கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“அப்ப நீங்க எனக்கு ஃப்ரெண்டு இல்லையா? சொல்லுங்க நான் உங்களுக்கு என்ன வேணும்?” சுகன்யா கலகலவென சிரித்தாள்.

“யெஸ்… நீ என் ஃப்ரெண்ட் மட்டுமில்லே… அதுக்கும் மேலே…” சம்பத் மென்மையாக பேசினான்.

“அதுக்கும் மேலேன்னா…?”

“நீ என் மாமா பொண்ணு… எனக்கு உறவுக்காரி..”

“ஓ.கே. ஐ காட் இட்…” சுகன்யா மீண்டும் சிரித்தாள்.

“அப்ப நீ எனக்கு போன் பண்ணியிருக்கணுமா வேணாமா?”

“சாரி அத்தான்.. நானும் இங்கே கொஞ்சம் பிஸியாகிட்டேன்… ஆஃபிசுலே தலைக்கு மேல வேலை… நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க…”

அத்தான் என்னா அத்தான்..? என்ன மசுருக்கு அந்த நாயை இவ உறவைச் சொல்லி கொஞ்சறா? திரும்ப திரும்ப இளிக்கறா… செல்வா மனதுக்குள் கருக ஆரம்பித்தான்.

“இட்ஸ் ஆல் ரைட் சுகா… ஹவ் ஈஸ் லைஃப்?”

“ம்ம்ம். என்னமோ போய்கிட்டு இருக்கு…” இழுத்தாள் சுகன்யா.

“என்னம்ம்மா கல்யாணப்பொண்ணு ரொம்ப டல்லடிக்கறே… எப்ப விருந்து சாப்பாடு போடப் போறே?”

“ம்ம்ம்.. அதைப்பத்தித்தான் இப்ப எல்லோரும் ஒண்ணா உக்காந்து பேசிகிட்டு இருந்தோம்..”

எங்க கல்யாணத்தைப்பத்தி அவன் கிட்ட என்னப்பேச்சு இவளுக்கு…? செல்வா கொதித்துப்போனான்.

முன் தினம் கடற்கரையில் சுகன்யாவை தனியாக சந்தித்தப்பின், அவர்களுக்கு இடையில் இருந்த ஒரு வாரப் பிரச்சனை, மீனாவின் முயற்சியால், ஒரு வாறாக முடிவுக்கு வந்திருந்த நிலைமையில், சம்பத்திடமிருந்து சுகன்யாவுக்கு வந்த போன் காலால், செல்வாவின் மனதுக்குள் மீண்டும் எரிச்சல் முளைவிடத்தொடங்கியது.

“சாரி சுகா.. அப்படீன்ன்னா நான் அப்புறமா உன்னைக் கூப்பிடறேன்…” சம்பத் இழுத்தான்.

“பராவயில்லே நீங்க சொல்லுங்க…” சுகன்யா கர்டஸிக்காகச் சொன்ன போதிலும், வீட்டினுள் பெரியவர்கள் எல்லோரும் தனக்காக காத்திருப்பதை நினைத்தப்போது சட்டென மனசுக்குள் சிறிது டென்ஷன் ஆக ஆரம்பித்தாள் அவள்.

“சுகன்யா… உனக்காக எல்லோரும் உள்ள காத்துக்கிட்டு இருக்காங்க…” இதுதான் சமயமென எரிச்சலுடன் செல்வா பின்னாலிருந்து சற்று உரக்கவே பேசினான்..

“ஒரு நிமிஷம் செல்வா.. இதோ வந்துட்டேன்ம்பா..” சுகன்யா அவனுக்கும் பதில் சொன்னாள்.

செல்வா எப்ப வந்தான்…? நான் பேசினதையெல்லாம் இவன் கேட்டிருப்பானோ? ஒரு வினாடி திடுக்கிட்டாள் சுகன்யா.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.