கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

என் அத்தான் சம்பத் எவ்வளவு டீசன்ட்னா மனுஷன்? சுகன்யா, உன்னை நான் அனாவசியமா தொந்தரவு பண்ணமாட்டேன்னு சுவாமிமலையில சொல்லிட்டுப் போன மனுஷன், ஒரு மாசத்துக்கு அப்புறம் நேத்துதான் முதல் தரமா போன் பண்ணார்?
இது செல்வாவுக்குத் தெரியுமா? என் செல்வாவை ஒரு இண்டீஸண்ட் ஃபெலோன்னு சம்பத் அத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கமாட்டாரா?

செல்வா என்னை மட்டுமா தப்பா நினைச்சான்? அவன் செய்ததுதான் சரிங்கற மாதிரி
“இதுதான் நான்னு’, அகங்காரமா பெரிசா இங்கீலீஷ்லே பேசி சினிமாவுல வர்ற வில்லன் மாதிரி சிரிக்கிறான்? செல்வாவோட இந்த அகங்காரத்தைத்தான் என்னால சுத்தமா சகிச்சிக்கவே முடியலே?

செல்வாவின் நடத்தையால், சுகன்யாவுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலால், அவளால், முந்தின இரவு சரியாக தூங்க முடியவில்லை. தேவையான உறக்கம் இல்லாததால், அவள் கண்களில் மெலிதான வலியும், எரிச்சலும் இருந்து கொண்டேயிருந்தன.

லஞ்சுல மறந்துடாம அத்தானுக்கு போன் பண்ணி சாரி சொல்லணும். சுகன்யாவின் மனசு ஆஃபீஸ் வேலையிலும், தன் சொந்தப்பிரச்சனைகளிலும் செக்குமாடாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.
“சுனோ நா சங்குமர்மர் கி ஏ மினாரே…
குச் பீ நஹி ஹை ஆகே துமாரே…
ஆஜ் சே தில்பே மேரே ராஜ் துமாரே…
தாஜ் துமாரே…!”

சுகன்யா தன் இடதுபுறம் திரும்பினாள். சுனில் பரத்வாஜ், கம்ப்யூட்டர் ஸ்கிரீனில், ஜாக்கி பாக்னானியும், நேகா ஷர்மாவும் தங்கள் கண்களில் பொங்கும் எல்லையில்லாத காதலுடன், ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டிருந்ததை கண்கள் விரிய பார்த்துக்கொண்டிருந்தான். கனவுலகில் மிதந்துகொண்டிருந்த சுனில், அர்ஜித்சிங்குடன் சேர்ந்து அந்தப்பாடலை மிக மிக இனிமையாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

டில்லிக்கு கிளம்பி போறதுக்கு முன்னாடி, இந்த வீக் எண்ட்க்குள்ள, பைல் லிஸ்ட் டேட்டா அப்டேஷனை நான் முடிச்சே ஆகணும்? சார்ஜ் ரிப்போர்ட்ஸ் பிரிபேர் பண்ணணும். இவென்ட்ரீஸ் தயார் பண்ணி முடிக்கணும். இப்படி ஆயிரம் வேலை தலைக்கு மேல குவிஞ்சிக்கிடக்கு. இந்த சுனிலை எனக்கு அஸிஸ்ட் பண்ணச்சொல்லியிருக்காங்க.

சாவித்ரி சீட்டுல இல்லேன்னதும், இவன் ஹாயா நேகா ஷர்மாவை சைட் அடிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான். இவனுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? சுகன்யாவுக்கு அடிவயிற்றிலிருந்து எரிச்சல் கிளம்பியது.

“மிஸ்டர் சுனீல்… என்னப்பண்றீங்க நீங்க? இது ஆஃபீஸ்ங்கறது உங்களுக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும். சாவித்திரி வந்தாள்ன்னா என் கழுத்தைத்தான் அறுப்பா? நீங்களும் நானும் செய்து முடிக்க வேண்டிய ஆஃபிஸ் வேலைக்கு நான்தான் பதில் சொல்லியாகணும். நீங்க என்னடான்னா, ஊர் உலகத்தையே மறந்து பாட்டு பாடிகிட்டு உக்காந்து இருக்கீங்க?”

“கோச்சீக்காதீங்க மேம். இதுவரைக்கும், இந்த இரண்டு வாரத்துல, இந்த ஆஃபீஸ்ல என்னை மரியாதையா, ஒரு மனுஷனா நடத்தினது நீங்கதான். என்னை அதட்டாம இருந்த ஒரே ஆள் நீங்கதான்னு மனசுக்குள்ள ரொம்ப சந்தோஷமா இருந்தேன். நான் கும்பிடற அந்த அனுமந்தனுக்கு இது பொறுக்கலை. அவன் வேலையை அவன் காமிச்சிட்டான்.” சுகன்யாவிடம் பயப்படுவதுபோல் போலியாக அவன் நடித்தான்.

“சும்மா நடிக்காதீங்க நீங்க? இன்னைக்கு நம்ம டிவிஷன் டேட்டா ஏன் சர்வர்லே சேவ் ஆகவே மாட்டேங்குது? லாஸ்ட் ஃப்ரைடே இந்த பைல்லே நீங்கதானே வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தீங்க?சீக்கிரமா எழுந்து வந்து இந்த பைல்லே என்ன ப்ராப்ளம்ன்னு கொஞ்சம் பாருங்க?”

“மேம்… நானும் காலையிலேருந்து பாக்கறேன். உங்களுக்கு என்னாச்சு? ஆர் யூ ஆல்ரைட்? உங்களுக்குத் தலை கிலை வலிக்குதுன்னா காஃபி ஆர்டர் பண்ணட்டுமா?” சுனில் மென்மையாக சிரித்தான்.

“எனக்கென்ன ஆச்சு… அயாம் ஆல்ரைட்? கேண்டீனுக்கு போற வழி எனக்குத் தெரியும். நீங்க உங்களை பாதர் பண்ணிக்க வேண்டாம். நான் சொல்றதை மட்டும் செஞ்சீங்கன்னா போதும்…”

“சாரி மேம்…” தன் சிஸ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்தினான். பென் டிரைவை உருவி தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.

சுகன்யா ரொம்ப சாஃப்டான பொண்ணு. ஹைலி டீசண்ட் கேர்ல். பாவம் இவளுக்கு இன்னைக்கு என்னப்பிரச்சனையோ? இன்னைக்கு கொஞ்சம் கடுப்படிக்கறா? சுனில்… அவ பேசறதை நீ சீரியஸா எடுத்துக்காதேடா..!
“மிஸ்டர் சுனீல், ஐ திங்க் சிஸ்டத்துல ஏதோ வைரஸ் பிரச்சனையிருக்கு. ஐ.டி.க்கு போன் பண்ணி நம்ம டிவிஷன் சிஸ்டத்தையெல்லாம் ஒரு தரம் ஸ்கேன் பண்ணச்சொல்லுங்க.” பதட்டத்துடன் பேசிய சுகன்யா தன் தலையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

“மேம்… எனக்கு நல்லாத்தெரியுது. நீங்க ஏதோ எரிச்சல்ல இருக்கீங்க? அந்த எரிச்சலை இந்த அப்பாவி மேல ஏன் காட்டறீங்க?” சுனிலின் முகத்தில் இன்னும் புன்னகை மிச்சமிருந்தது.

கடந்த இரண்டு வாரத்தில் சுகன்யா சுனிலின் நடவடிக்கைகளை அலுவலகத்தில் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். தன் வேலையில் அவன் எந்தக்குறையும் வைத்ததில்லை. எல்லோரிடமும் பணிவாக, இதமாக பேசினான். குறிப்பாக பெண்களிடம் மரியாதையாக நடந்துகொண்டான். பங்ச்சுவலாக ஆஃபிசுக்கு வந்து கொண்டிருந்தான். தேவையில்லாமல் தன் சீட்டை விட்டு நகருவதில்லை.

‘நீட் அண்ட் கிளீன் பாய். எ தரோ ஜெண்டில்மேன்! சுனிலுக்கு சுகன்யா தன் மனதுக்குள் கொடுத்திருந்த சர்டிஃபிகேட் இது. ஆனால் இன்று அவன் தனக்கு காட்டிய மிதமிஞ்சிய பணிவும், விஷமப் புன்னகையுமே சுகன்யாவுக்கு எரிச்சலைக்கொடுத்தன.

“சுனீல்.. வாட் டூ யூ மீன்? நான் எரிச்சல்லே இருக்கேன்னு உங்களுக்கு யார் சொன்னது? இப்ப எதுக்கு நீங்க என்னைப்பாத்து கிண்டலா சிரிக்கிறீங்க?” சுகன்யா மெல்லியகுரலில் சீறீனாள்.

“மேம்… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. டேட்டா ஈஸ் அல்ரெடி வெரிஃபைட் அண்ட் சென்ட் டு ஐடி டிவிஷன். வெள்ளிகிழமையன்னைக்கே நான் இந்த லிஸ்டை சர்வர்லே அப்லோட் பண்ணிட்டேன். அப்ப நீங்களும் என்னோடதான் இருந்தீங்க. ஏதோ நினைப்புல திரும்பவும் அதே பைல அதே பேர்ல டேரக்டா சர்வர்ல அப்லோட் பண்ண டிரை பன்றீங்க.”

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.