மதன மோக ரூப சுந்தரி – 3 14

கல் மண்டபத்தை அடைந்து சிறிது நேரம் ஆகியும்.. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.. ஆளுக்கொரு திசையை வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தனர்..!! எப்படி ஆரம்பிப்பது என்று ஆதிராவுக்குள் ஒரு தயக்கம்.. எதற்காக அழைத்திருப்பாள் என்று கதிருக்குள் ஒரு குழப்பம்..!! கொஞ்ச நேரத்தில் பொறுமை இல்லாமல் கதிரே கேட்டுவிட்டான்..!!

“ஏதோ தனியா பேசணும்னு சொல்லி கூட்டி வந்துட்டு.. ஒண்ணுமே சொல்லாம இருக்கீங்க..??”

“ஹஹா.. அப்டிலாம் ஒன்னுல்ல.. ம்ம்ம்ம்.. உங்க வேலைலாம் எப்படி போய்ட்ருக்கு கதிர்..??”

“ம்ம்.. பரவால.. நல்லா போய்ட்ருக்கு..!! போன மாசம் ப்ரமோஷன் தந்தாங்க.. சேலரி கொஞ்சம் இன்க்ரீஸ் பண்ணிருக்காங்க.. தங்கிக்க குவாட்டர்ஸ் குடுத்திருக்காங்க..!!”

“ஓ.. வெரி குட்..!! அப்போ.. ஜாப்ல நல்லா செட்டில் ஆகிட்டிங்க.. அப்டித்தான..??”

“ம்ம்.. ஆமாம்..!!”

“அப்படியே காலாகாலத்துல ஒரு கல்யாணமும் பண்ணிக்கலாம்ல..??”

“ஹ்ஹ.. கல்யாணமா.. அதுக்கென்ன இப்போ அவசரம்..??”

“என்ன இப்படி சொல்றீங்க..?? உங்களுக்கும் வயசாகிட்டே போகுதுல..?? வனக்கொடி அம்மாக்கும் ஆசை இருக்கும்ல..??”

“ம்ம்.. பாக்கலாங்க ஆதிரா..!!”

“பண்ணிக்கிற மாதிரி ஐடியா இருக்குதான..??” ஆதிரா திடீரென அவ்வாறு கேட்கவும், கதிர் சற்றே நெற்றியை சுருக்கினான்.

“பு..புரியல.. ஏன் கேக்குறீங்க..??”

“இ..இல்ல.. இன்னும் நீங்க தாமிராவ நெனச்சுட்டு இருக்கலைல..??”

கேட்டுவிட்டு ஆதிரா கதிரின் கண்களை கூர்மையாக பார்த்தாள்.. அவனோ இவளையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனுடைய முகத்தில் குழப்பமும், திகைப்பும் கலந்துகட்டி வழிந்தது..!!

“ஆ..ஆதிரா.. உங்களுக்கு..??” என்று தடுமாற்றமாக கேட்டான்.

“ம்ம்.. தெரியும்..!!”

“எப்படி..??”

“தாமிரா முன்னாடி சொல்லிருக்கா..!!”

“ஓ..!!! நா..நான்.. நான் எக்ஸ்பெக்ட் பண்ணலைங்க.. அந்த விஷயம் யாருக்கும் தெரியாதுன்னு நெனச்சுட்டு இருக்கேன்..!!”

“பரவால கதிர்.. இப்போ தெரிஞ்சதுனால என்ன..??”

“ம்ம்.. ஒன்னுல்லதான்..!!”

“சரி.. இப்போ சொல்லுங்க..!! இன்னும் நீங்க தாமிராவையே நெனச்சுட்டு இருக்கிங்களா..??”

“ஹ்ஹ.. என்ன சொல்றது.. ஒரு வருஷத்துல எல்லாத்தையும் மறக்குற அளவுக்கு என் லவ் அவ்ளோ வீக் இல்லைங்க ஆதிரா..!! அவளை ரொம்ப ரொம்ப லவ் பண்ணினேன்.. அவ்வளவு சீக்கிரமாலாம் என்னால அவளை மறக்க முடியாது..!! பட்.. நார்மலுக்கு வர ட்ரை பண்ணிட்டுத்தான் இருக்கேன்..!!” கதிரின் குரலில் ஒருவித விரக்தி கலந்திருந்தது.

“ஹ்ம்ம்.. தாமிரா போனது உங்களுக்குமே ரொம்ப கஷ்டந்தான்.. இல்ல..??”

“ரொம்ப கொடுமைங்க..!! என் கஷ்டத்தை யார்கிட்டயும் சொல்லக்கூட என்னால முடியல.. வாய்விட்டு அழணும்னா கூட தனியா உக்காந்துதான் அழனும்.. மனசுக்குள்ள இன்னும் அந்த வலி இருக்குது..!!”

“ஹ்ம்ம்.. புரியுது..!! எல்லாத்தையும் மறந்துட்டு.. உங்க லைஃப் பத்தியும் கொஞ்சம் யோசிங்க கதிர்..!!”

“ம்ம்.. ட்ரை பண்றேன்..!!”

“அப்புறம்.. உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்.. கேக்கட்டுமா..??”

“கேளுங்க..!!”