கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 50 18

சம்பத்தின் பெயரைக்கேட்டதும், செல்வா முகத்தில் ஒரு மெல்லிய சிணுக்கம் ஏற்பட்டதையும், சட்டென சீனுவும் செல்வாவும், தங்கள் கண்கள் மின்ன, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதையும், சுகன்யா கவனிக்கத் தவறவில்லை.

“எங்க அக்கா மனசுலேயும், சுகன்யாவைத் தன் மகனுக்கு பண்ணிக்கணுங்கற ஆசை இருந்திருக்கு… இது சம்பந்தமா, ராணியக்கா, சுந்தரிகிட்ட நாலைஞ்சு தரம் பேசியிருந்திருக்காங்க… என் மச்சினர் ரகு என் மாமா நல்லசிவத்துக்கு ரொம்பவே க்ளோஸ் ஃப்ரெண்ட்… கிராமத்துல இருக்கும் போது அவங்க ரெண்டு பேரும் ஓண்ணாத்தான் சுத்திக்கிட்டு இருபாங்க… அவரும் ரகுகிட்ட தன் பிள்ளைக்காக சுகன்யாவை கேட்டிருக்கார்… என்னைக் கேக்கணுமின்னு இவங்க சொல்லிகிட்டு இருந்திருக்காங்க…”

“சுந்தரியும், ரகுவும், இந்த மேட்டரைப்பத்தி சுகன்யாகிட்ட பேசறதுக்கு, சென்னைக்கு வந்தன்னைக்குத்தான் செல்வா எதிர்பாராமல், பைக் ஆக்ஸிடென்ட்ல சிக்கி, ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகியிருந்தார்.”

“செல்வாவை நான் லவ் பண்றேன்… அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு… தன்னோட ரத்தத்தை அவர் உடம்புல ஏத்திட்டு, நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம்ன்னு, வீட்டுல சோறுகூடத் திண்ணாம, ஆஃபிசுக்கும் போகாம, ஒரே பிடிவாதம் புடிச்சா சுகன்யா… அன்னைக்கு வரைக்கும் இவ செல்வாவை லவ் பண்ற விஷயம், சுந்தரிக்கோ, ரகுவுக்கோ தெரியவே தெரியாது…”

“கொய்ட் இன்ட்ரஸ்டிங்க்… ராகவனும், பத்மாவும் திகைப்புடன் குமாரசுவாமியைப் பார்த்தார்கள். சுகன்யாவை பார்த்து உஷா குறும்பாகச் சிரித்தாள்.

“செல்வா அவர் பங்குக்கு, சுகன்யாவைத்தான் கட்டிக்குவேன்னு தன்னோட அம்மாக்கிட்ட சண்டை பிடிச்சிருக்கார். என் பொண்ணு சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்ன்னு, நடராஜன்கிட்ட கலந்து பேசிட்டு, நான் நிச்சயதார்த்தத்தை சட்டுபுட்டுன்னு பண்ணி முடிச்சிட்டேன்.” குமாரசுவாமி பேசுவதை நிறுத்திவிட்டு தன் மனைவியைப் பார்த்தார்.

“சுந்தரீ.. நீ எப்படிடீ என் பிள்ளையை விட்டுட்டு இன்னொரு எடத்துல சுகன்யாவுக்கு சம்பந்தம் பேசினே…? என் புள்ளை சம்பத்தானேடீ உன் பொண்ணுக்கு முறை மாப்பிள்ளே? நாங்க வேணாம்ன்னு சொன்னாத்தானே நீங்க வெளியில போகலாம்…”

“பொண்ணை கேட்டு முடிவு சொல்றோம்ன்னு எங்களுக்கு காது குத்தி, பூ சுத்திட்டு, ஒரே வாரத்துல காதும் காதும் வெச்ச மாதிரி, சுகன்யாவுக்கு யாரோ ஒருத்தனை நிச்சயம் பண்ணிட்டீங்களே… இது தப்பில்லையா?”

“எல்லாத்துக்கும் மேலே, அந்த நிச்சயத்துக்கு நீயும் உன் புருஷனுமா வந்து, என்னையும் என் வீட்டுக்காரனையும் மொதல் நாளே வந்துடனும்ன்னு அழைப்பு வெச்சீங்களே?… இது நியாயமாடீ? நானும் உறவு விட்டுப்போகக்கூடாதுன்னு வந்தேன்…”

“நிச்சயத்துக்கு முன்னாடீ எங்களை ஒரு வார்த்தை கேட்டியாடீன்னு என்னை வம்புக்கு இழுத்தாங்க…” சுந்தரிக்கு மூச்சிறைத்தது.

“இதெல்லாம் எப்பம்மா நடந்தது? எங்கிட்ட நீ சொல்லவேயில்லே?” சுகன்யா, தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு பொரும ஆரம்பித்தாள்.

4 Comments

  1. Waste of time

    1. Waste of time

  2. Next part ku waiting, very eager. ?

  3. சூப்பர்.அடுத்த பார்ட் சீக்கிரம் போடுங்க.கொஞ்சம் கதையில கள்ளக்காதல் இருந்தா நல்லாருக்கும்.

Comments are closed.