கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“இப்ப இங்க நடந்ததையெல்லாம், நீ பேசினதையெல்லாம். உன் வீட்டுக்குப் போய் நிதானமா ஒரு தரம் யோசனை பண்ணிப்பாரு. புரியலேன்னா உன் அம்மாக்கிட்ட கேளு. உன் தாத்தாக்கிட்ட கேளு. நான் பண்ணது சரியா.. இல்லே நீ பண்றது சரியான்னு அவங்க உனக்குப் புரிய வெப்பாங்க. அவங்க சொல்றதும் உனக்குப் புரியலேன்னா. வேற வழியே இல்லே… இனிமே உனக்கும் எனக்கும் அந்த ஆண்டவன் விடறதுதான் ஒரே வழி…”

செல்வா வீட்டுக்குள் திரும்பி நடக்க ஆரம்பித்தான். மனதுக்குள் பொங்கி வந்த கோபத்தை வெகு சிரமத்துடன் அடக்கிக்கொண்ட சுகன்யா, வராண்டாவிலிருந்த நாற்காலில் சரிந்து உட்கார்ந்தாள். நீளமாக ஒரு முறைப் பெருமூச்சு விட்டாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

ஓ மை காட்… வாட் ஈஸ் ஹேப்பனிங் வித் மீ? அவள் தன் தலையில் தன் இரு கரங்களையும் அழுத்திக்கொண்டாள்.

நான் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசக்கூடாதா? இந்த சின்ன விஷயத்துக்கு இவ்வளவு பெரிய லெக்சரா? சத்தமேயில்லாம என் பின்னாடி வந்து நின்னு நான் பேசறதை ஒட்டுக்கேக்கறான்… சுத்தமா நாகரீகமே இல்லாம நடந்துகிட்டு நான் பண்ணது தப்புங்கறான். எனக்கு எதுவும் புரியலேங்கறான்… நான் என்னக் குழந்தையா?

ஆண்டவன் விட்ட வழிங்கறான்… என்ன உளர்றான் இவன்…? இவன்கூட கடைசீ வரைக்கும் எப்படி என் காலத்தை ஓட்டப்போறேன் நான்? அவளுக்கு நடு மண்டை வலிப்பது போலிருந்தது. அந்த இடத்தை விட்டு எழுந்து எங்காவது ஓடவேண்டும் போலிருந்தது.

தன் மனசுக்குள்ள என்னப்பத்தி இவன் என்ன நினைச்சுக்கிட்டு இருக்கான்? சுகன்யா என்ன இவன் வீட்டு குப்பையில முளைச்சிருக்கற கிள்ளுகீரையா? இவன் நினைச்சா என்னை கிள்ளி வீசிடுவானா?

இல்லே இவன் வீட்டு முத்தத்துலே, காத்துல அடிச்சி, பறந்து வந்து விழுந்திருக்கிற எச்சையிலைன்னு என்னை நெனைக்கறானா? எந்தத் தைரியத்துல இவன் இப்படியெல்லாம் பேசறான்?

சுகன்யா பொறுடீ… செல்வா மூடுதான் சரியில்லேன்னா… உன் மூடையும் நீ ஏன் இப்பக் கெடுத்துக்கறே… தேவையில்லாம எதையொதையோ கன்னாபின்னான்னு ஏன் யோசிக்கறே?

இப்ப என்ன ஆயிடிச்சி… தெளிவா தெரியுது… சம்பத் கூட நீ பேசினது அவனுக்குப் பிடிக்கலே.. இப்ப பேசாம இரு.. நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது ஒரு தரம் பொறுமையா இதைப்பத்தி பேசு… கோபப்படறதுல என்ன பிரயோசனம்?

சம்பத்தைப் பத்தி அவன் மனசுக்குள்ள அப்படி என்னதான் தப்பா இருக்குன்னு தெரிஞ்சிக்கோ… அவசரப்படாதே… ஆம்பிளை அவசரப்படும் போது பொம்பளை பொறுமையா இருக்கணும்ன்னு உன் பாட்டி சொல்றதை ஞாபகத்துலே வெச்சிக்கோ…

சுகன்யா தன் முகத்தை ஒரு முறை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். மனதுக்குள் ஒரு முடிவுடன் ஹாலுக்குள் நுழைந்தாள்.

“வாம்மா சுகன்யா… உக்காரு… டெல்லிக்கு நீ போறதுக்கு முன்னாடியே உங்க கல்யாணம் முடிஞ்சிட்டா நல்லா இருக்கும்ன்னு ஆசைப்படறியாமே? இப்பத்தான் உங்கம்மா சொல்லிக்கிட்டு இருந்தாங்க…” முகத்தில் புன்னகையுடன் நடராஜன் அவளைப் பார்த்தார்.

“அங்கிள்… நான் என்னமோ அப்படித்தான் ஆசைப்பட்டேன்… ஆனா..”

“சொல்லும்மா… தயங்காம சொல்லு…” மல்லிகா அவளை உற்று நோக்கினாள்.

“அத்தே… என் ஆசைக்காக நான் உங்க யாரையும் அனாவசியமா தொந்தரவு பண்ண விரும்பலே… இருக்கற ரெண்டு வாரத்துலே எவ்வளவு காரியங்களை செய்து முடிக்கணும்… எனக்கும் சட்டுன்னு லீவு கிடைக்குமான்னு தெரியலே…” சுகன்யா செல்வாவை ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்தாள். சட்டெனத் தன் தலையை குனிந்து கொண்டாள்.

“இதுல தொந்தரவு என்னம்மா இருக்கு… உங்க சவுகரியம்தானே எங்களுக்கு முக்கியம்… உன் விருப்பத்தை நீ சொல்லு… காரியங்களை பாக்கப் போறது நாங்கதானே? நீ கடைசியா ஒரு வாரம் லீவு எடுத்துக்கோ…”

“உங்க மாமா இருக்கார்… சூரனா என் சீனு இருக்கார்… உங்கப்பா சொன்ன மாதிரி இருபது நாள்லே உங்கக் கல்யாணத்தை தடபுடலா நடத்திடமுடியுங்கற நம்பிக்கை எனக்கும் இருக்கு…” நடராஜன் குமாரசுவாமியைப் பார்த்தார். சீனுவையும் ஒரு முறை பார்த்தார்.

“ஆமாம் அங்கிள்…” சீனு தலையாட்டினான்.

“இல்லே அங்கிள்… மூணு மாசம்தானே… ட்ரெயின்ங் முடிஞ்சி நான் திரும்பி வந்ததுக்கப்புறமே நிதானமா அவசரமில்லாம டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம்… இப்ப நீங்க அவசர அவசரமா எந்த ஏற்பாடும் எங்க கல்யாணத்துக்காக செய்ய வேண்டாம்.” சுகன்யா தன் தலையை நிமிர்த்தவில்லை. செல்வா தெரு வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சரிம்மா… உன் இஷ்டம்… அப்ப நாங்க எங்க சவுகரியப்படி மூணு மாசத்துக்கு அப்புறமா ஒரு தேதி ஃபிக்ஸ் பண்ணிடலாம் இல்லியா?”

“செய்யுங்க அங்கிள்…”

“நடராஜன் நேரமாச்சு.. அப்ப நாங்க கிளம்பறோம்… உங்க எல்லார்கிட்டவும் உத்தரவு வாங்கிக்கறோம்…” குமாரசுவாமி பொதுவாக கையைக் கூப்பினார்.

“போயிட்டு வர்றேன் மீனா… ஆல் த பெஸ்ட்…” மீனாவின் கையை ஒரு முறை பிடித்து அழுத்திய சுகன்யா, யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், விறுவிறுவென தெருவுக்கு நடந்தாள். தங்கள் காரின் கதவைத் திறந்து முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டாள். சிவதாணுவும், கனகாவும் ஏற்கனவே காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தார்கள்.

செல்வா ஒரு மரியாதைக்குகூட தெரு வரை வரவில்லை. நடராஜனும் மல்லிகாவும் மட்டுமே அவர்களை வாசல்வரை வந்து வழியனுப்பினார்கள்.

பத்து நிமிஷத்துக்கு முன்னாடீ முகம் கொள்ளாத சிரிப்போட இருந்த சுகன்யாவுக்கு தீடீர்ன்னு என்னாச்சு…? செல்வா ஏன் இப்படி ஒரு இடியட் மாதிரி நடந்துக்கறான்.. வந்தவ என்னை நினைப்பாங்க? சீனுவும் மீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.