மதன மோக ரூப சுந்தரி – இறுதி 22

“புரியுது அங்கிள்..!!”

“ஆவி வந்ததும் அவசரப்படக்கூடாது.. பயப்படக்கூடாது.. பதட்டப்படக்கூடாது..!! உன்னோட உணர்சிகளை முழுமையா கட்டுப்படுத்திக்கணும்..!! ஆவிகிட்ட நிதானமா பேச ஆரம்பி.. உன்னோட கேள்விகளை தெளிவா சுருக்கமா கேளு.. உன் காதுக்குள்ள பதில் ஒலிக்கிறதை கவனமா கேட்டு, புரிஞ்சுக்க முயற்சி செய்..!!”

“ம்ம்..!!”

111

“நாம வரவைக்க நெனைக்கிற ஆவிக்கு சொந்தமான ஏதாவது ஒரு பொருளை கூடவச்சுக்கிட்டு பண்றது.. இன்னும் சக்தியை குடுக்கும்..!!”

செம்பியன் சொல்லிக்கொண்டே, தான் கொண்டுவந்திருந்த தோல்ப்பையை திறந்து அந்தப்பொருளை மேஜை மீது எடுத்து வைத்தார்.. அது.. ஒரு துருப்பிடித்த பழங்கால குறுவாள்..!! நூறு வருடங்களுக்கு முன்பு.. குறிஞ்சி இடுப்பில் செருகியவாறு குதிரையில் கிளம்பினாளே.. அதே குறுவாள்..!!

“இது குறிஞ்சி உபயோகப்படுத்தின கத்தினு சொல்றாங்க.. எனக்கு உறுதியா தெரியாது.. ஆனா முழுமனசா நம்புறேன்..!! என்னோட தாத்தா மூலமா இது எனக்கு கெடைச்சது..!!”

“ஓ..!!”

இப்போது செம்பியன் மேஜையின் மையத்தில் ஒரு கட்டி சாம்பிராணியை வைத்து.. அதன்மீது நெருப்பை கொளுத்தி புகையச் செய்தார்..!! பைக்குள் கைவிட்டு, உள்ளிருந்து ஒரு பெரிய க்ரிஸ்டல் பவ்லை வெளியே எடுத்தார்.. பளிங்கினால் உருவாக்கப்பட்டிருந்த ஒரு அகன்ற பாத்திரம்..!! மெலிதாக புகைவிட்டுக் கொண்டிருந்த சாம்பிராணியின் மீது அந்த பாத்திரத்தை கவிழ்த்து வைத்தார்..!!

“பழங்காலத்துல ப்ரான்ஸ்ல, ஆவிகளோட பேசுறதுக்கு பயன்படுத்தின முறைம்மா இது.. நாஸ்ட்ராடாமஸ் ஆரம்பிச்சு வச்சதா சொல்றாங்க.. ஸ்க்ரையிங்னு பேரு..!!”

“ம்ம்..!!”

“இந்த க்ரிஸ்டல் பவ்ல்.. உள்ள கசியிற அந்தப்புகை.. ஆவிக்கு சொந்தமான ஏதாவது ஒரு பொருள்.. பின்பக்கமா இருந்து வர்ற மங்கலான வெளிச்சம்.. நம்மளோட கட்டுப்பாடு, கான்சன்ட்ரேஷன்.. இதெல்லாம்தான் இந்தமுறைல முக்கியம்..!!”

“ம்ம்..!!”

“கையை கொடும்மா.. இப்படி ரெண்டு பக்கமும் வச்சுக்க..!!”

செம்பியன் ஆதிராவுடைய கைகள் இரண்டையும் பற்றி.. அந்த பளிங்கு பாத்திரத்தின் இரண்டுபக்கமும் வைத்துக்கொள்ள செய்தார்.. தானுமே தனது கைகளையும் அவ்வாறே வைத்துக் கொண்டார்..!!

“நேத்து மணிமாறன் வீட்ல பார்த்த அந்த உருவத்தை மனசுல நிறுத்திக்கோ.. அந்த உருவத்துட்ட பேசணும், பேசணும்னு திரும்ப திரும்ப மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே இரு..!!”

“ம்ம்..!!”

“சொல்லிக்கிட்டே.. பவ்லை நல்லா உத்துப்பாரு.. பார்வையையும் மனசையும் நல்லா ஒருமுகப்படுத்திப் பாரு..!!”

“ம்ம்..!!”

“பாத்துக்கிட்டே இரு.. மனசுக்குள்ள அந்த உருவத்துகிட்ட வேண்டிக்கிட்டே பவ்லை பாரு..!! உன்னை சுத்தி இருக்கிற எல்லாத்தையும் மறந்துட்டு.. மொத்த கவனத்தையும் அந்த பவ்லுக்குள்ள எடுத்துட்டுப்போ..!!”

“ம்ம்..!!”

“உள்ள தெரியிற புகையை பாரு.. ஏதாவது ஒரு புள்ளியை கூர்மையா பாரு.. பாத்துக்கிட்டே இரு.. அந்தப்புள்ளியை தாண்டி ஒரு சூனியத்தை பார்க்க முயற்சி செய்..!!”

“ம்ம்..!!”

“எல்லாத்தையும் தாண்டி.. அந்தப்புள்ளில.. அந்த ஆவியோட உருவம் தெரியுதான்னு பாரு..!! பாத்துக்கிட்டே இரு…!!!”

“ம்ம்..!!”

செம்பியன் சொன்னதையெல்லாம் அச்சுபிசகாமல் அப்படியே பின்பற்றினாள் ஆதிரா.. அவர் சொன்னமாதிரியே, மனதுக்குள் அந்த உருவத்திடம் வேண்டிக்கொண்டு, மிகக்கூர்மையாக அந்த பளிங்கு பாத்திரத்திற்குள் கசிகிற புகையையே உற்றுப்பார்த்தாள்.. பார்த்துக்கொண்டே இருந்தாள்.. அந்த புகையையும் தாண்டி, இல்லாத ஒரு சூனியத்தை வெறித்தாள்..!! செம்பியன் தனது இமைகள் இரண்டையும் மூடிக்கொண்டிருந்தார்.. உதடுகளை அசைத்து ஏதோ மந்திரம் போல உச்சரித்துக்கொண்டே இருந்தார்..!!