யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 248

“நாளைக்கு லாஸ்ட் டே. எல்லாரும் கலக்குவாங்க”

“நீயும் கலக்கு”

“முக்கியமா பூதான் வேணும். அம்மா நைட்தான் காசு தருவாங்க. காலைல போய்தான் வாங்கி வெக்கணும். வீட்லருந்தே வெச்சிட்டு போனாதான் கலக்கலா இருக்கும். இங்கனா நாமளே பாத்து பாத்து வெக்கலாம். அங்க போனா பிரெண்ட்ஸ்கிட்ட கேக்கணும்” உள்ளெழும் இயலாமை உணர்வு அவள் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

“பூ வேணுமா?”

“நீங்க நைட் வாங்கிட்டு வந்து தரீங்களா? அம்மாகிட்ட காசு வாங்கி தரேன்”

சிரித்து விட்டான் “காசெல்லாம் வேண்டாம். என்னென்ன வேணும் எவ்வளவு வேணும்னு சொல்லு?” என்றான்.

“இல்ல காசு வாங்கிக்கோங்க”

“சரி.. உன் விருப்பம்”

“எனக்கு மல்லி பூதான் ரொம்ப புடிக்கும்”

“அப்றம்?”

“ஆமா.. அந்தக்காகிட்ட சொல்லுவீங்களா?”

“ஏன்?”

“சொல்ல வேண்டாம்”

“அட.. இதுல என்ன இருக்கு..”

“சும்மாருங்க. அந்தக்கா ஒரு மாதிரி.. திட்டிரும்”

“அப்படியா?”

“உங்களுக்கே தெரியும்” சிரித்து “நைட் வருவீங்கள்ள அப்ப நான் முன்னால நின்னு வாங்கிக்கிறேன்”

“உங்கம்மா கேக்காதா?”

“அது பிரச்சனையே இல்ல. நான்தான் வாங்கிட்டு வரச் சொன்னேன் காசு குடுனு வாங்கி வெச்சிர்றேன். எனக்கு இந்தக்காகிட்டத்தான் பயம்..”

“ஏய்.. அவ அவ்வளவு மோசமானவ இல்ல அகல்”

“நான் மோசம்னு சொல்லல.. நீங்க சொன்னீங்கள்ள அந்த மாதிரி ஜெலஸ்”

“ஜெலஸா.. நான் எப்ப சொன்னேன்?”

“சொன்னீங்க. ஹரி மேல ஜெலஸ்னு”

“ஓஓ..”

“ஏன்?”

“என்ன ஏன்?”

“உங்களுக்கு என்னை அவ்ளோ புடிச்சிருக்கா?”

“என்ன அகல் இப்படி கேட்டுட்ட?”

“சரி.. உங்களுக்கு ஏன் அவன்மேல ஜெலஸ்?”

“அதுக்கும் சொல்லியிருப்பேனே?”

“அவன் என்னை கிஸ் பண்றான்னா?”