உதடுகளில் புன்சிரிப்பும், மனதிற்குள் மகிழ்ச்சியும் குடி கொண்டிருந்தது!
திடீரென்று யாரோ என்னை வேகமாக உலுக்கினார்கள்!
தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்தவள் போல் திடுக்கிட்டு யாரென்று பார்த்தேன்!
அங்கு கோபத்துடன் மதன் நின்றிருந்தான்! அவன் தலையும், சட்டையும் கலைந்திருந்தது. முகத்தில் கடுப்பும், தவிப்பும்!
என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கான்?
எ… என்ன மதன்?
என்னை கோபமாக முறைத்தவன், என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான்!
நான் மெல்ல, அவனுடன் சென்றேன்.
உள்ளே அவனது அறைக்கு இழுத்துச் சென்றவன், பின் வேகமாக கையை உதறிவிட்டு, என்னை முறைத்தான்.
எதுக்கு இப்படி முறைக்கிறான்? இவனும், இவன் கோபமும்! சரியான அவசரக் குடுக்கை!
என்னுள் நான் எடுத்திருந்த எனது முடிவு, எனக்குள் ஒரு தெளிவைத் தந்திருந்ததால், இனி அவனுக்கு அன்பைத் தர முடிவு செய்துவிட்டதால், அவனது கோபம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. முன்பே அவனது கோபம் பொருட்டல்ல. இப்பொழுதோ, சொல்லவே வேண்டாம்!
எங்கடி போன? சொல்லித் தொலைஞ்சிருக்கலாம்ல?
ஏன், என்னாச்சு?
மண்ணாங்கட்டி! உன்னைத் தேடி எங்கல்லாம் அலையுறது?
நான் இங்கத்தானே இருந்தேன்? எதுக்கு எங்கெங்கியோ தேடுன?
ஆமா நல்லா பேசு. நீ இருந்த இடம், ஒரு ஓரமா, மறைவா இருக்கு! நீ அங்க இருப்பன்னு எனக்கு ஜோசியமா தெரியும்? ஃபோன் பண்ணாலும் எடுக்கலை. டிரஸ்ஸு பேக், எல்லாம் இங்க இருக்கு! நான் என்னான்னு நினைக்கிறது? எங்கல்லாம் தேடுறது? ஏண்டி, இப்படி தவிக்க விடுற மனுஷனை?
நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஃபோன் சைலண்ட் மோடில் போட்டிருப்பேன். இன்னமும் என் உதடுகளில் புன்னகை!
Nice can you please upload next part
Story supera iruku..