கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“மெத்து மெத்துன்னு இருக்கற இலவம் பஞ்சு மெத்தையில உன்னை என் பக்கத்துலப் போட்டுக்கிட்டு, தூக்கமேயில்லாம பொரண்டுக்கிட்டு இருப்பேன் நான். மனசுல விருப்பமில்லாத உன்னை உன் கழுத்துல தாலி கட்டிட்டேங்கற காரணத்துக்காக உன்னை நான் தொடமாட்டேன்னு தனியா தரையில படுத்துக்கிட்டு நிம்மதியா தூங்குவாரு இவரு. உங்கப்பாவுக்கு கொடுமை பண்ணியிருக்கேண்டா நான்.”

“எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எந்த ஜென்மம் எடுத்தாலும் இவருதான் எனக்கு ஆம்பிளையா வரணும்ன்னு தினம் தினம் சாமியை வேண்டிக்கறேண்டா நான். இவரை நான் என் மனசார வெரட்டறது இல்லேடா… எங்களுக்குள்ள இருக்கற ஒரு விளையாட்டுடா அது… இப்ப உனக்கு அது புரியாது.” ராணி மீண்டும் விசும்ப ஆரம்பித்தாள்.

“அம்மா அழாதேம்மா ப்ளீஸ்…” இப்போது சம்பத் தன் தாயை நெருங்கி உட்கார்ந்தான். அவள் தலையைத் தன் தோளில் சாய்த்து ஆதரவாக அணைத்துக்கொண்டான்.

“உன் அப்பா உன்னை ஆசையாத் தூக்கி தன் மார்லே, தோள்லே, போட்டுக்கிட்டு
“சம்பத்து… நீ என் சம்பத்துடா… நீ என் செல்வம்டான்னு கொஞ்சுவாரு. ஆனா என்னைத் தீண்டறதுக்கு மட்டும் அவர் முயற்சி பண்ணதே கிடையாது; என் புருஷனோட கட்டுப்பாட்டை பாத்தேன். அவரோட மனசு உரத்தைப் பாத்தேன்; மெள்ள மெள்ள உன் அப்பாவை என் முழுமனசோட நேசிக்க ஆரம்பிச்சேன்டா.”

“உங்கப்பா என்னை எப்பவுமே வெறுத்ததேயில்லடா; ஒரு வார்த்தைக்கூட என்னையோ, என்னை கைவிட்டுட்டு ஓடிப்போனவனைப்பத்தியோ தப்பா பேசினதேயில்லை; அந்த ஒரு வருஷக்காலத்துல, உங்கப்பா தனக்குத்தானே அவர் போட்டுக்கிட்ட கோட்டைத் தாண்டி என்னை தொட்டது இல்லையேத் தவிர வேற எந்தக்குறையும் வெக்கலேடா. இந்த மாதிரி நல்ல மனுஷனை நான் அலைக்கழிச்சதை நினைச்சு ஒரு தரம் செத்துப்போயிடலாமாங்கற முடிவுக்கு வந்தேன். ஆனா உன்னை விட்டுட்டு போறதுக்கு எனக்கு மனசு வரலேடா”

“ராணீ…போதும்டீ…” நல்லசிவம் தன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

“அப்ப நான் இருபத்தஞ்சு வயசு பொண்ணுடா; என் ஒடம்பும் அந்த வயசுக்கே உண்டான, இயற்கையான, இயல்பான, ஆம்பிளை சுகத்துக்கு அலைஞ்சுது. என் உடம்பு தினவை என்னால தாங்கிக்க முடியாம, என் புருஷனோட அணைப்புக்கும் ஆதரவுக்கும் ஏங்கினேன். எப்படியோ ஒரு வருஷம் நானும் பல்லைக்கடிச்சுக்கிட்டு பொறுமையா இருந்தேன். உங்கப்பா தான் எடுத்த முடிவுல நிலையா உறுதியா நின்னாரு.”

“உனக்கு மூணாவது பொறந்த நாள்; நூறு பேரை வீட்டுக்கு கூப்பிட்டு தாம் தூம்ன்னு உன் பொறந்த நாளை கொண்டாடினாரு. அன்னைக்கு ராத்திரி எனக்கு இவர்கிட்ட இருந்த உரிமையை நான் நிலைநாட்டிக்கிட்டேன். உங்க அன்பு இல்லாம என்னால வாழமுடியாதுங்கன்னு இவரை கட்டிப் புடிச்சிக்கிட்டேன். இவரு பெரிய விஸ்வாமித்திரன் மாதிரி ஒதுங்கி ஒதுங்கிப்போனாரு.” ராணி தன் கணவனைப்பாத்து விஷமத்தனமாக சிரித்தாள்.

“அப்புறம் என்னம்மா ஆச்சு?” சம்பத் வெட்கத்துடன் தன் தந்தையைப்பார்த்தான்.

“அப்பனை மாதிரிதானே புள்ளே நீயும் இருப்பே… வெக்கம் கெட்டவனே. அப்புறம் என்னாங்கறியேடா? இதுக்கு மேல சொல்றதுக்கு இன்னும் என்னடா பாக்கி இருக்கு?”

“அம்மா சொல்லும்மா…”

“உங்கப்பன் பெரிசா பந்தா காட்டினாரு. விடுவனா நான்? அஞ்சு நிமிஷம் டயம் குடுக்கறேன்… வந்து கட்டில்லே என் கூட ஒழுங்கு முறையா படுக்கணும் இல்லே… உங்க புள்ளை கழுத்தை நெறிச்சி கொண்ணுட்டு நானும் செத்துடுவேன்னு கூச்சப்போட்டு சீன் காட்டினேன். பயந்துட்டாரு மனுஷன்.”

“நான் ஒண்ணும் பயப்படலேடா… சும்மா கதை வுடறா உங்காத்தாக்காரி…”

“இல்லேன்னா என்னை நீங்க கொண்ணுடுங்கோன்னு நடு ராத்திரியில டிராமா போட்டேன்.. பக்கத்துவூட்டுகாரங்க எழுந்து வந்துட்டாங்க…” ராணி ஹோவென சிரித்தாள். நல்லசிவமும் சிரித்தார்.

“எட்டு தரம் என் வூட்டுக்கு ஆள் அனுப்பி என்னை கட்டிக்கிட்டவரு என்னைக் கொண்ணுடுவாரா? இல்லே என்னை விட்டுட்டுத்தான் ஓடிடுவாரா? அப்படி இவரை ஓடத்தான் நான் விட்டுடுவேனா? சும்மா பொழுது போகமா கதை சொல்றாரு. நானும் சரி சரின்னு தலையாட்டிக்கிட்டு இருக்கேன்.”

“அம்மா நிஜமாவே எங்கப்பாவும் நீயும் சூப்பர் ஜோடிம்மா… அப்பா உன் மேல கோவப்பட்டதே கிடையாதாம்மா?”

“சுகன்யாவை நீ எச்சையிலைன்னு சொன்னியே; உன் மேல இருக்கற கண்மூடித்தனமான பாசத்துல, நானும் உன் கூட சேர்ந்து அர்த்தமில்லாம சிரிச்சனே; அன்னைக்குத்தான்டா உங்கப்பாவுக்கு என் மேல நிஜமான கோவம் வந்திச்சி…”

“ம்ம்ம்… ஆமாம்மா அன்னைக்கு நானும் அப்பாவைப் பாத்து நிஜமாவே பயந்துட்டேன்.”

“உன் கல்யாணத்துக்கு முன்னாடீ நீயும்தானே உன் காதலனை கட்டிகிட்டு கொஞ்சியிருக்கே; என்னைக்குமே உன்னை நான் எச்சையிலைன்னு சொன்னதில்லையேடீ? அப்படியிருக்கும் போது இன்னொரு பொண்ணைப்பாத்து அசிங்கமா நீ சிரிக்கலாமா; அது ஞாயமாடீன்னு என் மேலக் கோவப்பட்டார்… வீட்டைவிட்டு போறன்னு கிளம்பினாரு… நான் எப்படி அவரை நிறுத்தினேன்னு மட்டும் என்னைக் கேட்டுடாதே?” ராணி மீண்டும் உரத்த குரலில், தன் கணவரைப்பார்த்து நமுட்டுத்தனமாக சிரித்தாள்.

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.