கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“அத்தே.. நான் இந்த வீட்டுக்கு நிரந்தரமா வந்ததுக்கு அப்புறம் மீனா என்னை என் உறவைச் சொல்லி அழைக்கட்டும்… அது வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தான்… அவளுக்கு மனசுல எப்படித் தோணுதோ அப்படியே என்னைக் கூப்பிடட்டும்..” மீனாவுக்கு வக்காலத்து வாங்கினாள் சுகன்யா.

“இந்தாம்மா மீனா… இதை வாங்கிக்கோ; இது எங்களோட ஆசிர்வாதம்…”சுந்தரி ஒரு புடவையை அவள் கையில் திணித்தாள்.”

“ஏய்… மீனா.. அவங்க ரெண்டு பேர் கால்லேயும் விழுந்து வாங்கிக்கடீ…” மல்லிகா முணுமுணுத்தாள்.

“அதுக்கெல்லாம் ஒண்ணும் அவசியமில்லேம்மா…” குமாரசுவாமி சட்டென எழுந்து மீனாவை தடுத்து நிறுத்தினார்.

“சீனு… கங்கிராட்ஸ்… உன்னோட லைப் பார்ட்னர் செலக்ஷ்ன் ரொம்பவே சூப்பர்… சந்தோஷமா இருங்க…” சுந்தரி சிரித்துக்கொண்டே சீனுவின் தோளை தட்டிக்கொடுத்தாள்.

“தேங்க் யூ ஆன்ட்டீ” சீனுவின் முகம் மலர்ந்தது.

“அத்தே நீங்க எனக்கு என்ன கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கீங்க…” மீனா உஷாவின் முழங்கையை பிடித்துக்கொண்டாள்.

“மீனா.. எங்க உசுரே சீனுதான்… அவனைத்தான் உனக்கு வேணும்ன்னு நீயே எடுத்துக்கிட்டே… அவனை விட மேலான கிஃப்ட், உனக்கு நாங்க என்ன குடுக்கப் போறோம்…?”

“என் அண்ணங்கிட்ட, என் அண்ணிகிட்ட, என்கிட்ட இருக்கற எல்லாமே உனக்குத்தான்… எப்ப எங்க வீட்டுக்கு நீ வர்றே… அதை மட்டும் சொல்லு..? மீனாவை இழுத்து தன் பக்கத்தில் உட்க்காரவைத்துக் கொண்ட உஷாவின் குரல் தழுதழுப்பாக வந்தது.

“உண்மைதான்.. நீங்க சொல்றது… சீனு இந்த வீட்டு மாப்பிள்ளையா வர்றதுல எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம்… இவனை விட ஒரு நல்லத் துணையை என் பொண்ணுக்கு என்னால தேடமுடியாது.” நடராஜன் மனதில் நெகிழ்ந்து, புன்னகைத்து கொண்டே சீனுவை தன் தோளோடு சேர்த்துக்கொண்டார்.

“நடராஜன்… முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.. உங்க தங்கை யு.எஸ்.லேருந்து வர்றதா சொன்னீங்க… அவங்க எப்ப வர்றாங்க…? மேற்கொண்டு ஆக வேண்டிய விஷயங்களைப் பார்க்கணுமே?” குமாரசுவாமி, பொதுவாக பேச ஆரம்பித்தார்.

“ஆமாம் சார்.. எனக்கும் செல்வா, சுகன்யா திருமணத்தை சீக்கிரமா முடிச்சாகணும்.. அப்பத்தான்… அடுத்தக்கல்யாணத்தை முடிக்க முடியும்.

“ராகவன் சார்… உங்க ஐடியா என்ன?”

“மொதல்லே செல்வா கல்யாணத்தை திட்டமிட்டப்படி முடிங்க; மீனா விருப்பப்படற மாதிரி ஒரு இரண்டு மூணு மாசம், வேலைக்கும் போய்வரட்டும். அதுக்கப்புறமா இவா மேரேஜை நடத்திடலாம்”.

“ஓ.கே… இப்ப இங்கே இருக்கிற நாம ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்திகள்… அதனால நான் எதையும் உங்ககிட்டேருந்து மறைச்சு பேச விரும்பலே..”

பேசிக்கொண்டிருந்த நடராஜன் ஒரு வினாடி தயங்கினார். தன் மனைவி மல்லிகாவைப் பார்த்தார். சீனுவையும் தன் ஓரக்கண்ணால் ஒருமுறை நோக்கினார். மாடிக்கு போகலாம் வாடீ… மீனாவை நோக்கி கண்ணால் சைகை செய்து கொண்டிருந்தான் சீனு.

“சுகா.. மீனா நீங்க இரண்டு பேரும் ஏன் நிக்கறீங்க? இப்படி வந்து உக்காருங்க… தம்பி சீனு, செல்வா நீங்களும் இப்படி உக்காருங்களேன்…!!! இனிமே நம்ம வீடுகள்ல்ல நடக்கற எல்லா விஷயங்களையும் நீங்களும் தெரிஞ்சுக்கணும்…”

குமாரசுவாமி தன் கையை ஆட்டினார். வேறு வழியில்லாமல் அவர்களும் நடராஜன் பேசுவதை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.