மதன மோக ரூப சுந்தரி – 3 14

“ஹையோ.. உனக்கு புரியலக்கா..!!”

“என்ன புரியல..?? நீ சொல்லு.. நான் புரிஞ்சுக்குறேன்..!!”

“என்ன சொல்றது.. உன் லவ் மாதிரி என் லவ் அவ்வளவு ஈஸி கெடையாது.. நீ அத்தானை லவ் பண்ணின.. அத்தானுக்குத்தான் உன்னை முடிக்கணும்னு அப்பாவுக்கும் அப்போ இருந்தே அபிப்ராயம்.. It’s all so easy for you..!! என் லவ் அந்த மாதிரி இல்லக்கா.. It’s really complicated.. நெறைய பிரச்சினை இருக்கு இதுல.. இந்த லவ் சக்சஸ் ஆகும்னே எனக்கு நம்பிக்கை இல்ல..!! அப்படி இருக்கும்போது அதை எப்படி உன்கிட்ட வந்து பட்டுன்னு சொல்ல சொல்ற..??”

தாமிரா அந்தமாதிரி வருத்தம் தோய்ந்த குரலில் பரிதாபமாக சொல்லவும்.. அத்தனை நேரம் அவள்மீது ஆதிராவுக்கு இருந்த கோவம், இப்போது சட்டென காணாமல் போனது.. உள்ளத்துக்குள் உடனடியாய் தங்கைமீது ஒரு அன்பு ஊற்று பீறிட்டு கிளம்பியது..!! தாமிராவின் கையை தனது கையால் ஆதரவாக பற்றிய ஆதிரா.. இப்போது கனிவான குரலில் கேட்டாள்..!!

“ப்ச்.. ஏண்டி இப்படிலாம் பேசுற..?? அப்படி என்ன உன் லவ்ல பிரச்சினை..?? சரி அதை விடு.. அந்தப் பையன் யார்னு சொல்லு மொதல்ல..!!” ஆதிரா கேட்க,

“…………………….” தாமிரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.

“சொல்லுடி.. ப்ளீஸ்..!!” ஆதிரா திரும்ப கெஞ்சலாக கேட்கவும், தாமிரா இப்போது வாய் திறந்தாள்.

“க..கதிர்..!!” தாமிரா சொன்னதும் ஆதிராவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.

“யா..யாரு..?? நம்ம கதிரா..?? ந..நம்ம வனக்கொடிம்மா பையனா..??”

“ம்ம்..!!”

“எ..எப்படிடி ..??”

“எ..எப்படின்லாம் எனக்கு சொல்லத் தெரியலைக்கா.. அப்படித்தான்..!!”

“எத்தனை நாளா..??”

“இ..இப்போத்தான்.. கொஞ்ச நாளா..!! ஃபர்ஸ்ட் அவன் ப்ரொபோஸ் பண்ணினான்.. எனக்கு பிடிக்கல வேணான்னு சொல்லிட்டேன்.. அவனை அவாய்ட் பண்ணேன்.. அப்புறமும் அவன் ஸ்ட்ராங்கா இருந்தான்.. கொஞ்சம் கொஞ்சமா என்னையும் கரைச்சுட்டான்..!!”

“ஹ்ம்ம்..!!”

ஆதிரா இப்போது பட்டென ஒரு யோசனையில் ஆழ்ந்தாள்..!! கதிர் நல்ல பையன்தான்.. கெட்ட பழக்கம் என்றெல்லாம் எதுவும் கிடையாது.. ஆதிரா, தாமிரா, சிபி என மூவரோடும் நான்காவது ஆளாக சிறுவயது முதலே நட்புடன் சுற்றி திரிபவன்தான்..!! பட்டப்படிப்பு முடித்திருக்கிறான்.. இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் தகுந்த வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறான்..!! அவனுக்கு தாமிரா மீது எப்போதும் ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு என்பதை ஆதிரா முன்பே அறிவாள்.. ஆனால்.. இருவரும் இப்படி காதலில் சிக்கிக் கொள்வார்கள் என்பதைத்தான் அவள் எதிர்பார்த்திரவில்லை..!!

இளையவர்களுக்கு கதிர் மீது எந்த பாரபட்சமும் இல்லை.. தங்களில் ஒருவனாகத்தான் அவனை பார்த்தார்கள்..!! ஆனால் பெரியவர்களுக்கும் அப்படி என்று சொல்லமுடியாது.. முக்கியமாக தணிகைநம்பிக்கு..!! ஒரு சிறு விஷயத்திற்காக கௌரவம் பார்த்துக்கொண்டு.. பூவள்ளியின் சொந்தங்களை இன்று வரை தள்ளி வைத்திருப்பவர்.. தனது வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணின் மகனுக்கு, தன் மகளை மணமுடித்துக் கொடுக்க சம்மதிப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்..?? தாமிராவின் பயமும் கவலையும் ஆதிராவுக்கு இப்போது தெளிவாக புரிந்தது..!!