மல்லி மாற்றான் தோட்டத்து மல்லிகா – Part 3 81

உண்மையில் தமிழ் ஒரு ஜென்டில் மேன் ! என்னை நல்லபடியா வீட்டில் சேர்த்து
விட்டு சென்றவர் தான் அதன்பிறகு அந்த நட்பை தொடர கூட அவர் வரலை ….

ஆனா இதே தமிழ்தான் கடைசில … சரி விடுங்க அதை கடைசில பாக்கலாம் !!!

முதல் நாள் வேலைக்கு போக …. அங்கு கதிர் என்னை எனக்காக ஒதுக்கப்பட்ட
சீட்டை காட்டி உக்கார சொல்ல ….

அது கதிருக்கு வலது பக்கம் இருந்தது …. நோட் பண்ணிக்கங்க வலது பக்கம் !!!

அந்த கதிரை பத்தி உங்களுக்கு அறிமுக்கப்படுத்தனுமா ???

கதிர் இந்த கம்பெனி ஓனர் ஷாமின் பள்ளி கால நெருங்கிய நண்பன் ! அதனால
அவருக்கு இங்க ரொம்ப செல்வாக்கு ஜாஸ்தி … ஆமாம் பெரிய ரிசர்வ் பேங்கு
வேலை இதுல இவனுக்கு செல்வாக்கு வேரையா ?

என்னங்க பண்றது ரிசர்வ் பேங்கல வேலை செஞ்சவன் பொண்டாட்டியே ரெண்டு பேரோட
சுத்துற காலம் இது … ஞாபகம் இருக்கா நம்ம லிப்ட் வைதேகி…

சரி ஓகே என்னோட வேலைய பத்தி சொல்லனும்னா …

ஒன்னும் பெருசா வேலை கிடையாது … இது ஒரு பிரைவேட் பைனான்ஸ் கம்பெனி !

எவனாச்சும் எதுனா பணம் வாங்க வருவான் நகை வீட்டு பத்திரம் அப்புறம்
சீட்டு பணம் கட்டுறது … இவளோதான் பிசினஸ் !

சிம்பிளா சொல்லனும்னு அடகுகடைக்கு மேல பைனான்ஸ் கம்பெனிக்கு கீழ சீட்டு
கம்பெனிக்கு உள்ள …

இந்த பில்டிங் மொத்தமும் அவங்களுது தான் ! மத்தபடி பெரிய இடத்துல
நடக்குற ஒரு சின்ன பிசினஸ் தான் இது …

ஓகே முதல் நாள் வேலை ….

நான் கதிரின் வலது பக்கம் அவர் அருகில் உக்கார்ந்திருக்க …. உள்ளே
ஷாம் இருக்க ….
ஆரம்பம் ஆனது என் திருமணத்திற்கு பிந்தைய வேலைக்கு போகும் வாழ்க்கை !!!

அன்று வேலை ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் … ஷாம் என்னை உள்ளே அழைக்க ….

எஸ் சார் !

உக்காருங்க …

தாங்க்ஸ் சார் !

நீங்க எந்த ஊரு ?

பொள்ளாச்சி சார் !

பொள்ளாச்சிலேர்ந்தா வரீங்க ?

இல்லை என் சொந்த ஊர் பொள்ளாச்சி இப்ப இங்க என் ஹஸ்பெண்ட் கூட

தனிக்குடித்தனம் காந்தி நகர்ல இருக்கேன் !

ஓகே ஓகே …. எப்ப கல்யாணம் ஆனிச்சி ?

இப்பதான் 8 மாசம் ஆகுது ….

குழந்தை ??

இல்லை சார் இன்னும் இல்லைன்னு நான் தலை குனிய …

ஒரு வேலையும் பாக்கலையா ?

நான் அதிர்ச்சியாகி நிமிர்ந்து பார்க்க …

கல்யாணத்துக்கு பிறகு இவளோ நாள் எதுவும் வேலை பாக்கலையான்னு கேட்டேன் ….

இல்லை … கல்யாணத்துக்கு முன்னாடி வேலை பார்த்தேன் !

அப்டியா என்ன வேலை ?

ஒரு அடகு கடைல கணக்கு எழுதுனேன் !

அதுக்கு ஏங்க இவளோ சங்கடப்படுரீங்க ??? எல்லாமே வேலை தான் … ஆனா அது

இப்ப நம்ம கன்சன்ல தேவைப்படுமே !

ம்!

2 Comments

  1. Super story keep it up

Comments are closed.