கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“என்னங்க நீங்களும் ஏன் அவன் கிட்ட சின்னப்புள்ளைத்தனமா கொக்கரிக்கறீங்க?”

“சும்மா இருடீ… இவன் காதல் எங்கப்போய் முடியப்போவுதோ? சுந்தரிக்கும், அவ புருஷனுக்கும் நம்ம மேல மதிப்பும், மரியாதையும் இருக்கவேதானே, நேரா நம்ம வீட்டுக்கு வந்து சுகன்யா கல்யாணத்துக்கு மொறையா மரியாதையோட தாம்பூலம் வெச்சாங்க?”

“சரி… இப்ப எதுக்காக நீங்க இப்படி குதிக்கறீங்க…?” ராணி தன் குரலை உயர்த்தினாள்.

“என்னாடீ நீ புரியாம பேசறே? இவன் சொல்ற கதையெல்லாம் சுகன்யாவோட அப்பனுக்கு தெரிஞ்சா என்னை கால் காசுக்கு மதிப்பானாடீ? என்னையும் உன்னையும் நிக்க வெச்சு செருப்பால அடிப்பான். இவன் பண்ண வேலைக்கு என்னடீ அர்த்தம்? கொஞ்சமாவது இவனுக்கு புத்தி இருக்க வேணாம்? இவனும் இவன் காதலும்.. எக்கேடோ கெட்டு குட்டிச்சுவராப் போங்க…” நல்லசிவம் வெறுப்புடன் பேசிகொண்டே அந்த இடத்தை விட்டு எழுந்தார்.

“சுகன்யா என்னடா சொன்னா..?”

“அத்தான்… ஒரு ஆறு மாசம் முன்னாடி உங்க அன்பை எங்கிட்ட சொல்லியிருந்தா… உங்க காதலை நான் ஏத்துக்கிட்டு இருப்பேன்… இப்ப நேரம் கடந்து போச்சுன்னா…”

“ம்ம்ம்.. சுகன்யா ஞாயமாத்தான் பேசியிருக்காடா …” ராணிக்கு அவன் சொன்னதைக்கேட்டதும் சந்தோஷமாக இருந்தது.

“எனக்கு அண்ணன் தம்பி இல்லே; எனக்கு ஒரு கஷ்டம்ன்னா நீங்கள்லாம்தான் எனக்கு கை கொடுக்கணும்; உங்களை நான் என்னோட உறவா மட்டும் நினைக்கலே; என்னோட நல்லா நண்பனாவும் டீரீட் பண்றேன். இந்த நிமிஷத்துலேருந்து நாம ரெண்டு பேரும் உண்மையான ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்ன்னு சொன்னா…”

“புத்திசாலி பொண்ணு… சரியாத்தான் சொல்லியிருக்கா; இதுக்கு மேல வேற என்னச்சொல்லுவா? இவன் கிட்ட ஐ லவ் யூன்னா சொல்லுவா…” நல்லசிவத்தின் மனதில் சுகன்யா மேலிருந்த மதிப்பு மேலும் கூடியது.

“அம்மா… என் காதலை அவகிட்ட சொன்னதுக்கு அப்புறமா, இன்னும் ஒரு தரம் கூட பேசலைம்மா… அவளும் எங்கிட்ட பேசலை. என் காதலை என் மனசுக்குள்ளத்தான் வெச்சிக்கிட்டு இருக்கேன்… நான் எங்கேயோ இருக்கேன்… அவ எங்கேயோ இருக்கா? என் மனசுக்குள்ள இருக்கற காதலாலே யாருக்கு என்னப்பிரச்சனைம்மா?”

“சத்தியமா சொல்றேம்மா.. சுகன்யாவோட கல்யாண வாழ்க்கையில நான் எந்த பிரச்சனையையும் எப்பவுமே உண்டு பண்ணமாட்டேன்.. என் மனசுல இருக்கற காதலைப்பத்தி யார்கிட்டவும் எப்பவும் பேசமாட்டேன்… நீங்க சொல்ற மாதிரி அவளை சட்டுன்னு என்னால மறந்துட முடியாதும்மா. கொஞ்ச நாளைக்கு என்னை என் போக்குல விட்டுங்கம்மா”

“சரிப்பா… எங்க மனசுல இருக்கற ஆசையையும் நீ புரிஞ்சுக்கோ… எங்க குழந்தையும் மத்தவங்களை மாதிரி சந்தோஷமா வாழணும்ன்னு நாங்க விரும்பறது தப்பா?. உன் குழந்தையை நாங்க தூக்கி கொஞ்சனும்ன்னு நினைக்கறது தப்பா? நம்ம வம்சம் வளரணும்டா..” ராணி தன் மனதில் இருப்பதை பொறுமையாக சொன்னாள்.

“ப்ச்ச்ச்.. சாத்தான் கிட்ட நீ வேதம் ஓதறடீ… எழுந்திருடி அடுத்த வண்டியைப் பிடிச்சு ஊருக்கு போய் சேருவோம்..”

“அப்பா… தயவு செய்து நீங்க சும்மா
“ப்ச்ச்ச் ப்ச்ச்ச்சுன்னாதீங்க… நீங்க உங்க வாழ்க்கையில ஒரு விஷயத்துல பிடிவாதமா இருந்தீங்கன்னு இப்பத்தான் என் அம்மா சொன்னாங்க; அவங்களும் ஒரு நேரத்துல ஒரு விஷயத்துல உங்கக்கிட்ட பிடிவாதமா இருந்து இருக்காங்க… நான் உங்க பிள்ளை… என்னை சும்மா வெறுப்பேத்தாதீங்க… அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.” அதுவரை பொறுமையாக இருந்த சம்பத் விருட்டென எழுந்து தன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

நல்லசிவமும், ராணியும் சம்பத்தின் அறையில் ஒரு இரண்டு மணி நேரம் நிம்மதியாக தூங்கி எழுந்தார்கள். மாலை ஆறு மணியளவில் ராணி போட்டுக்கொடுத்த காஃபியை ருசித்து குடித்துவிட்டு நல்லசிவம் ஒரு அரை மணி நேரம் காலாற நடந்துவிட்டு திரும்பி வந்தபோது, ராணி சம்பத்தின் நண்பன் ரமேஷிடம் ஏதையோ சொல்லி சிரித்து சிரித்து கதை பேசிக்கொண்டிருந்தாள்.

சம்பத் தன் செல்லில் மூழ்கியிருந்தான். நல்லசிவம் வீட்டுக்குள் நுழைந்து லானில் நின்று கொண்டிருப்பதை கூட அவன் கவனிக்கவில்லை. தன் மகன் பேசிய கடைசி சில வார்த்தைகள் அவர் காதில் மிகத்தெளிவாக விழுந்தது. காதில் வந்து விழுந்த அந்த வார்த்தைகளை கேட்டதும் அவர் திடுக்கிட்டுப்போனார். தன் மகனின் தலையெழுத்தை நொந்துகொண்டார். யாரிடமும் எதுவும் பேசாமல், சம்பத்தின் அறைக்குள் சென்று மீண்டும் படுத்துக்கொண்டார்.

இரவு நேர உணவை மட்டும் தங்கள் வீட்டிலேயே சம்பத்தும், ரமேஷும் சமைத்துக்கொண்டார்கள். அன்று சமையலை ராணி கவனித்துக்கொண்டாள். ரமேஷும், ராணியும் சாப்பிடும் போதும் அரட்டையடித்துக்கொண்டே இருந்தார்கள். சம்பத்தும், நல்லசிவமும் அமைதியாக உண்டு முடித்தார்கள்.

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.