏற்படுத்திக் கொண்டாள்.. !!
இந்த விடுமுறை நாட்களில் அவள் காலையிலேயே ஒருமுறை நிருதியின் வீட்டுக்கு போய் விடுவாள். அவன் மனைவி கிளம்பிச் செல்லும்வரை அங்கிருப்பாள். பின்னர் மதியமும் மாலையும் இயல்பாக போய்வரத் தொடங்கினாள். அவளின் நாட்கள் பெரும்பாலும் அவன் வீட்டிலேயே கழியத் தொடங்கியது. மற்றவர்களின் பார்வையில் அது எந்த உறுத்தலையும் ஏற்படுத்தாத அளவுக்கு இயல்பான ஒன்றாக அமைந்தது. பலர் அவர்களை உறவினர்கள் என்றே நினைத்தனர். அதை மற்றவர் பார்வைக்கு உண்மையாக்கியது அவர்கள் இருவரும் ஒரே ஜாதி என்பதுதான். அவளால் அவளின் அம்மாவும் அடிக்கடி நிருதியின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். அது ஊராரை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லாமலாக்கியது. கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு பள்ளிகள் நடந்து கொண்டிருந்தன.. !!
அன்றைய மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றான் நிருதி. அவன் பைக்கை நிறுத்தி இறங்கி வீட்டைத் திறந்து உள்ளே சென்றான். அவன் உடை மாற்றி முகம் கழுவி சாப்பிட உட்காரும் முன் அகல்யா தன் வீட்டில் இருந்து ஆர்வமாக ஓடி வந்தாள். இறுக்கமான ஒரு மெரூன் கலர் சுடிதார் அணிந்திருந்தாள். தலைவாரி ஜடை பின்னி பூ வைத்து அழகாய் மேக்கப் செய்திருந்தாள். காதில், கழுத்தில், கையில் எல்லாம் அவன் வாங்கிக் கொடுத்த பேன்ஸி ஐட்டங்கள், இதழ் சுழித்த பற்கள் மின்னும் அவள் புன்னகையுடன் சேர்ந்து அவைகளும் அழகாய் மிளிர்ந்தன. அவள் முகம் துளியும் சோர்வின்றி மலர்ச்சியுடனிருந்தது. உள்ளே வந்த அவள் கையில் பெரிய சாக்லெட் இருந்தது.
“ஹாய் வா. என்ன கலக்கற போல?” அவளைப் பார்த்து சற்று நெகிழ்ந்து சிரித்தான்.
“ஆமா” சிரித்தாள் “என் பிரெண்டு வீட்டுக்கு போயிட்டு வந்தேன். அவளுக்கு பர்த் டே”
“அதுக்கு இத்தனை கலக்கல் மேக்கப்பா?”
“மேக்கப் ஓவரா?”
“அப்படித்தான் தெரியுது” என்று சிரித்தபடி சொன்னான்.
“ஏ.. இல்ல ” என்றபடி போய் கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தாள். அப்படி ஒன்றும் ஓவர் அலங்காரமாகத் தெரியவில்லை. துப்பட்டாவில் முகம் துடைத்து வந்தாள். “நல்லால்லியா?”
“நல்லாருக்கு” சிரித்தான் “என்கிட்ட நீ இப்படி ஒரு கேள்வியே கேக்க கூடாது”
“தெரியும்” பற்கள் மின்னச் சிரித்தாள் “உங்களுக்கு நான் ரொம்ப அழகி”
“அதே” என்றான்.
“லைக் யூ”
“நானும் லைக் யூ”
இருவரின் முகங்களும் கனிந்த புன்னகைகளில் கவர்ச்சியாகின.
“பர்த் டேல பசங்கள்ளாம் ட்ரீட் வெச்சாங்க எங்களுக்கு” என்றாள்.
“பசங்களா?”
“ம்ம். எல்லாம் பிரெண்ட்ஸ்தான அதான்”
“ஹோ சூப்பர். அப்ப இன்னிக்கு ஒரே ஜாலிதான்”
“செம ஜாலி” பேசிக்கொண்டே சாக்லெட் கவரை கொஞ்சமாகப் பிரித்து எடுத்து அவனுக்கு நீட்டினாள்.
“என்னது?”
“சாக்லேட். சாப்பிடுங்க”
“நான் சாப்பாடு சாப்பிட போறேன். நீ சாப்பிடு”
“கொஞ்சம் சாப்பிடுங்க”
“பரவால நீ சாப்பிடு”
“ஏன் நான் குடுத்தா சாப்பிட மாட்டிங்களா?” கண் சுருக்கிக் கேட்டாள்.
“யேய்.. என்ன கேள்வி இது அகல்?”
அவளே ஒரு துண்டு பிய்த்து அவன் வாயருகே கொண்டு வந்தாள்.
“சாப்பிடுங்க”
வாயைத் திறந்து ஆ காட்டினான். அவன் வாயில் திணித்தாள். வயை மூடி மெல்லச் சுவைத்தான்.
“உன் லவ்வர் பாத்தான் செத்தான்”