கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 51 10

“ம்ம்ம்…”

“அவளும் ஓ.கே. ன்னுட்டாளாக்கும்?” பொறாமையில் அவன் கண்கள் விரிந்து சுருங்கியது.

“அவட் ரைட்டா மாட்டேன்னுட்டா…”

“அப்புறம் என்னா மசுருக்குடா…
“இக்கடச் சூடு’? ரொம்பத்தான் துள்றே?” ரமேஷ்க்கு இப்போது நிஜமாகவே எரிச்சலும், சந்தோஷமும் ஒன்றாகக்கிளம்பியது.

“என் ஆளு… இன்னொருத்தனை டீப்பா லவ் பண்றாடா; அவங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மென்ட்டும் முடிஞ்சிடிச்சி” சம்பத் நிதானமாக பேசினான்.

“மாப்பு… உனக்கு மண்டையில ரெண்டு ஸ்குரூ லூசாயிடிச்சின்னு நினைக்கறேன்… ஜல்தியா டைட் பண்ணிக்க… இல்லேன்னா”

“இல்லேன்னா?”

“இதுக்கு மேல இங்க நின்னா… என் தலையில இருக்கற நாலு மசுருல ரெண்டு கொட்டினாலும் கொட்டிப்போயிடும்…” ரமேஷ் தன் தலையைச் சொறிந்து கொண்டு அவசரமாக அறையை விட்டு வெளியில் ஓடினான்.

ஹோவென ஓங்காரமான குரலில் நகைத்த சம்பத்தின் முகத்தில் சிரிப்புடன் இலேசாக விரக்தியும் படர்ந்தது. என் மனசுக்கு பிடிச்ச பொண்ணை நான் லவ் பண்ணக்கூடாதா? இவன் எதுக்கு இவ்வளவு காண்டாவறன்? என்னை பைத்தியம்ன்னு சொல்லாம சொல்லிட்டுப் போறான்? என்னோட உண்மையான காதலைப்பத்தி இந்த மயிரானுக்கு இன்னா தெரியும்?

“டிங்க்…டிங்க்க்…டிங்க்…” வாசலில் காலிங் பெல் ஒலித்தது.

‘யாராக இருக்கும்? ரமேஷ்கிட்டத்தான் வீட்டோட டூப்ளிகேட் சாவி இருக்கே? என்ன மசுருக்கு மணியடிக்கறான்..? தொறந்துகிட்டு வரவேண்டியதுதானே? இடுப்பில் லுங்கியை இறுக்கிக்கொண்டு வாசலுக்கு விரைந்தான் சம்பத். கதவைத் திறந்தவன் ஆச்சரியமானன். ராணியும் நல்லசிவமும் நின்று கொண்டிருந்தார்கள்.

“என்னம்மா? சொல்லாமா கொள்ளாமா வந்து நிக்கறீங்க?” பெற்றவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் மனம் கங்கை வெள்ளமாக பொங்கியது.

“ஏன்டா உன்னைப் பாக்கணும்ன்னா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கிட்டுத்தான் வரணுமா?” பிள்ளையின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள் ராணி.

“அப்பா… எப்டி இருக்கீங்கப்பா… நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சா ஸ்டேஷனுக்கு வந்திருப்பேன்ல்லா…”

“நேத்து சென்னையில ஒரு கல்யாணம்ன்னு வந்திருந்தோம்… உங்காத்தாக்காரி உன்னை பாத்தாதான் ஆச்சுன்னு ஒத்தைக்கால்லே நின்னா… தாம்பூலம் கூட வாங்கிக்கலே… கிளம்பி வந்துட்டோம்.” நல்லசிவம் பிள்ளையின் முகத்தை பாசத்துடன் பார்த்தார்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ உங்க ரெண்டு பேரையும் நினைச்சுக்கிட்டேம்மா” பிள்ளை தாயின் இடுப்பைக்கட்டிக்கொண்டு கொஞ்சியது.

“சும்மா ஊத்தாதேடா நீ? நீ மொளை விட்டதுலேருந்து உன்னை நான் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்..” தாய் மகனின் கன்னத்தை வருடி ஆசையுடன் முத்தமிட்டாள்.

“நிஜம்மா சொல்றேம்மா… இன்னிக்கு ஞாயித்துக்கிழமையாச்சா? நீ பண்ற பொங்கல், வடை ஞாபகம் வந்திடிச்சிம்மா..”

“உன் புள்ளைக்கு நம்ம நினைவு வரலேடி.. நீ பொங்கற பொங்கல் ஞாபகம் வந்திச்சாம்… சந்தோஷம்தானே உனக்கு…?” நல்லசிவம் பேண்டிலிருந்து வேஷ்டிக்கு மாறிக்கொண்டிருந்தார். உள்ளத்தில் இருக்கும் நிறைவு முகத்தில் வருவதை அவரால் மறைத்துக்கொள்ள முடியவில்லை.

“பொங்கல்தானேடா வேணும்… இப்பவே நான் பண்ணிக்குடுக்கறேன்..”

“நீங்க குளிங்கம்மா… குளிச்சுட்டு ரெஸ்ட்டா உக்காருங்க; பத்தே நிமிஷத்துல நான் டிஃபன் வாங்கிட்டு வந்திடறேன்..” சம்பத் வேகமாக வெளியில் ஓடினான்.
“எங்கடா உன் ரூம் மேட் ரமேஷைக்காணோம்?” நல்லசிவம் தன் தலையின்கீழ் இரண்டு கைகளையும் செருகிக்கொண்டு, ஹாலில் வெறும் தரையில் படுத்திருந்தார்.

“நேத்து ராத்திரி எதோ பார்ட்டின்னு போனான்.. இன்னும் காணோம்…” ஒரு தலையணையை அவரிடம் நீட்டினான் சம்பத்.

“ம்ம்ம்… நீ போகலையாடா?” பார்ட்டின்னா எதையும் யோசிக்காமா எவ்வள்வு தூரம் வேணாலும் போறவனாசசே இவன்? மனதில் ஆச்சரியத்துடன், தன் கண்களை சுருக்கிக்கொண்டு மெல்லியக்குரலில் தன் மகனை உற்று நோக்கினார்.

“இல்லேப்பா. ஒரு மாசமாச்சு. பார்ட்டிகெல்லாம் போறதை நான் நிறுத்திட்டேன்.”

“கேட்டீங்களா அவன் சொல்றதை? ரொம்ப சந்தோஷமா இருக்குடா எனக்கு.” தன் கணவரை பெருமிதத்துடன் பார்த்த ராணியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.

“நீ உன் புள்ளையை மெச்சிக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்டீ; வீட்டுலேருந்து கொண்டாந்த அந்த பொண்ணு போட்டோவை இவனுக்கு காமிச்சியா?”

1 Comment

  1. Tere khatir Na suno

Comments are closed.