யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 254

“ஓஓ..”

சிரித்து “ஐ லைக் யூ”

“மறுபடியும் லைக் யூ வா?”

“யெஸ்.. எவர் எவர் ஐ லைக் யூ” என்று கன்னம் குளிரச் சிரித்தாள்.

மெல்ல அவள் கன்னத்தில் தட்டினான். “சாப்பிட்டியா?”

”இல்ல. சாப்பிட்டா தூக்கம் வந்துரும். அப்பறம் எக்ஸாம் எழுத முடியாது.”

”நல்லா எழுது”

”ஓகே. நான் போறேன் பை”

”ம்ம்.. பை ”

”மத்தியானம் மீட் பண்ணலாம் ஓகேவா?” என்றாள்.

“ஓகே க்யூட்டி” எனச் சிரித்தான்.

தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பதைப் போல மீண்டும் தலையைத் திருப்பி பூவைக் காட்டிவிட்டு சிரித்தபடி டாடா காட்டி ஓடினாள்.. !!

அன்று மதியம் அவளுக்கு ஸ்நாக்சுடன் கொஞ்சம் பேன்ஸி ஐட்டங்களும் வாங்கிப் போனான் நிருதி. அவளுக்காக தேர்ந்தெடுத்து வாங்கியிருந்தான். அவன் போனபோது அவள் வீடு பூட்டியிருந்தது. அவன் உடை மாற்றி முகம் கழுவி சாப்பிடத் தயாரானபோது வந்தாள் அகல்யா. பள்ளி உடையிலேயே இருந்தாள். அவள் முகம் பிரகாசமாயிருந்தது. ஆனால் தலைமுடி கலைந்து உடை முழுவதுமாக பேனா மையாக இருந்தது. கையிலும் முகத்திலும் கழுத்திலும் ஜிகினாத்தூள் மினுக்கியது.

“ஹாய்..” என்று அவன் முன் போய் நின்று ஈறுகளில் படிந்த உமிழ்நீர் மின்னச் சிரித்தாள்.

“ஹாய்.. என்ன இது கோலம்?” விழிகள் விரித்துக் கேட்டான்.

“சொன்னேன்ல? இன்னிக்கு லாஸ்ட் டேனு.. அதான்” உடலை முன்னும் பின்னும் திருப்பித் திருப்பிக் காட்டினாள். அவள் முகம் தவிர மற்ற பகுதிகள் அனைத்திலும் பேனா மையாகவே இருந்தது. “இந்த ட்ரஸ்ஸ தொவைக்க மாட்டேன்” என்றாள்.

“ஏன்?”

“இதெல்லாம் பிரெண்ட்ஸோட மெமரீஸ்”

“சூப்பர்”

“எனக்கொரு ஹெல்ப் பண்ணனும் நீங்க?”

“என்னது?”

“என்னை போட்டோ எடுங்க. இதை நான் அவனுக்கு அனுப்பனும்”

“அட…”

“ப்ளீஸ்.. அவன் பாக்கணும்னு கேட்டான்”

“சரி”

அவளே போனை எடுத்து லாக் எடுத்து கேமராவை ஆன் பண்ணி அவனிடம் கொடுத்தாள். “நெறைய எடுங்க. எது நல்லாருக்குனு பாத்து நான் அனுப்பிக்கறேன்” என்று உடையை நன்றாக அமைத்து அலட்டல் இல்லாமல் போஸ் கொடுத்து நின்றாள். உள்ளே வியந்தபடி அவளை முன்னும் பின்னுமாக க்ளிக் பண்ணி போனை அவளிடமே கொடுத்தான். அவள் அதைப் பார்த்து சிலதை மட்டும் தேர்வு செய்து தன் காதலனுக்கு அனுப்பினாள். உடனே போன் செய்தும் பேசினாள். ஒரு நிமிடத்துக்குள்ளாகவே பேசிவிட்டு காலை பண்ணி விட்டாள்.

“என்னாச்சு பேசலியா?” நிருதி கேட்டான்.

“கீர்த்தி போன்லருந்து பேசிட்டேன். போட்டோதான் அனுப்பல”

“அதுலயே அனுப்பிருக்கலாமில்ல?”