கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“சுந்தரீ…. உனக்கு என்ன நெஞ்சழுத்தம்டீ? இது உனக்கு அடுக்குமா? உன் புருஷனை உண்டு இல்லேன்னு நம்ம உறவுகாரங்க முன்னாடீ நிக்க வெச்சு கேள்வி கேக்கலைன்னா, என் பேரு ராணியில்லேன்னு, இவரோட அக்கா என் வீட்டுக்கு வந்து அப்படி ஒரு சண்டை இழுத்துட்டு போயிருக்காங்க…”

“ஏம்மா நல்லசிவம் மாமாவுமா உங்கிட்ட சண்டை போட்டாரு?”

“இல்லடீ… அவரு வரலை… உன் அத்தைதான் பத்ரகாளி மாதிரி ஒரு பேய் ஆட்டம் ஆடிட்டு போயிருக்காங்க…”

“என்கிட்ட இதைப்பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லே?” சுகன்யாவுக்கு பொறுக்கவில்லை.

“இதையெல்லாம் நீ தெரிஞ்சுக்கிட்டு வீணா மனசைக் கொழப்பிக்க வேண்டாம்ன்னுதான் உன் கிட்ட சொல்லலை…”

“மல்லிகா.. என்கிட்ட சண்டை போட்டதுலே தப்பில்லேங்க… இவரோட அக்கா, என் மாமனாரையும், மாமியாரையும் ஒரு புடி புடிச்சி… ஒரு வழி பண்ணிட்டாங்க…” நடராஜனைப் பார்த்தவாறே பேசிக்கொண்டிருந்த சுந்தரி தனக்கு மூச்சிறைக்க தான் பேசுவதை நிறுத்தினாள்.
“இவன் கல்யாண மேட்டரை ஆரம்பிச்சதுலேருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகிட்டுத்தான் இருக்கு? மல்லிகா தன் தலைமுடியை கோதிக்கொண்டாள்.

“ஒண்ணும் கவலைப் படாதே மல்லிகா… நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்… செல்வா கல்யாணம் நல்லபடியா நடக்கும்; கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லே… அதுக்கப்புறம்தான் வரக்கூடாது…” பத்மா மல்லிகாவுக்கு ஆறுதலாகப் பேசினாள்.

“உங்க வாய் முகூர்த்தம் சுகன்யா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்…” சுந்தரி பத்மாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். க்கூம்… குமாரசுவாமி தன் தொண்டையைக் கனைத்துக்கொண்டார். பேசத்தொடங்கினார்.

“இன்னும் இரண்டுமூணு வாரத்துலே சுகன்யா தன்னோட மேண்டேட்டரி ட்ரெய்னிங்குக்காக டில்லிக்கு போயே ஆகணுமாம்… திரும்பி வர மூணு மாசம் ஆகும்ங்கறா… செல்வா இதைப்பத்தி உங்கக்கிட்டே டிஸ்கஸ் பன்ணியிருப்பாருன்னு நினைக்கிறேன்…?”

“ஆமாம்… நேத்து ராத்திரிதான் சொன்னான்…” நடராஜன் தன் முகத்தை தடவிக்கொண்டார்.

“இருபது நாள்லே வானத்துல இருக்கற மூனுக்கே ரெண்டுதரம் போயிட்டு வந்துடலாம். ஆஃப்டர் ஆல்.. நம்பளால, ஒரு கல்யாணம் பண்ணமுடியாதா…? இவங்க கல்யாணத்தை, யாருக்கும் எந்தக்குறையும் இல்லாம, நான் முன்னே நின்னு பண்ணிவெக்கறேன்னு ரகு சொல்றார்…”

“நடராஜன்… நீங்க உங்க சவுகரியத்தைச் சொன்னா… மேரேஜ் டேட்டைப் நாமப் பிக்ஸ் பண்ணிடலாம். இதுல ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நாம கவனிக்கனும்…” குமாரசுவாமி ஹாலில் இருந்தவர்கள் முகங்களை நிதானமாக ஒரு முறைப் பார்த்தார். மல்லிகாவுக்கு அவர் எதையோ சொல்லத் தயங்குவது போல் பட்டது.

“சொல்லுங்கண்ணா.. உங்க மனசுல இருக்கறது எதுவாயிருந்தாலும், வெளிப்படையாச் சொல்லுங்க… இங்கே நாம நமக்குள்ளத்தானே பேசிக்கிட்டு இருக்கோம்… இங்கே வேத்து மனுஷா யாரும் இல்லையே?” மல்லிகா குமாரசுவாமியின் தயக்கத்தை நீக்க முயற்சி செய்தாள்.

“சொல்லுங்க குமார்.. மல்லிகா சொல்றது சரிதானே?” நடராஜன் முகம் சற்றே சீரியஸாக இருந்தது.

“அவசர அவசரமா இந்தக் கல்யாணத்தை முடிச்சிட்டு, சின்னஞ்சிறுசுங்க இதுங்க ரெண்டு நாள் சந்தோஷமா ஒண்ணாயிருந்துட்டு, சட்டுன்னு மூணாம் நாள்லேயிருந்து மூணுமாசம் ஒருத்தரை ஒருத்தர் பிரிஞ்சு இருக்கறதும் சரியில்லேன்னு நான் நினைக்கிறேன்…” குமாரசுவாமி சுகன்யாவைப் பார்த்தார்.

“நீங்க சொல்றது ரொம்பவும் சரி… கொழந்தைகள் மனசால, உடம்பால, சந்தோஷமா இருக்கணும்… அதுக்குத்தானே கல்யாணம், ஹனிமூன், அப்படி இப்படீன்னு பெரியவர்கள் ஒரு சிஸ்டத்தை உண்டாக்கி வெச்சிருக்காங்க… ராகவன் தன் நெற்றியை சொறிந்துகொண்டே பேசினார்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.