மதன மோக ரூப சுந்தரி – 3 14

அன்றுஇரவே.. அவர்களுடைய வீட்டுக்கு அடித்தளத்தில் இருக்கிற அந்த சுரங்க அறையில்.. அப்பாவிடம் அடிவாங்கிவிட்டு தாமிரா எப்போதும் அடைந்துகொள்கிற அந்த ரகசிய அறையில்.. அத்தனை அடிகளை வாங்கிய வேதனையை கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல்.. அக்கா திருட்டுத்தனமாக எடுத்து வந்திருந்த சாப்பாட்டை அவசர அவசரமாக விழுங்கியவாறே..

“அம்மா இன்னைக்கு எனக்கு புதுப்பேர் வச்சிருக்காங்கக்கா.. கால் மொளைச்ச குட்டிச்சாத்தான்.. நல்லாருக்குல..??” என்று கண்சிமிட்டி சிரித்தாள் தாமிரா.

பழைய நினைவுகளில் மூழ்கியவாறே ஆதிரா பயணித்துக் கொண்டிருக்கையில்..

“என்கூட வர்றது அவருக்கு பிடிக்கலையா..??” கதிர் திடீரென கேட்டதும், சட்டென நிகழ்காலத்துக்கு வந்தாள்.

“சேச்சே.. அப்படிலாம் இல்ல..!!”

“அப்புறம்.. எதுக்கு அப்படி முறைச்சுட்டு இருந்தாரு..??”

“அது வேற..!! ஆக்சுவலா.. இந்தமாதிரி ஸ்ட்ரெயின் பண்ணிக்க கூடாதுன்னு டாக்டர்ஸ் என்னை அட்வைஸ் பண்ணிருக்காங்க.. அதான்..!!”

“ஓ..!!”

“அதுமில்லாம.. சும்மாவே இவருக்கு முகில் அத்தானை பிடிக்காது.. இந்த விஷயத்தை பத்தி பேசப்போறேன்னதும் டென்ஷன் ஆய்ட்டாரு.. ‘எதுக்கு தேவையில்லாத பிரச்சனை, அதுலாம் ஒன்னும் வேணாம்’னு சொன்னாரு..!! அதையும் மீறி உங்ககூட கெளம்பினதும் கொஞ்சம் கோவம்.. வேற ஒன்னுல்ல..!! நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதிங்க.. நான் அவரை சமாளிச்சுக்குறேன்..!!”

“ஹ்ம்ம்.. நான் ஒன்னு சொல்லட்டுமா..??”

“சொல்லுங்க..!!”

“எனக்குமே இது தேவை இல்லாததுன்னுதான் தோணுதுங்க ஆதிரா.. இப்போ போய் அவர்ட்ட பேசுறதால எந்த பிரயோஜனமும் இல்ல..!! அந்த முகிலன் ரொம்ப முரட்டுத்தனமான ஆளா இருக்காரு.. மூக்குக்கு மேல சுள்ளுன்னு கோவம் வருது..!! தாமிரா காணாமப்போன டைம்ல, இதைப்பத்தி நான் அவர்ட்ட பேசப்போய்.. எனக்கும் அவருக்கும் பெரிய சண்டை ஆய்டுச்சு..!!”
“ஓ..!!”

“உங்க அப்பாட்ட இதுபத்தி சொல்லலாம்னு நெனச்சேன்.. என் அம்மாதான் வேணாம்னு தடுத்துட்டாங்க..!! அதுமில்லாம.. என்னதான் பேசிக்காம இருந்தாலும்.. நீங்கள்லாம் ஒரே குடும்பம்.. எப்படி இதை உங்கட்டயே வந்து சொல்றதுன்னு எனக்கு ஒரு தயக்கம்..!!”

“ம்ம்.. புரியுது கதிர்..!!”

ஜீப் இப்போது ஊருக்குள் நுழைந்து பயணித்தது.. காய்கறி மார்க்கெட்டுக்குள் மிதமான வேகத்தில் ஊர்ந்து சென்றது..!! சாலையோரமாக இருந்த அந்த பூக்கடையை பார்த்ததும் ஆதிராவுக்குல் மீண்டும் பழைய நினைவுகள்..!! ஒருவருடத்திற்கு முன்பாக நடந்த அந்த சம்பவம்.. விபத்தின்போது தொலைந்துபோய் நேற்று கல்மண்டபத்தில் ஆதிராவுக்கு மீண்டும் ஞாபகத்துக்கு வந்த நினைவுகள்..!!

இதோ.. இதே சாலையில்தான்.. ஆதிராவும் தாமிராவும் நடந்து சென்று கொண்டிருக்கையில்.. அதோ.. அதே பூக்கடையின் முன்பாகத்தான்.. காரில் வந்து வழிமறித்தான் முகிலன்..!! அவசரமாக காரில் இருந்து இறங்கியவன்.. ஆத்திரமாக வந்து தாமிராவின் புஜத்தை பற்றினான்..!!

“என்னடி நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..??” என்று சீறினான்.

“ச்சீ.. கையை விடுங்க.. ஏன் இப்படி ரவுடி மாதிரி பிஹேவ் பண்றீங்க..??” அவனிடமிருந்து கையை உதறி விலகிய தாமிரா பதிலுக்கு சீறினாள்.

“யாருடி ரவுடி..?? அப்படியே அறைஞ்சு பல்லை உடைச்சுடுவேன்..!!” தாமிராவை அறைய கையை உயர்த்தினான் முகிலன்.

“ஐயோ.. என்னத்தான் இது.. விடுங்க..!!” எதுவும் புரியாத ஆதிரா இடையில் புகுந்து தடுத்தாள்.

“ஏய்.. நீ வெலகு.. உனக்கு எதுவும் தெரியாது..!!” முகிலன் ஆதிராவையும் முறைத்தான்