கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“சர்வர்ல இருக்கற டேட்டாவுல, இங்கேருந்து அடிஷன், டிலீஷன் எதுவும் பண்ணமுடியாது. இதெல்லாம் உங்களுக்கு நல்லாத்தெரியும். நீங்க என்னோட சீனியர். நீங்க பண்றது தப்புன்னு நான் எப்படி சொல்றது?”

“ஓ மை காட்… நேத்து இந்த செல்வா அடிச்ச கூத்துல, என் பர்சனல் பிராப்ளத்தை ஆஃபிஸ் நேரத்துல மனசக்குள்ள வெச்சிக்கிட்டு, என்னை நானே ஒரு வடிகட்டின முட்டாள்ன்னு இவன் கிட்ட ப்ரூவ் பண்ணிட்டேன். ச்சே… நான் ஒரு பைத்தியம்…” தன் வாய்க்குள்ளே முனகிக்கொண்டாள் சுகன்யா.

சுனில் தன் சீட்டை விட்டு மெல்ல எழுந்தான். தன் டேபிளின் மேலிருந்த வாட்டர் ஜக்கை எடுத்தான். சுகன்யாவின் கிளாசை குளிர்ந்த நீரால் நிரப்பினான்.
“சுகன்யாஜீ, வாட்டர் கூலர் எங்கேயிருக்குன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். ப்ளீஸ் என் மேல கோவப்படாம, இந்த தண்ணியை ஒரு முழுங்கு குடிங்க. உங்க தலையில இருக்கற சூடு கொஞ்சம் கொறையும்.” பவ்யமாக தன் உடலை வளைத்து அவளிடம் கண்ணாடி டம்ளரை நீட்டினான்.

சுகன்யாவுக்கு அவன் பவ்யத்தையும், அவன் உதட்டில் தவழ்ந்து கொண்டிருக்கு நமட்டுச்சிரிப்பையும் பார்த்ததும், அவளையும் அறியாமல் சிரிக்க ஆரம்பித்தாள். தான் செய்து கொண்டிருந்த பைத்தியக்காரத்தனத்தை உணர்ந்து, பத்து நொடிகள் வாய்விட்டு சிரித்ததும், அவள் மனதில் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியது.

“அரே சுனீல்… உனக்கு ஒடம்புல ரொம்பவே கொழுப்பு ஏறிப்போயிருக்கு. அரை மணி நேரமா உன் சீனியர் நான் என் மண்டையை தேவையில்லாம ஒடைச்சிக்கிட்டு இருக்கேன். இது உனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறமும் வேலை நேரத்துல சினிமா பாட்டு கேக்கறே?”

“யெஸ் மேம்…” குனிந்தான் சுனில்.

“என்ன யெஸ்?”

“சாரீ மேம்…” சுனிலின் முகத்தில் புன்னகை மேலும் விரிந்தது.

“நானும் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்… வந்ததுலேருந்து குஷியா நேகா ஷர்மாவை டாவடிச்சிக்கிட்டு இருக்கே? ஏண்டா இப்படி பண்றேன்னு கேட்டா, நான் ஜூனியர் நீ சீனியர்ன்னு இது வேற நக்கலா?”

“வெரி வெரி சாரீ மேம்…” மேலும் போலியாக தன் உடலை வளைத்து பம்மினான் சுனில்.

“எனக்கு கோவம் வந்திச்சின்னா இப்ப இங்க என்ன நடக்கும்ன்னு எனக்குத் தெரியாது?”

சாவித்திரியின் ஸ்டைலில், தன் கண்களை உருட்டி விழித்து, கன்னத்தையும், மூக்கையும் சொறிந்து கொண்டே, சுகன்யா, தன் கையிலிருந்த கர்சீஃபை சுருட்டி சுனிலின் முகத்தில் விளையாட்டாக வீசியெறிந்தாள்.

“மேம்… உங்க கர்சீஃப் ரொம்ப வாசனையா இருக்கு. உங்க ஞாபகமா, லெட் மீ கீப் திஸ் வித் மீ… வாட் டூ யூ சே?”

சுனில் தன் மேல் எறியப்பட்ட ரோஜா வண்ண கைக்குட்டையை நீளமாக ஒரு முறை முகர்ந்தான். அழகான ஒரு பெண்ணின் கைக்குட்டை இந்த அளவுக்கு வாசனையாக இருக்குமா? கைக்குட்டையே இந்த அளவுக்கு வாசனையா இருக்குன்னா…. செல்வா நிஜமாவே குடுத்துவெச்சவன்… அவன் மனமும் உடலும் சிலிர்த்தன.

“சுனில்… என் ஹேங்கியை திருப்பி குடுத்துடுப்பா. ப்ளீஸ் அதை மோந்துப்பாக்காதேப்பா… போயும் போயும் அழுக்கை மோந்து பாக்கிறயே?” சுகன்யா தவிப்புடன் தன் இடது கையால், அவன் கரத்திலிருந்த தனது கர்சீஃபை பிடுங்க முயற்சித்தாள். தன்னுடைய வலது கையால் அவனை அடிக்கப் போவது போல் பாவனை செய்தாள். சுனில் அவள் கைக்குட்டையை தன் இடதுகைக்கு மாற்றிக்கொண்டான்.

“கூல் டவுன் மேம். என்னை நம்பி இந்த வேலையை எங்கிட்ட விட்டுடுங்கன்னு ஏற்கனவே நான் நாலு தரம் சொல்லிட்டேன். இந்த பத்து நாள்லே, நீங்க டெல்லிக்கு போகறதுக்கான ஏற்பாடுகளை கவனியுங்க. உங்க பர்சனல் வேலையை மட்டும் பாருங்க. பர்கெட் அபவுட் சாவித்ரி. சாவித்திரியோட பாட்டி, தாத்தா எல்லாரையும் நான் கவனிச்சிக்கறேன். அவங்களையெல்லாம் என் கிட்ட விட்டுடுங்க.”

“தேங்க்யூ சுனில்…” சுனிலின் இதமான பேச்சைக்கேட்ட சுகன்யா நிஜமாகவே நெகிழ்ந்து போனாள்.

“சுகன்யா… இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்றீங்க…”

“சுனீல்… அயாம் சாரீப்பா… ரியலி அயாம் சாரி… நீ சொன்னது சரிதான்… இன்னைக்கு நான் என் இயல்பான மூட்லே இல்லே. உன்கிட்ட தேவையில்லாம நான் எரிச்சல் பட்டுட்டேன்.”

“புரியுது மேம்… இந்த ஜூனியருக்கு ஒரு சின்ன சந்தேகம்.”

“என்ன சந்தேகம்?”

“என்னோட சீனியருக்கு, அவங்க லவ்வரோட எதாவது சண்டையா?” சுனில் கண்களில் வழியும் குறும்புடன் அவளை நோக்கி கண்ணடித்தான்.

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.