கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

கடந்த ஐந்து வருடங்களில் தன் ஆசை மகன் எத்தனை முறை பார்ட்டிக்கு போவதை நிறுத்தியிருக்கிறான்? காலையில் தண்ணியடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்பவன், அதே நாளில், அதே ராத்திரியில் மீண்டும் எத்தனை முறை திரும்பவும் தன் கையில் கிளாசை எடுத்திருக்கிறான் என்பது நல்லசிவத்துக்கு நன்றாகத் தெரியும்.

“உங்க பேக்லதான் வெச்சிருந்தீங்க. எழுந்து எடுங்களேன். வந்த எடத்துல நீளமா கையை காலை விரிச்சிக்கிட்டு, அனந்த சயனத்துல போஸ் குடுக்கறீங்க? பெத்தப்புள்ளைக்கிட்ட அன்பா, பாசமா ஒரு வார்த்தை பேசுவோம்ங்கற எண்ணம் உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கா?”

“சும்மாரும்மா… நீ எதுக்குமா எப்பப்பாத்தாலும் அப்பாவை வெட்டியா வெரட்டிக்கிட்டு இருக்கே?”

“கேளுடா… நல்லாக் கேளுடா நாலு வார்த்தை நல்லா உறைக்கற மாதிரி கேளுடா. உங்கம்மாளுக்கு நான் ரொம்ப எடம் குடுத்துட்டேன். ஒரு நாள் நிம்மதியா இருக்கவுடமாட்டேங்கறா? தொணப்பு தாங்கலே. எங்கேயாவது ஒழியணும் போல இருக்குதுடா…”.

“சும்மாயிருங்கப்பா நீங்களும்.. நச்சு நச்சுன்னு கொறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க…”

“இதோ பார்டா… ஒண்ணு பண்ணு; இவளை உன் கூடவே கொஞ்ச நாளைக்கு வெச்சுக்கோ. அப்பத்தான் தெரியும் உனக்கு உன் அம்மாவோட பெருமை. நான் கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கணும்ன்னு நினைக்கறேன்.” பேசிக்கொண்டே தன் தோள்பையிலிருந்து, போஸ்ட்கார்ட் சைசில் ஒரு புகைப்படத்தை எடுத்து சம்பத்திடம் நீட்டினார் நல்லசிவம்.

“ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டு…உங்க கடமை முடிஞ்சதும் எங்கே வேணாப் போங்க… உங்களை யாரும் இங்க புடிச்சி கம்பத்துல கட்டி வெச்சில்லே..”

“நீ நில்லுன்னாலும் இன்னொரு தரம் நான் நிக்கப் போறது இல்லேடீ? நான் போனதுக்கு அப்புறம்தான் புரியும்…” நல்லசிவம் முனகிக்கொண்டார். சம்பத் தன் கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். போட்டோவில் குறையே இல்லாமல்தான் இருந்தாள் அந்தப்பெண்.

“சம்பத்து இவளைப் புடிச்சிருக்காடா:? நமக்கு தூரத்து சொந்தம். நீர் நிலம்ன்னு ஒரு குறையும் இல்லே. வசதியா வளர்ந்த பொண்ணு. நாம மட்டும் என்னக்குறை வெக்கப்போறோம்? அண்ணன் அமெரிக்காவுல இருக்கானாம். இவளும் படிச்சிட்டு சென்னையில வேலை பாக்கறாளாம்.” ராணியின் குரலில் ஆவலும் ஆர்வமுமாகப் பேசினாள்.

“இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்மா…” சம்பத் தன் தாயின் முகத்தைப் பார்க்காமல் சொன்னான். கையிலிருந்த புகைப்படத்தை தந்தையின் பக்கம் நகர்த்தினான்.

“சொல்றதைக் கேளுப்பா. சுந்தரி உன் பயோடாட்டவை அவ புருஷனுக்கு அனுப்ப சொன்னா. குமாரசுவாமி மேனேஜரா இருக்கற கம்பெனில நாலு எடம் காலியா இருக்காம். நீ வாங்கற சம்பளத்தை கரெக்டா மென்ஷன் பண்ணுன்னு சொன்னா. ஒரு போஸ்ட்டை உனக்கு வாங்கிடலாம்ன்னு சொல்றா.”

“யார் தயவுலேயும் நான் இல்லே? சென்னைக்கு நான் வர்றதா இல்லே?”

“இப்படி மொரட்டுத்தனமா பேசினா எப்டீடா கண்ணு?”

“பின்னே எப்படி பேசணுங்கறே?” சலித்துக்கொண்டான் அவன்.

“எல்லாம் கூடி வர்ற மாதிரி இருக்கு. பெண்ணுக்குன்னு அவ பேருலேயே வீடு வாங்கி வெச்சிருக்காங்க. இப்போதைக்கு வாடகைக்கு விட்டு இருக்காங்களாம்.”

“என்னை எவ்வளவுக்கு வெலை பேசியிருக்கே நீ?”

“டேய்… பெரிய அறிவாளி மாதிரி நீ பேசாதே.. கேட்டக்கேள்விக்கு நேரா பதில் சொல்லு… பொண்ணை புடிச்சிருக்கா இல்லையா?”

“நேரா சொன்னாலும் அதான்… கோணலாச்சொன்னாலும் அதான். எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்.”

“ஏன்டீ… நீ மல்லுக்கு நிக்கறே? அவன் பொண்ணை பிடிக்கல்லேன்னா சொல்றான்.. கல்யாணம் இப்ப வேணாங்கறான்?” ஓய்வு பெற்ற சட்ட அறிஞர் நல்லசிவம் அவர்கள் பேச்சில் நுழைந்தார்.

“சரிடா இவளைப் பிடிக்கலைன்னா விடு. உனக்கு எவளையாவது பிடிச்சிருந்தா சொல்லு. நம்ம ஜாதியா இல்லேன்னாலும் பரவாயில்லே. அவளைப் பண்ணி வெச்சிடறோம்…” ராணியின் குரல் கரகரப்புடன் வந்தது.

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.