கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“உங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் என்னைக்குமே நான் உடம்பால இந்த மனுஷனுக்குத் துரோகம் பண்ணதில்லே. ஆனா மனசாலே துரோகம் பண்ணியிருக்கேன்டா.” ராணி விம்ம ஆரம்பித்தாள்.

“ராணீ… போதும்மா… உன் மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லேம்மா…” நல்லசிவம் முனகிக்கொண்டே தன் மனைவியின் தலையை மெல்ல வருட ஆரம்பித்தார்.

“ரொம்ப நாள்… ஏன்… நீ பொறந்ததுக்கு அப்புறமும் அந்த பயந்தாங்கொள்ளியை என்னால மறக்கவே முடியலே. ஏன்னா அது என்னோட அறியாத பருவத்துல வந்த கன்னுக்குட்டி காதல். முதல் காதல்.”

“ஒரு பொண்ணுக்கு தன்னோட மனசுலேருந்து, தோல்வியில முடிஞ்ச முதல் காதல் அழியறதுக்கு ரொம்ப நாளாகும். மனசுக்குள்ள ஒருத்தனோடவும், உடம்பால ஒருத்தனோடவும் வாழறது ஒரு பொண்ணுக்கு ரொம்பக்கஷ்டம்டா. இது பொம்பளைக்கு மட்டுமில்லே. ஆம்பிளைக்கும் கொடுமையான விஷயம்டா…”

“உனக்கு சம்பத்குமார்ன்னு ஏன் பேர் வெச்சேன் தெரியுமா? அவன் பேருலேயும்
“சம்பத்’ங்கற சொல் இருந்திச்சி. அந்த பாவி மேல இருந்த தீராத ஆசையினாலத்தான் வெக்கம் கெட்டுப்போய் உனக்கு நான் அவன் பேரை வெச்சேன். உன்னை சம்பத்ன்னு ஆசையா கூப்பிடும் போதெல்லாம் அவனை நான் என் மனசுக்குள்ள நெனைச்சுக்குவேன்.”

சம்பத் தன் தாயின் மடியிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். தன் முகம் கருத்து, குரல் தழுதழுத்து, கண்கள் கலங்க, மனதில் எழும் பழைய வலிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் தன் தாயையும், கன்னத்தில் ஒரு கையையும், மறு கையால் அவள் தலையை வருடிக்கொண்டிருக்கும் தன் தந்தையையும் அவன் மாறி மாறிப்பார்த்தான்.
“எங்கக்கல்யாணம் முடிஞ்சி, ஒரு மாசம் வரைக்கும், என் மேல அன்பை பொழிஞ்ச இவர் விரல் கூட என் மேல படவிடாம, இந்த நல்ல மனுஷனை, நான் பழிவாங்கறதா நெனைச்சுக்கிட்டு, என்னையே நான் பழிவாங்கிக்கிட்டு இருந்தேன்.”

“ராணீ.. இவன்கிட்ட எதுக்குமா இதெல்லாம்?” நல்லசிவம் தன் முகத்தை சுளித்தார். இது நாள் வரை அவர்கள் யாருக்கும் தெரியாமல் கட்டிக்காத்து வந்த தங்கள் அந்தரங்கம் வயது வந்த தன் மகனுக்கு மெல்ல மெல்ல தெரியவருவதை நினைத்து சற்றே வெட்கத்துடன் தலை குனிந்தார்.

“நீங்க ஏங்க தலை குனியறீங்க? ஒரு பொண்ணு மனசு இவனுக்கு புரியணுங்க. சுகன்யாவை மறந்துட்டு என் புள்ளை நல்லபடியா வாழணுங்க. இவன் அவளை உண்மையா காதலிக்கலாம். ஆனா இவனோட காதல் என்னைப் பொறுத்தவரைக்கும் சரியில்லே. விருப்பமில்லாத ஒரு கல்யாணத்துலே ஆணும் பெண்ணும் எப்படி கஷ்டப்படுவாங்கன்னு இவன் தெரிஞ்சிக்கணும். இவன் மனசை மாத்தறதுக்கு என் கதையை நான் இவனுக்குச் சொல்லித்தான் ஆகணும்.

“அம்மா… நீ சொல்றதெல்லாம் ஏதோ கதையில வர்ற மாதிரியிருக்கும்மா.”

“தாலி கட்டிக்கிட்ட ஒரு மாசத்துக்கு அப்புறமும், நான் கன்னி கழியாம இருக்கேங்கற விஷயம் தெரிஞ்ச என் அம்மா, நான் தூக்குபோட்டுகிட்டு சாகறேன்னு தாம்புக்கயித்தை கையில எடுத்துக்கிட்டு வீட்டைவிட்டு ஓடினா. என் அப்பா விஷம் குடிச்சுட்டு உயிரை விடறேன்னு என் தம்பியையும் இழுத்துக்கிட்டு, நம்ம வயக்காட்டுப்பக்கமா ஓடினாரு.”

“என் மனசுல என் காதல் நிறைவேறலையேங்கற எரிச்சல்; கோபம்; வெறுப்பு பொங்கி வழிஞ்சிது. இதுல சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் நான் பழிவாங்கறதுன்னு முடிவெடுத்தேன். அதுக்கு ஒரே வழி என் புருஷனை என்கிட்டேயிருந்து தூரமா நிக்க வெக்கறதுன்னு நினைச்சேன். நிக்க வெச்சேன். என்னைத் தொடவிடலே…”

“தன் புள்ளை கல்யாணத்துக்கு அப்புறமும் பிரம்மச்சாரியா இருக்கானேங்கற என் மாமியாரோட வெறுப்பு; என் மாமனார் கண்ணுல தெரிஞ்ச விரக்தி.. இதையெல்லாம் என்னால சகிச்சிக்கமுடியலே. உங்கப்பாவை பெத்தவங்க அத்தனை நல்ல குணம் உள்ளவங்க… எங்க ரெண்டு பேரு பிரச்சனையில தலையிடவேயில்லே… இதுதான் எங்கத்தலையெழுத்துன்னா இருந்துட்டு போகட்டும்ன்னு பொறுமையா இருந்தாங்க.”

“தினம் தினம் பொழுது விடிஞ்சி பொழுது போனா என் குடும்பத்தோட மெரட்டல் மெரட்டல். எத்தனை மிரட்டல்? மெரட்டறவங்க நிஜமாவே எக்குத்தப்பா எதாவது பண்ணிட்டா; என் குலை நடுங்கிப்போச்சு. ஒரு பொம்பளை எத்தனை நாளைக்குத்தான் இத்தனை டென்ஷனைத் தாக்குப்பிடிக்க முடியும்.? நான் உங்கப்பாவோட மனசில்லாம, என் ஒடம்பாலேயும் வாழ ஆரம்பிச்சேன். நீயும் பொறந்தே.”

“அம்மா என்னை நீ மனசுக்குள்ள ஆசையில்லாமத்தான் ஒரு இயந்திரமா பெத்துக்கிட்டியா?”

சம்பத்தின் குரலில் லேசான நடுக்கமிருந்தது. தன் பிள்ளையின் கேள்வியால் கதிகலங்கிப்போனாள் ராணி. மகனின் வலதுகையை தன் கையில் எடுத்துக்கொண்டாள். நடுங்கிக்கொண்டிருக்கும் அவன் விரல்களை ஆதரவாகத் தடவிக்கொடுத்தாள்.

“ஆரம்பத்துல உங்கப்பாக்கூட விருப்பமில்லாமத்தான் படுத்தேன்டா. அவர் எங்கிட்ட காமிச்ச அன்புல, பாசத்துல என் மனசு கொஞ்சம் கொஞ்சமா அவர் பக்கம் சாய ஆரம்பிச்சுது. அவரோட கள்ளமில்லாத மனசும், அவரோட அருமையும் புரிய ஆரம்பிச்சுது. ஆனாலும் அவனோட நினைவுகள் என் மனசோட ஒரு மூலையில இருந்திச்சிங்கறதும் மறுக்கமுடியாத ஒரு உண்மைதான்டா… இதை சொல்றதுக்கு நான் வெக்கப்படலே.”

“ராணீ… மனசால யாருமே ஆணோ, பெண்ணோ, முழுசா சுத்தமா இருக்க முடியாதும்ம்மா.. இதை நான் உனக்கு எத்தனையோ தரம் சொல்லிட்டேன்.” நல்லசிவம் ஆதரவாக ராணியை தன் தோளில் சாய்த்துக்கொண்டார். தன் வளர்ந்த மகனின் எதிரில் அவள் நெற்றியில் எந்த தயக்கமும் இல்லாமல் அன்புடன் முத்தமிட்டார்.

“உனக்கு ரெண்டு வயசுடா. உங்கப்பா அலமாரியில எதையோ தேடும்போது, என் புடவைகளுக்கு அடியில கிடந்த, என் காதலோட ஒரே அடையாளம்… அவன் போட்டோ, பிளாக் அண்ட் வொயிட்ல, என் புருஷன் கையில கிடைச்சிட்டுது. நான் ஒடம்பாலேயும், மனசாலேயும் ரொம்பத் திமிரா இருந்த காலம் அது.

“ராணீ… இது யாரும்மா… ஹேண்ட்சம்மா இருக்கானே? வெகுளித்தனமா கேட்டாரு. நான் திமிரா இவன் என் லவ்வர்ன்னு சொன்னேன். இன்னும் என் மனசுல ஒரு ஓரத்துல அவன் நெனைப்பு இருக்குன்னு சொன்னேன். நான் எதையும் என் புருஷன் கிட்ட மறைக்கல. என் காதல் விஷயத்தை புட்டு புட்டு வெச்சிட்டேன்… இவரு ஒரு நிமிஷம் இடிஞ்சிப்போயிட்டார்.”

“உங்கப்பா என்னைத்திட்டலே… அடிக்கலே… எந்த ஆம்பிளையா இருந்தாலும், தன் புள்ளைக்கு வேற ஒருத்தன் பேரை வெச்ச என்னை மாதிரி பொட்டைச்சியை வெட்டி கூறு போட்டு இருப்பான்; ஆனா இவரு என்னைப் பாத்து அனுதாபப்பட்டார்.”

“ராணீ… சத்தியமா நீ ஒருத்தனை காதலிச்ச விஷயம் எனக்குத் தெரியாது… தெரிஞ்சிருந்தா உன் வீட்டுக்கே உன்னைப் பெண் கேட்டு வந்திருக்கமாட்டேன்னு எங்கிட்ட மன்னிப்பு கேட்டார். உடம்பால உங்கப்பா கருப்புடா… மனசால சொக்க தங்கம்டா.”

ராணி பேசுவதை நிறுத்தினாள். தன் மூக்கை உறிஞ்சினாள். கண்களைத் தன் புடவை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். தன் கணவனை நெருங்கி அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“அப்பா… இவ்வளவு நல்ல மனுஷனா நீங்க?”
சம்பத் தன் தந்தையை, அவர் முகத்தை ஒரு நிமிடம் வெறித்துக்கொண்டிருந்தான். சட்டென எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவருடைய தோளில் தன் முகத்தை புதைதுக்கொண்டான்.

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.