கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

நேக்கு துக்கம் தொண்டையை அடைச்சது… கண்ணுல வந்த ஜலத்தை பொடவை முந்தானையால தொடைச்சிண்டு, மொகத்துல போலியா ஒரு சிரிப்பை விட்டுண்டு அம்பாள் எதிர்ல தேமேன்னு நின்னேன்…!!”

“ப்ஸ்ஸ்ஸ்…” ராமசாமி சியாம்ளீயின் மனவேதனையை சகிக்க முடியாமல் நெளிந்தார். சியாமளாவின் அருகில் எழுந்து உட்கார்ந்தார்… தன் தோளில் அவளை சாய்த்துக்கொண்டு அவள் தலையை மெல்ல வருடத் தொடங்கினார்.

“உங்க கிட்ட சொன்னா நீங்க எதையும் வெளியே சொல்லமா மனசுக்குள்ளவே வெச்சிண்டு உங்க புள்ளையை நெனைச்சு நெனைச்சு கண் கலங்குவேள்… அவன் தன் உங்களை மறந்துட்டு, வீட்டை விட்டுட்டு கொண்டவ பின்னாடீப் போயிட்டான்.!!”

“அழாதேடீ… சியாம்ளீ… என்னாலத் தாங்க முடியலேடீ..” ராமசாமியின் குரல் உடைந்து, அவருக்கு அழுகைப் பொங்கிக்கொண்டு வந்தது.

“இந்த லெட்சணத்துல நீங்க அடுத்தாத்துப் புள்ளையை கொறை சொல்ல கிளம்பிட்டேள்…?”

சியாமளா, ராமசாமியின் மார்பில் சாய்ந்து விக்கி விக்கி அழுதாள். இரண்டு நிமிடங்களுக்குப் பின் தன் கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.

“எல்லாம் என் தலையெழுத்துடீ…” ராமசாமி மெல்ல தன் தலையில் அடித்துக்கொண்டார்.

“பின்னே…வேற எதைச் சொல்லி நம்ம தேத்திக்கறது… நம்ம வீட்டுக்கதையே நாறிக் கெடக்கு…” சியாமளாவின் குரல் தளர்ந்து சுரத்தில்லாமல் வந்தது.

“நடராஜன் என்ன மாதிரி மனுஷன், நேக்கு மனசு சுத்தமா ஆறலடி.. நீ அவனுக்கு வக்காலத்து வாங்கறே?” ராமசாமியின் குரல் மீண்டும் எழுந்தது.

“ரொம்ப நன்னாருக்கே நீங்க பேசறது! நம்ப மாட்டுப்பொண்ணே உங்க ஜாதியில்லே! நாமப் பெத்ததை நாம என்ன கொன்னா போட்டுட்டோம்!”

“என்னைக் குத்தறேதே நோக்கு வேலையாப் போச்சுடீ..”

“உங்க பையனும் பொண்ணும் அவா அவா இஷ்டப்படி மனசுக்கு பிடிச்ச துணையைத் தேடிண்டு சந்தோஷமாத்தானே இருக்கா?”

“த்ஸொ… த்ஸொ… அந்த மனுஷன் பாவம்டி.. கடைசி வரைக்கும் நாம பெத்ததுங்க அவா இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கறது நமக்கு தெரியாம போச்சு. நாம நம்ம பசங்களால பட்ட மனக்கஷ்டத்தை என் சினேகிதன் நடராஜனும் பட வேணாமேன்னுதான் நான் பாக்கறேன்…” அவர் பேசுவதை நிறுத்தினார்.

“ம்ம்ம்…சொல்லுங்கோ…”

“அவரு காதுல நமக்குத் தெரிஞ்ச விஷயத்தை காலம் தாழ்த்தாம போட்டுடலாமேன்னு… நினைக்கறேன்.. நோக்கென்ன தோன்றது?” ராமசாமி முதலில் அவருள் இருந்த வேகம் வெகுவாக குறைந்தவராக, சியாமளாவை நோக்கினார். தன் மனைவியின் மெலிந்த விரல்களை நீவிக்கொண்டிருந்தார் அவர்.