கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

“என் தங்கை, மீனாட்சியை தன் மருமகளா ஆக்கிக்கணும்ன்னு மனசுக்குள்ள ஆசைப்பட்டிருக்கா… செல்வா கல்யாணத்துக்கு இந்தியா வரும்போது… தன் மகனுக்கு இவளை நிச்சயம் பண்ணிக்கற எண்ணத்தோட என் மச்சினரும் இருந்திருக்கார். எங்களுக்கும் அப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள இருந்தது… ஆனால் இதைப்பத்தி நாங்க எப்பவும் மீனாகிட்ட பேசினதே கிடையாது.

“ம்ம்ம்ம்…”

குமாரசுவாமி, ராகவனை நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“எங்கவீட்டிலே, சீனுவை நாங்க ரெண்டு பேரும், செல்வாவைப்போல இன்னொரு பிள்ளையாத்தான் நெனைச்சுக்கிட்டு இருந்தோம்… நடத்திக்கிட்டு இருந்தோம். ஆனா சில சமயங்களில் நாம நினைக்கறது எதுவுமே, நடக்கணும்ன்னு நினைக்கறது எதுவே நடக்கறது இல்லே….”

“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான்… எல்லா முடிச்சுமே மேலே இருக்கறவன் போடறதுதான்… இதுல எந்த சந்தேகமும் எனக்கு இல்லே” ராகவன் மெல்ல சிரித்தார்.

“போன மாசத்துல ஒரு நாள், மீனாவும் சீனுவும் நெருக்கமா நின்னு அன்னியோன்மாக பேசிக்கிட்டு இருந்ததை பார்த்ததாக நம்ம எதிர்வீட்டு ராமசாமிஅய்யர், எங்கிட்ட சொன்னப்ப ஒரு வினாடி நான் திடுக்கிட்டுத்தான் போனேன்…”

“வாஸ்தவமான பேச்சு… தப்பே இல்லை…” ராகவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு சீனுவை ஒருமுறை பார்த்தார். அவன் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.

“செல்வா.. சுகன்யாவை தனக்கு துணையாத் தேர்ந்தெடுத்துட்டான்… எனக்கு அவன் சாய்ஸ்லே எந்தக்குறையும் தெரியலே…. ராதர் ஐ வாஸ் வெரி வெரி ஹேப்பி.. ஆரம்பத்துல என் மனைவி கொஞ்சம் தயங்கினாலும்… அப்புறம் முழுமனசோட சுகன்யாவை அவ ஏத்துக்கிட்டா… சுகன்யா தன்னோட செயல்களால மல்லிகா மனசுக்குள்ள வந்து உக்காந்துட்டா…”

“இதுக்கு நடுவுல, என் பொண்ணோட மனசுல இருக்கற ஆசையை, சீனுவோட மனவிருப்பத்தை.. அவனோட வீட்டுல எப்படி எடுத்துக்குவாங்கங்கற சிறிய அச்சம் என் மனசுக்குள்ள எழுந்தது.”

“க்கொயட் நேச்சுரல்…” குமாரசுவாமி தன் தலையை ஆட்டிக்கொண்டிருந்தார்.

“ராகவன் சார் வீட்டுல இவங்க ஆசைக்கு மறுப்பு தெரிவிச்சால்… எப்படி இந்த விஷயத்தை நாங்க அணுகறது… மல்லிகாவும் நானும் குழம்பிப் போயிட்டோம்.”

“சீனு விட்டுல ஓ.கே.ன்னு சொன்னால், என் தங்கைக்கு என்ன பதில் சொல்றதுங்கறது ஒரு பெரிய விஷயமா அவளுக்கு பட்டது. ஒரே அண்ணன்; தங்கை; எங்க நடுவுல, அவ தூரத்துலே இருந்தாலும், எங்க உறவுல எந்த விரிசலும், வந்துடக்கூடாதுன்னு மல்லிகா பயந்தா…” நடராஜன் தான் பேசுவதை ஒரு நொடி நிறுத்தினார். தன் உதடுகளை ஈரமாக்கிக்கொண்டார்.

“என் தங்கையை நான் சமாதானம் பன்ணிக்கறேன்; மீனா மனசுல இருக்கற காதலை அவ கண்டிப்பா புரிஞ்சுக்கவாங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு;
இப்போதைக்கு மீனாவோட விருப்பம்தான் முக்கியம்ன்னு என் வீட்டுக்காரர் சொன்னதும், அதுவரைக்கும் என் புள்ளையா நினைச்சுக்கிட்டு இருந்த சீனுவை… என் மருமகப்பிள்ளையா ஆக்கிக்கறதா முடிவு பண்ணிட்டேன்.” மல்லிகா தன் முகத்தில் பெருமிதத்துடன் சிரித்தாள்.

“உங்க முடிவு நிஜமாவே நல்ல முடிவுங்க… உறவுகள் நமக்கு தேவைதான்… ஆனா அதேசமயத்துல நம்ம குழந்தைங்க சந்தோஷம்தானே நமக்கு முக்கியம்…” சுந்தரி தன் தலையை ஆட்டினாள்.

“மீனாவோட விருப்பம் என் தங்கைக்கு தெரிஞ்சதுலேருந்து, நான் இந்தியாவுக்கே வரலேன்னு என் மேல கோபமா இருக்கா… மீனா இன்னொரு பையனை லவ் பண்ற விஷயத்தை எங்கிட்ட ஏன் முதல்லேயே நீங்கச் சொல்லலைன்னு என்னைத் தவறா நினைக்கறா…”

“ப்ச்ச்…ப்ச்ச்…” சுந்தரி மல்லிகாவைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“என் மச்சினர் என் நிலைமையை புரிஞ்சுக்கிட்டு, மீனாவோட விருப்பம்தான் அவ கல்யாணத்துல முக்கியம். செல்வா கல்யாணத்தை உங்க இஷ்டப்படி எப்பவேணா ஃபிக்ஸ் பண்ணிக்குங்க… என்னோட ஆசீர்வாதம் எப்பவும் அவனுக்கு உண்டு; என் மனைவியை நான் சமாதானம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டார்.” நடராஜன் முகத்தில் சிரிப்பில்லாமல் பேசி முடித்தார்.

“நீங்க இப்ப சொன்ன இதே விஷயம், என் குடும்பத்துலேயும், சுகன்யா கல்யாண மேட்டரை நாங்க பர்சூயூ பண்ண ஆரம்பிச்சதும், நடந்திருக்குன்னு சொன்னா, நீங்க யாருமே நம்பமாட்டீங்க…”குமாரசுவாமி தன் முகத்தை ஒருமுறை அழுத்தித் துடைத்துக்கொண்டார்.

“ராணின்னு எனக்கு ஒண்ணுவிட்ட அக்கா ஒருத்தங்க சுவாமிமலையிலே இருக்காங்க… அவங்க ஹஸ்பெண்ட் நல்லசிவம்ன்னு லா ஆஃபிசரா நார்த்லேயே இருந்துட்டு ரிட்டயர்மென்ட்டுக்கு அப்புறமா எங்க ஊருக்குத் திரும்பியிருக்கார்… அவங்களுக்கு சம்பத்குமார்ன்னு ஒரே பையன்… பெங்களூர்ல வேலை செய்யறான்… மாசம் லட்ச ரூபா சம்பாதிக்கறான்.”

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… ஏன்டீ மீனா… நம்ம வீட்டு விஷேசத்துல, பச்சைக்கலர்லே, மயில் பார்டர் போட்ட பட்டுப்புடவை கட்டிக்கிட்டு வந்தாங்களே? செகப்பா, மூக்கும் முழியுமா இருந்தாங்க… சாப்பிட்டதுக்கு அப்புறம் கூடத்துல உக்காந்து பேசிகிட்டு இருந்தப்ப நம்ம பக்கத்துலதானே இருந்தாங்க; அவங்க என்கிட்ட கூட நல்லா சிரிச்சி சிரிச்சி பேசினாங்களே? அவங்களைத்தானே அண்ணன் சொல்றார்?”மல்லிகா நினைவுகூர்ந்தாள்.

“உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி…?” சுந்தரி சிரித்தாள்.

“எங்க அம்மா பட்டுப்புடவை கலர்ல்லாம் நல்லா ஞாபகம் வெச்சுப்பாங்க… அதுவும் அடுத்தவங்க கட்டியிருக்கற புடவைன்னா கேக்கவே வேணாம்…” மீனாவும் குஷியாக சிரித்தாள்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.