கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“பக்கதுல யாரு சுகன்யா? எங்கே இருக்கே நீ” சம்பத் இயல்பாக ஒரு கேள்வியை எழுப்பினான்.

“சம்பத்… இன்னைக்கு என் வுட்பீயோட தங்கை மீனாவுக்கு பர்த் டே… அதுக்காக என் பேரண்ட்ஸோட நான் அவங்க வீட்டுக்கு வந்திருக்கேன்..” சுகன்யா மென்று விழுங்கினாள்.

“சுகன்யா… கண்டவன் கிட்டல்லாம் என் தங்கச்சியைப் பத்தி பேசாதே ப்ளீஸ்…” செல்வா எரிந்து விழுந்தான். அவன் கூவியது மறுமுனையில் இருந்த சம்பத்துக்கும் தெளிவாகக்கேட்டது. சுகன்யா திடுக்கிட்டுப் போனாள்.
“செல்வா.. வாட் ஈஸ் திஸ்?” செல்வாவின் எரிச்சல் சுகன்யாவுக்கும் சட்டென தொற்றிக்கொண்டது. ஒரு வினாடி அவளையும் மீறி அவள் குரல் உயர்ந்தது.

“சுகன்யா… பிளீஸ்… லிசன் டு மீ… திஸ் ஈஸ் வாட் அயாம்… டிரை டு அண்டர்ஸ்டேண்ட் மீ…”

செல்வாவின் குரலில் வேப்பங்காயின் கசப்பிருந்தது. செல்வா பேசியது சம்பத்துக்கும் வார்த்தைக்கு வார்த்தை தெளிவாகக் கேட்டது. அவன் பேசியதில், அவன் குரலில் தெறித்த வன்மத்தை மறுமுனையில் இருந்த சம்பத் தெளிவாக உணர்ந்துகொண்டான். தன்னால், தன் ஒரு போன் காலால், தேவையில்லாமல் சுகன்யாவுக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டதேயென அவன் உண்மையாகவே மனசுக்குள் வருத்தப்பட்டான்.

“சுகன்யா.. அயாம் சாரி.. யூ கேரி ஆன்.. பிளீஸ்… ரியலி அயாம் சாரி டு ஹேவ் டிஸ்டர்ப்ட் யூ… மை சின்சியர் அப்பாலஜிஸ் டு யூ…” சம்பத் மன்னிப்பு கோரும் குரலில் பேசினான். அவன் குரலில் சுத்தமாக உயிர் இல்லை.

“சம்பத்… நான் சொல்றதை ஒரு செகண்ட் கேளுங்க…” சுகன்யா சொன்னது அவனுக்கு கேட்கவில்லை. அவள் அவனுக்கு பதில் சொல்வதற்குள் சம்பத் காலை கட் செய்துவிட்டிருந்தான்.

செல்வா… நான் என் ஃப்ரெண்டுக்கிட்ட பேசிட்டிருந்தேன். இப்ப நீ நடந்துகிட்ட விதம் உனக்கே நல்லாயிருக்காப்பா?” சுகன்யாவின் குரல் உடைந்து அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

“ஸோ வாட்… என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சரியாத்தான் நடந்துகிட்டேன்?” செல்வாவின் குரலில் அகம்பாவம் துள்ளியது.

“அப்ப நான் என்னத் தப்பு பண்ணிட்டேன்..? நீ என் வுட்பி இல்லையா? மீனா உன் தங்கையில்லையா? அவளைப்பத்தி பேச எனக்கு உரிமையில்லயா?”

“எதை யார்கிட்ட பேசணும்.. எந்த விஷயத்தை யார்கிட்ட சொல்றதுன்னு ஒரு வரைமுறையிருக்கு… ரோட்ல போற கண்ட நாய்கிட்டேயெல்லாம் என் குடும்பத்தைப்பத்தி நீ பேசறது தப்புன்னு நான் நினைக்கிறேன்…” செல்வாவின் முகம் கல்லாகியிருந்தது.

“செல்வா… தென் யூ ஆர் ராங்… சம்பத் தெருல போற நாய் இல்லே… அவர் என் அத்தைப் பையன்… அவரைப்பத்தி பேசும் போது நீயும் கொஞ்சம் மரியாதையாகப் பேசினா நல்லாருக்கும்…” சுகன்யா நிதானமாக பேசினாள்.

“என்னைவிட… என் குடும்பத்தைவிட உனக்கு அந்த பொறுக்கி முக்கியமா போயிட்டான் இல்லையா?”

“செல்வா வார்த்தையை அள்ளிக்கொட்டாதே..? கொட்டினதை பொறுக்கி எடுக்கறது ரொம்பக் கஷ்டம்..”

“உனக்கு அவனைப்பத்தி முழுசா தெரியாதுடீ… அவன் பண்ணக்காரியம் உனக்குத் தெரியாது? தெரிஞ்சா நீ அவனுக்கு இப்டி இப்டி வக்காலத்து வாங்க மாட்டே” செல்வாவின் முகம் சிவந்து கொண்டிருந்தது.

“செல்வா.. எனக்கு எல்லாம் தெரியும்…?”

“என்ன சொல்றே நீ…?”

“உனக்கும் சம்பத்துக்கும் நடுவுல நடந்ததெல்லாம் எனக்குத் தெரியும்ன்னு சொல்றேன்..”

“தெரிஞ்சுமா நீ அவன் கிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்கே? அதுவும் என் எதிர்லேயே கொஞ்சறயே?”

“அவருதான் தான் பண்ணத் தப்புக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டாரு இல்லையா? இந்த உலகத்துல தப்பே பண்ணாதவங்க யார் இருக்காங்க?”

“அந்த நாய் ஒரு தரம் மன்னிப்பு கேட்டுட்டா போதுமா? ஐ டோண்ட் லைக் ஹிம்..?” செல்வா மீண்டும் தன் முகத்தை கோபமாகச் சுளித்தான். அவன் இடது கரம் நடுங்கிக்கொண்டிருந்தது.

“உனக்கு அவரைப்பிடிக்கலேன்னா நீ அவர்கிட்ட பேசவேண்டாம்.. எனக்கு வேண்டியவங்ககிட்ட, என் உறவுகாரங்ககிட்ட, எனக்கு பிடிக்கறவங்க கிட்ட நான் பேசறதை நீ எதுக்கு வேண்டாங்கறே?”

“யெஸ்… சுகன்யா… நான் சொல்றதை நீ காது குடுத்து நல்லாக் கேட்டுக்கோ… அவன் கிட்ட நீ பேசறது எனக்குப் பிடிக்கலே… சுத்தமா பிடிக்கலே…”

“செல்வா… பிளீஸ்… இப்பல்லாம் நீ எப்பவும் சண்டை போடற மூடுலேயே இருக்கே… இது ஏன்னு எனக்கு புரியலே… சட்டு சட்டுன்னு சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் எதுக்காக நீ என்கிட்ட எரிச்சல் படறேன்னு தெரியலே…”

“சுகன்யா… நான் எரிச்சல் படறேனா? உனக்கு நல்லதைச் சொன்னா நீதான் எரிச்சல் படறே…!? யார் தேவையில்லாம எரிச்சல் படறதுங்கற கேள்வியை உன்னை நீயே ஒரு தரம் கேட்டுக்கோ…”

“ம்ம்ம்… அப்புறம்…”சுகன்யாவும் தன் அடிக்குரலில் சீறினாள்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.