காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 9 57

இனி கதை, லாவண்யாவின் பார்வையில்.

மெல்ல பெரு மூச்சு விட்டு எழுந்தேன். நான் கொஞ்சம் யோசிக்க வேண்டும்! தனியாக! அதனால் வீட்டின் வெளியே வந்து, வீட்டுக்கு ஒரு ஓரமாக போட்டிருந்த சேரில் வந்து அமர்ந்தேன்.

அன்று காலை, மதனின் அக்கா என்னிடம் ஃபோன் பண்ணி, ஒரு ப்ராமிஸ் கேட்டாள். அது, ஒரு வேளை மதன் வந்து, நீ இதைப் பண்ணியான்னு ஏதாச்சும் கேட்டா, ஆமாம்னு சொல்லனும் என்று. எதைச் சொன்னாலும் என்று சொல்லியிருந்தாள்.

இப்படி ஒரு கதை ஏன் கட்டினாள் என்று எனக்கு புரியாவிட்டாலும், அவளிடம் ஓகே சொல்லியிருந்த ஒற்றைக் காரணத்துக்காகத்தான் நானும் மதன் கேட்டதற்கு ஆமாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அதன் விளைவு…..?

திரும்பிப் பார்க்காமலேயே என்னிடம் சொல்லி விட்டுச் சென்றவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் வார்த்தைகளும், அதிலிருந்த உண்மையும், வேதனையும் என்னை உலுக்கியிருந்தது. என்னையே நான் கடிந்து கொண்டேன்.

அவ்வளவு கல்மனதா எனக்கு?

என்னைக் கொடுமைப்படுத்தியவர்களையெல்லாம் விட்டுவிட்டு, என்னைக் காதலிப்பவனிடம்தான், என் வன்மத்தைக் காட்ட வேண்டுமா? நான் உம் என்று சொன்னால், என் வாழ்வை வசந்தமாக்கி விடுவானே! இவனிடமா கோபம், வருத்தம்?

என் கோபம் நியாயமானதுதான்! ஆனால் தெரிந்தா செய்தான் இவன்? இன்னமும் இவனுக்கு நடந்ததே தெரியாது. நானும், கொஞ்சம் தைரியமாகச் செயல்பட்டிருக்கலாம்.

அன்று, நான் வேகமாக, அவன் அறைக்கு நுழைந்திருந்தால்…. இந்த நிலையே இல்லையே.

நான் மட்டும் யோக்கியமா? சொல்லப் போனால் உண்மை தெரிந்தால், அவன்தான் என்னிடம் கோபப்படுவான். அப்போது நான் என்ன பதில் சொல்லப் போகின்றேன்?

உண்மையில் அவனை கோபித்துக் கொள்ளும் தகுதி இருக்கிறதா எனக்கு?

இனியும் இவனைக் கஷ்டப்படுத்தக் கூடாது. பாவம் சின்ன வயதிலிருந்து எந்த வித நேசத்தையும் அனுபவிக்காதவன், இப்போதும் என் நேசத்துக்காக காத்திருக்கிறான்.

அவனைப் பற்றிய யோசனைகள் என் உதடுகளில் மென் புன்னகையை வரவழைத்திருந்தது! அது, அவன்மேல் ஏற்பட்டிருந்த, மறைத்து வைக்கபட்டிருந்த எனது காதலை எடுத்துச் சொல்லியது.

எதற்க்காக நான் இப்படி நடந்து கொண்டிருக்கிறேன். இவன் அக்காவையே நான் மன்னித்து விட்டேன், ஆனால் இவனிடம் மட்டும் கோபம் காட்டுகிறேன். இத்தனைக்கும் இன்னமும் ஏன் என்று புரியவில்லை!

Updated: December 10, 2021 — 5:59 am

2 Comments

  1. Nice can you please upload next part

  2. Story supera iruku..

Comments are closed.