கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“அண்ணா.. கல்யாணங்கறது ஆயிரம் காலத்துப்பயிர்… அவசரப்படாம, நல்ல நேரம், முகூர்த்தம் பாக்கணும்… கல்யாணத்துக்கு மட்டுமில்லே.. அதை தொடர்ந்து வர்ற சடங்குகளையும் சுபநேரத்துலத்தான் பண்ணணும்…”

“எல்லாத்துக்கும் மேல, நமக்கு வேண்டிய உறவுகாரர்கள் எல்லோரையும் அழைச்சுத்தான் செய்யணும்… இப்போ கொஞ்சம் கோபமா இருக்கறவாளை சட்டுன்னு அப்படியே விட்டுடறாதா?” உஷா தன் அண்ணனை ஆமோதித்தாள். சுந்தரிக்கும் அவள் சொல்லுவது சரியெனப்பட்டது.

“அங்கிள், நீங்க தப்பா நினைக்கலேன்னா, பெரியவங்க பேசறப்ப, நடுவுல நான் ஒரே ஒரு வார்த்தை பேசலாமா?” செல்வா மெல்லிய குரலில் வினவினான்.

“நிச்சயமா… சொல்லுங்க மாப்பிளே…”

“சுகன்யா ட்ரெய்னிங் முடிஞ்சி திரும்பி வரட்டும்… உஷா அத்தை சொல்ற மாதிரி, அவசர அவசரமா எங்க மேரேஜ் நடக்கணுமான்னு நான் நினைக்கிறேன்… நீங்க என்ன சொல்றீங்கப்பா…?”

“சுகன்யா நீ என்னம்மா சொல்றே?” நடராஜன் சுகன்யாவை திரும்பிப்பார்த்தார்.

அதே நேரத்தில் சுகன்யாவின் செல் ஒலிக்க ஆரம்பித்தது. செல்லில் பளிச்சிட்ட நம்பரையும், பெயரையும் பார்த்தவுடன் சுகன்யாவின் முகத்தில் சட்டென இனம் தெரியாத ஒரு மிரட்சி பரவியது. சுந்தரியின் கூரிய கண்கள் தன் மகளின் முகத்தில் வந்த தீடீர் மாற்றத்தை கவனித்தது.

ம்ம்ம்ம்… சில சமயங்கள்லே நாம நினைக்கறது நடக்கறது இல்லேன்னு இப்பத்தான் பேசிக்கிட்டு இருந்தாங்க… மேன் ப்ரப்போசஸ் காட் டிஸ்போஸஸ்… என்னைப் பொறுத்தவரைக்கும் இது சரிதான் போல இருக்கே…

சில சமயங்கள்லே நாம எதிர்பாக்காததும் நடக்கும் அப்டீன்னு சொல்றாங்க… அப்படி சொல்றதும் உண்மையாத்தான் இருக்கு. அன்றைக்கு முன்தினம், கடற்கரையில், செல்வாவுடன் இருந்த போது உண்டான அதே இனம் தெரியாத பயம் அந்த வினாடியில் அவளை மீண்டும் தொற்றிக்கொண்டது.

இந்த நேரத்துலத்தான் இந்த
“கால்’ வரணுமா? சுகன்யா காலை அட்டண்ட் செய்வதா… வேண்டாமா என தயங்கினாள். சிணுங்கும் செல் ஓய்வுக்கு வந்தது. அப்பாடா என சுகன்யாவுக்கும் மூச்சு வந்தது.

‘அப்ப்பா… நான் என்ன சொல்றேன்னா…” அவள் பேசத் தொடங்கிய போது, அவளுடைய செல் மீண்டும் சிணுங்க ஆரம்பித்தது. செல்வாவை ஒரு முறை பார்த்தாள் அவள்.

செல்லின் டிஸ்ப்ளேயைப் பார்த்தாள் சுகன்யா. மீண்டும் அதே நம்பர். அதே பெயர். செல்லில் சம்பத்குமார் என்ற பெயர் மின்னிக்கொண்டிருந்தது.

சுகன்யாவின் செல் ஓயாமல் சிணுங்கிக் கொண்டிருந்தது. சம்பத்குமார் என்ற பெயர் அதில் விடாமல் மின்னிக் கொண்டிருந்தது.

‘சம்பத்… நான் இன்னொருத்தனை காதலிக்கறேன்… அவனோட என்னுடைய நிச்சயதார்த்தமும் முடிஞ்சிப்போச்சு… கல்யாணத்துக்கு தேதி குறிக்க வேண்டியதுதான் பாக்கி… இந்த நிலைமையில நீங்க என்னை லவ் பண்றேன்னு சொல்றது சரியில்லே…” சம்பத்திடம் சுவாமிமலை ரயில்வே ஸ்டேஷனில் தான் பேசியதெல்லாம் சுகன்யாவின் நினைவில் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போயின.

‘சுகன்யா… நீ சொல்றதெல்லாம் எனக்கு நல்லாப் புரியுது. ஸ்டில் ஐ லவ் யூ… உன்னை என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு, தூரத்துல இருந்து உன்னை நான் லவ் பண்றதுல யாருக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும்?” தன் கேள்விக்கு தீர்மானமாக பதில் கொடுத்த அத்தான் சம்பத்தின் முகம் சுகன்யாவின் மனதில் சட்டென வந்து நின்றது.

‘அத்தான்… உங்களை நான் ஒரு நல்ல ஃப்ரெண்டா நினைக்கிறேன்… லெட் அஸ் பீ குட் ஃப்ரெண்ட்ஸ்…’ தங்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் தான் அவனுக்கு கொடுத்த பதிலும் சுகன்யாவின் நினைவுக்கு வந்தது.

இதெல்லாம் நடந்து ஏறக்குறைய ஒரு மாசாமாயிடுச்சி. இந்த ஒரு மாசத்துல சம்பத் என் கிட்ட பேசவேயில்லை. என் கல்யாணத்தேதியைப் பத்தி பெரியவங்ககிட்ட நான் என் எண்ணத்தை சொல்ல நினைக்கற சந்தர்ப்பத்துல, சரியா இவனோட போன் வருது?

இது என்ன ஆச்சரியம்? சம்பத்திடமிருந்து நான் கொஞ்சம் விலகி இருக்க விரும்பறேன். ஆனா அவன் விரும்பி வருகிறானே? நான் யாரை விரும்புகிறோனோ அவன் என்னை விட்டு கொஞ்சம் விலகுவது போல இருக்கே?

இந்த உலகத்துல இருக்கற ஒவ்வொருத்தரும் வேறு சிலரோடு ஏதோ ஒரு விதத்துல சம்பந்தப்பட்டிருக்கோம்ன்னு தாத்தா சொல்றது இதைத்தானா? இப்ப இவன் கிட்ட நான் பேசறதா வேண்டாமா? சுகன்யா குழம்பினாள்.

“யாரோட கால்டீ.. அப்படி வெளியிலே போய் சட்டுன்னு பேசி முடிச்சிட்டு வாடீ…” சுந்தரி தன் புருவத்தை நெறித்தாள். சுகன்யா எழுந்து வராந்தாவை நோக்கி நடந்தாள்.

‘ஹாய்… சம்பத்… குட் ஈவினிங்…” சுகன்யா பூவாக மலர்ந்தாள்.

“குட் ஈவினிங்… தேங்க் யூ சுகன்யா… என்னை நீ ஞாபகம் வெச்சிருக்கே… இதை நினைக்கறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…” சம்பத்தின் குரல் இனிமையாக வந்தது.

“அத்தான் நீங்க என்னப்பேசறீங்க? உங்களை என்னால மறக்க முடியுமா?”

சுகன்யாவின் குரலில் இருந்த இனிமைக்கும் குறைவில்லை. சம்பத்திடம் பேச ஆரம்பித்ததும், அவள் உற்சாகமாகிவிட்டாள். மனதில் எழுந்த உற்சாகத்தில், ஓசையெழுப்பாமல் தன் பின்னால் வந்து நின்ற செல்வாவை அவள் கவனிக்கவில்லை.

“என்னமோ மனசுல பட்டதைச் சொன்னேன்…” மறுமுனையில் சம்பத் கிண்டலடித்தான்.

“சம்பத்… எனக்கு நல்லா ஞாபகமிருக்கு… பெங்களூர் போனதும் முதல்லே உனக்குத்தான் போன் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போய் ஒரு மாசமாச்சு… இதுல என்னை நீ மறந்துடலேயேன்னு கிண்டல் வேற… உங்களை மாதிரி ஆளையெல்லாம் நான் என் ஃப்ரெண்டுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். நல்லாருக்கு உங்க கதை.”

இந்த சனியன் புடிச்ச சம்பத் இப்ப எதுக்கு இவளுக்கு போன் பண்றான்…? உன்னை என்னால மறக்கமுடியுமான்னு இவ எதுக்கு அவன் கிட்ட இளிக்கிறா? அவன் இவளுக்கும் எனக்கும் சேர்த்து மொத்தமா வெச்ச ஆப்பைப் பத்தி தெரிஞ்சா இவ இப்படி ஹீ ஹீன்னு இளிப்பாளா? செல்வாவின் முகம் சட்டென சுருங்கியது.

“அயாம் சாரி சுகன்யா…”

“பரவாயில்லே சொல்லுங்க… என்ன விஷயம்..?’

“நான்தான் உனக்கு கால் பண்ணலே… என்னை பெரிசா உன் ஃப்ரெண்டுன்னு சொல்லிக்கறே… நீயாவது எனக்கு ஒரு கால் பண்ணியிருக்கலாம் இல்லியா?”

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.