கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“அம்மா…” தன் தாய் எவ்வளவு புத்திசாலி… என் மனசுல ஓடறதை அப்படியே படம் படிச்சுட்டாளே? சம்பத் மிக அழகாக வெட்கப்பட்டான். அவன் முகம் சிவந்து போனது.

“சொல்லுடா கண்ணு… உன் மனசுக்குள்ள யாரையாவது நெனைச்சிக்கிட்டு இருக்கியா?”

“என் மனசுல இருக்கறவளும் நம்ம ஜாதிதான்… நீரு நெலம், ஊரு ஒறவு எல்லாம் அவளுக்கும் இருக்குது. ஆனா அவளை உன்னால உன் மருமவளா ஆக்கிக்கமுடியாதும்மா” சம்பத் தன் தலையை குனிந்து கொண்டான்.

“டேய்.. உன் அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியாதுடா? எந்த விஷயத்துலேயும் கடைசீ வரைக்கும் முட்டிப்பாக்கறவடா நான்.”

“உன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்…” மகன் சிரித்தான்.

“என்னடா தெரியும் உனக்கு என்னப்பத்தி?” சிடுசிடுத்தாள் தாய்.

“பின்னே… சுந்தரி மாமிகிட்ட சுகன்யாவை எனக்கு ஏன் கட்டிக்குடுக்கலேன்னு சண்டையும் போட்டுட்டு… அவங்க ஹஸ்பெண்ட் கம்பெனியிலேயே எனக்கு வேலையும் ஏற்பாடு பண்ணறயே? சம்பத் தன் தாயை ஆசையுடன் கட்டிபிடித்துக்கொண்டான்.

“இதுதாண்டா உறவு… அதை நீ நல்லாப் புரிஞ்சுக்கோ. பெத்தவளை நக்கலடிக்கறியா நீ? அவளுக்கு உறவு மொறை எதுவும் மறந்து போயிடல. நான் உரிமையா சண்டைப்போட்டதை சுந்தரி தப்பாவே எடுத்துக்கலே.”

“அப்புறம்…”

“அக்கா.. என் பொண்ணு என் கையை மீறி போயிட்டா. எனக்கு புடிச்சவனை நான் கட்டிக்கிட்டேன்.. இப்ப எந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு அவ வழியிலே நான் குறுக்கே நிக்கறதுன்னு என் கையை பிடிச்சிக்கிட்டா..”

“சரிம்மா நான் சும்மா கலாய்ச்சேம்ம்மா… கோச்சிக்காதேம்மா?”

“நீ என்னை கொஞ்ச வேணாம்… முடிவா என்ன சொல்றே?”

“என்னைத்தப்பா நினைக்காதம்மா. நான்… நான் நம்ம சுகன்யாவைத்தான் லவ் பண்றேம்மா. கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளைத்தான் பண்ணிக்குவேன். இல்லேன்னா கடைசிவரைக்கும் இப்படியே இருந்துடறேம்மா.”

சம்பத்தின் குரல் தழுதழுத்தது. விருட்டென நகர்ந்து
தன் தாயின் மடியில் தன் தலையை புதைத்துக்கொண்டான். அவன் உடல் இலேசாக குலுங்கியது.

வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிடிச்சி… நல்லசிவம் தன் இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டார்.

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.