கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“கண்ணு… சம்பத்து… என் பரம்பரைச்சொத்தும், உன் முறைப்பொண்ணும், நம்ம கையை விட்டு நழுவிப்போகுதேங்கற ஆதங்கத்துல, சுகன்யாவை இன்னொருத்தனுக்கு எப்படி நீங்க கட்டிக் கொடுக்கலாம்ன்னு, வெட்டித்தனமா சுந்தரிகிட்ட நான் சண்டை போட்டது என்னவோ உண்மைதான்டா…”

“ஆயிரம்தான் இருந்தாலும் அவகிட்ட நான் சண்டை போட்டது தப்புடா. ஏன்னா… சுகன்யா ஒருத்தனை லவ் பண்றா. இந்தக்கல்யாணம் என் தம்பி குமாரோ அவன் பொண்டாட்டியோ பாத்து அரேஞ்ச் பண்ணது இல்லே. சுகன்யாவே அவ விருப்பட்டு தேடிகிட்ட கல்யாணம். என் கோவமே ஒருவிதத்துல ஞாயமேயில்லே.”

“சுந்தரியைப்பத்தி எனக்கு நல்லாத்தெரியும். தான் காதலிச்சி கட்டிக்கிட்ட புருஷனை விட்டுட்டு பதினைஞ்சு வருஷம் தனியா ஒத்தையா வாழ்ந்துகிட்டு இருந்தா. அவங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருந்துருக்கும். வீட்டுக்கு வீடு வாசப்படி. ஆனா யாருமே அவளைப்பாத்து ஒரு விரலை ஒசத்திட முடியாத அளவுக்கு நெருப்பா வாழ்ந்தா. அவ பெத்து வளத்தப்பொண்ணு சுகன்யா. இதனாலத்தான் நான் அங்க சம்பந்தம் பண்ணவே போனேன்.”

“எல்லாவிதத்துலேயும் சுகன்யா உனக்கு பொருத்தமாயிருப்பான்னு நான் நினைச்சேன். அவ இன்னொருத்தனை காதலிக்கறான்னு தெரிஞ்சதும், அவளை என் மருமகளா ஆக்கிக்கற என் ஆசையை விட்டுட்டேன். உங்கப்பாவும் இதைத்தான் சொன்னார். ஆனா பொம்பளைக்கே இருக்கற குணம்… சொந்தம் விட்டுப்போயிடக்கூடாதுங்கற ஆதங்கம் எனக்கு இப்பவும் இருக்கு. கழுதை அதுபாட்டுல அது ஒரு பக்கம் இருக்கட்டும்.”

“அப்பாடா… இப்பத்தாண்டி எனக்கு நிம்மதியாச்சு. எங்கே நீ திரும்பவும் இவன் கூட சேந்து முருங்கை மரம் ஏறிடுவியோன்னு நினைச்சேன்?” நல்லசிவம் நீளமாகப் பெருமூச்சு விட்டார்.

“சம்பத்து… எந்தக்காலத்துலேயும், எந்தக்காரணத்துக்காகவும், ஒரு பொம்பளையை வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி, அவ மனசை கல்யாணத்துக்குன்னு திசை திருப்பக்கூடாதுப்பா. அது ரொம்பத் தப்பு. இன்னொருத்தனை தன் மனசுக்குள்ள வெச்சிருக்கற பொண்ணோட நீ எப்படிடா சந்தோஷமா குடும்பம் நடத்த முடியும்?”

“அம்மா அவளை நான் என் வாழ்நாள் பூரா என் மனசுக்குள்ளவே காதலிச்சுக்கிட்டு இருப்பேம்மா. எந்தவிதத்துலேயும் அவளுக்கு நான் தொந்தரவு கொடுக் கமாட்டேம்மா…” சம்பத் குரலில் உயிரில்லாமல் முனகினான்.

“இது மகாகொடுமைடா… இந்தக்கொடுமையை நானே அனுபவிச்சு இருக்கேன்டா.” ராணியின் குரல் கிசுகிசுப்பாக வந்தது.

“என்னம்மா சொல்றே நீ?”

“கண்ணு… நானும் படிக்கற காலத்துல ஒருத்தனை என் மனசார விரும்பினேன். அவன் நம்ம ஜாதியில்லே. அவன் ஒரு கோழை. நம்ம ஜாதி ஜனங்களுக்கு பயந்து, அவங்க அவனை ஒரு தரம் அடிச்சிட்டதுக்கு பயந்து, என்னை அம்போன்னு நட்டாத்துல கைவிட்டுட்டான். ஒரு பேடியை காதலிச்சோமேன்னு நான் வெக்கமும் பட்டிருக்கேன். எப்படியோ, என் காதல் நிறைவேறலை. என்னைப் பெத்தவங்க உங்கப்பாவை எனக்கு வற்புறுத்தி கட்டி வெச்சாங்க.

“ராணி… இப்ப எதுக்கு நீ பழங்கதையை ஆரம்பிக்கறே?”

“காரணத்தோடத்தான் நான் பேசறேன்… என்னைத் தடுக்காதீங்க. ப்ளீஸ்…”

“கல்யாணத்துக்கு முன்னாடி என் காதலன் கூட இருட்டுல சினிமா பாத்து இருக்கேன். நம்ம ஊரு ரெயில்வே ஸ்டேஷன் மதகுக்கு கீழே நின்னு அவனை கட்டிப்புடிச்சி முத்தம் குடுத்து இருக்கேன். முப்பது வருஷத்துக்கு முன்னாடி இது ரொம்ப பெரிய விஷயம்டா.”

“என் உறவுகள் என்னைப்பாத்து சிரிச்சுது.
“த்தூன்னு’ன்னு என் மூஞ்சியில காறித்துப்புச்சு. என்னைப் பெத்தவ தொடப்பக்கட்டையாலேயே என்னை அடிச்சு நொறுக்கினா. என் மனசும் நொறுங்கிச்சி… தொடப்பக்கட்டையும் முறிஞ்சிப்போச்சு. எங்கப்பன் என்னை வெட்ட வந்தாரு. நம்ம ஜாதிக்காரன் அத்தனைப்பேரும் ஆன்னா ஊன்னா அருவாளைத்தான் கையிலத் தூக்குவான்… என் அத்தை குறுக்கே வந்து என் உசுரைக் காப்பாத்தினா.”

“உங்கப்பா என்னைப் பொண்ணு பாக்க வந்தாரு. நான் மாட்டேன்னு அப்பன் ஆத்தாகிட்டே மல்லாடி நின்னேன். பட்டினி கிடந்து பாத்தேன். ஒண்ணும் நடக்கலே.”

“என் ஒடம்பு அழகுல மயங்கிப்போன உங்கப்பா கட்டிக்கிட்டா என்னைத்தான் கட்டிக்குவேன்னு நாலு தரம் ஊர்ல இருக்கற வெள்ளை வேஷ்டி கட்டினவன் அத்தனை பேரையும் மாத்தி மாத்தி அனுப்பி வெச்சாரு.. இவரை மட்டுமில்லே எவனையும் கட்டிக்க மாட்டேன்னு தீத்து சொன்னேன். வீட்டை விட்டு ஓடிடுவேன்னு சொன்னேன்.. என் உடம்பு துணியை உருவிட்டு அம்மணமா இருட்டு ரூம்லே அடைச்சு சோறு போட்டாங்க.”

“ஹூகூம்… என்னைப் பெத்தவங்க என்னை மிரட்டி மிரட்டியே என் மனசை சுக்கு நூறா உடைச்சிட்டாங்கடா. கூண்டோட கிணத்துல குதிச்சிடுவோம்ன்னு பயமுறுத்தினாங்க. எண்ணையை ஊத்தி கொளுத்திக்குவோம்ன்னாங்க; எனக்கு விருப்பமேயில்லாம கட்டாயக்கல்யாணம் நடந்தி வெச்சாங்க…”

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.