கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“ஏய்… உன்னை என்னப்பண்றேன் பாரு? சுகன்யா வேகமாக சுனிலை நெருங்கினாள். அவன் பால் மனதில் பொங்கிய நட்புடன், சினேகிதத்துடன், விளையாட்டாக, அவன் வலது தோளில் ஓங்கி ஒரு அடி விட்டாள். அவளிடமிருந்து மேலும் அடி வாங்குவதை தவிர்ப்பதற்காக சுனில் தன்னை நோக்கி வந்த சுகன்யாவின் வலது கரத்தை பிடித்தான்.

சுகன்யாவின் கை சுனிலின் தோளில் படிந்த நேரத்தில் அந்த அறைக்குள் நுழைந்தான் செல்வா. இரண்டு நாட்களுக்கு முன், மீனாவுக்கு வாட்ச் வாங்கிய கடையில், தான் சுகன்யாவுக்கு ஆசையுடன் வாங்கிக்கொடுத்த ரோஜா நிற கைக்குட்டை, சுனிலின் கையிலிருந்ததை கண்ட செல்வாவின் முகம் சட்டென கருத்தது.

அறைக்குள் நுழைந்த செல்வாவை தன் ஓரக்கண்ணால் கவனித்த சுனில் சுகன்யாவின் கையை தன் கரத்திலிருந்து எந்தவித பரபரப்புமில்லாமல் நிதானமாக விடுவித்தான். சுகன்யாவின் முகத்தைப்பார்த்தான். அவள் முகத்திலும் பதட்டேமேதும் இல்லை என்பதை உணர்ந்து மனதுக்குள் நிம்மதியானான்.

ஆனால் தன்னை நோக்கிய செல்வாவின் முகம் வினாடிக்கும் குறைவான நேரத்துக்கு சட்டென மாறியதையும் அவன் கவனிக்கத்தவறவில்லை. சட்டென தன்னைச் சுதாரித்துக்கொண்ட சுனில் தன் சீட்டிலிருந்து எழுந்து செல்வாவை விஷ் செய்தான்.

“குட்மார்னிங் சார்…”

“குட்மார்னிங் மிஸ்டர் சுனீல்… ஹவ் ஆர் யூ?”

செல்வா தன் மனதுக்குள் விருப்பமேயில்லாமல், சுனிலுக்குப் பதிலளித்தான். அறைக்குள் வராமல் வாயிலிலேயே சில வினாடிகள் நின்ற செல்வா, மேற்கொண்டு எதுவும் பேசமால் அங்கிருந்தே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

“செல்வா… ஒன் செகண்ட்” சுகன்யா அவன் பின்னால் வேகமாக ஓடினாள்.

‘சுகன்யா நீங்க மிஸ்டர் சுனிலோட பிஸியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நீங்க ஃபிரீ ஆனதும், கேன் யூ கால் மீ ப்ளீஸ்?” செல்வா அறைவாசலில் நின்றவாறே முகத்தில் ஒரு ஏளனப்புன்னகையுடன் பேசினான். அவன் பேசியதைக் கேட்ட சுனில் ஒரு நொடி தனக்குள் அதிர்ந்தபோதிலும், தன் அதிர்ச்சியை முகத்தில் காட்டிக்கொள்ளவில்லை.

“அயாம் நாட் பிஸி… நீ எதுக்கு வந்தேன்னு சொல்லாமலேயே திரும்பிப் போனா என்ன அர்த்தம்?” செல்வாவை நெருங்கிவிட்ட சுகன்யா மெல்லியக்குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“நான் என்ன சொல்லணும்ன்னு எதிர்பாக்கறே நீ?” செல்வாவின் குரலில் கேலியிருந்தது.

“நீ ஏதோ சொல்லவந்தேன்னு நான் நினைச்சேன்..”

“உன்னைப்பாக்க நான் உன் ரூமுக்கு வரக்கூடாதா? இல்லே வர்றதுக்கு முன்னாடீ உங்கிட்ட சொல்லிட்டுத்தான் வரணுமா?”

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.