யே நீ எந்த காலத்துல இருக்க? Part 1 254

அவள் பார்சல்களை எடுத்து பிரித்துப் பார்த்து உள்ளம் பூரித்தாள். அவள் நேற்று பட்டியலிட்டவைகளில் நான்கைந்து ஐட்டங்கள் இருந்தன. அதன் இன்சுவை மணமே அவள் வயிற்றில் பசியைத் தூண்டி விட்டது. அவைகளை அப்படியே எடுத்துக் கொண்டு கிச்சன் போனாள். அறை வாயிலில் நின்று அவன் முதுகைப் பார்த்துக் கேட்டாள்.

“எனக்கா வாங்கினீங்க?”

“உனக்குத்தான்” திரும்பிப் பார்த்து சிரித்தபடி சொன்னான்.

“இவ்ளோ வாங்கீருக்கீங்க?”

“இதுவே கம்மினு நெனச்சேன். நாளைக்கு மத்த ஐட்டங்கள்”

“ஐயோ.. இதுவே ஜாஸ்தி”

“பரவால. வீட்ல கொண்டு போய் வெச்சு சாப்பிடு”

அவளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது.
“தேங்ங்ங்க்க்க்க் யூ ஸோ மச்” என்று அழுத்திச் சொன்னாள்.

“ஏய் இதுக்கு ஏன் இவ்ளோ எக்சைட்டாகிக்கற? ரிலாக்ஸா சாப்பிடு” எனச் சிரித்தபடி சொன்னான்.

அவள் அங்கேயே நின்றாள். அவன் தட்டில் உணவைப் போட்டு எடுத்து வர அவள் திரும்பிச் சென்று சோபாவில் உட்கார்ந்தாள். அவனும் வந்து உட்கார்ந்தான். அவள் கொஞ்சம் எடுத்து முதலில் அவனுக்கு கொடுத்தாள்.

“ஏய் நீ சாப்பிடு”

“சாப்பிடறேன். மொதல்ல நீங்க சாப்பிடுங்க” என்று மிகக் கிடடத்தில் கொண்டு வந்தாள்.

அவன் வாங்கிச் சாப்பிட்டான் “நீ சாப்பிடு”

அகல்யா உற்சாகமாகி விட்டாள். ஒவ்வொரு ஐட்டத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக சுவை பார்த்து சிலாகித்தாள். மீண்டும் போன் வந்தபோதுதான் அவளுக்கு ஹரியின் நினைவே வந்தது. சாப்பிட்டபடியே எடுத்து பேசினாள்.

“நான் என்ன சாப்பிடறேன் தெரியுமா?” என்று தன் காதலனைச் சீண்டி ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினாள். அதன் சுவை மணம் எல்லாம் சொன்னாள்.

நிருதி சிரித்தபடி அவளைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். அவள் கொஞ்சலை, கிண்டலை எல்லாம் ரசித்தான். அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவி வந்து அமர்ந்தான். அவள் பை சொல்லி போனை வைத்தாள். “அவனுக்கு வயிறு எரியுதுங்கறான்” என்று சிரித்தாள்.

“இதையெல்லாமா அவன்கிட்ட சொல்லுவ?” எனக் கேட்டான்.

“அவன் இதுக்கு மேல எல்லாம் சொல்லி என்னை கடுப்பேத்துவான். அவன் சாப்பிடற எல்லாம் வாட்ஸப்ல போட்டா எடுத்து அனுப்பி என்னை மசக் கடுப்பாக்குவான் தெரியுமா உங்களுக்கு?”

அவள் பாதி பாதிதான் சாப்பிட்டாள். மீதமானவைகளை மீண்டும் பேக் பண்ணி வைத்தாள். எழுந்து கிச்சன் போய் கை கழுவி தண்ணீர் குடித்து வந்தாள். “இதுக்கே வயிறு புல்லாகிருச்சு” என்று வயிற்றைத் தொட்டுச் சொன்னாள்.

“இதுக்கேவா?”

“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். நான் நெனச்சே பாக்கல. நீங்க இப்படி வாங்கிட்டு வருவீங்கனு”

“இதுலென்ன இருக்கு?”

உட்கார்ந்தாள். “நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம். அது ஒண்ணு எழுதினா முடிஞ்சிது”

“நல்லா எழுதுவேல்ல?”

“செமையா எழுதுவேன்”

“குட்”