கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

“அவா முத்தம் கொடுத்துக்கிட்டா… செரி… இப்ப அதுக்கு நான் என்னப் பண்ணணுங்கறேள்?”

“நோக்கு நிஜமாவே புரியலியோடீ சியாம்ளீ?”

“இப்ப நான் உங்களை கட்டிண்டு உங்களுக்கு முத்தம் கொடுக்கணுங்கறேளா?”

“எல்லாம் என் கிரகசாரம்டீ… உன் முத்தம் கிட்டலயேன்னு இங்க யாரும் ஏங்கிப் போவலடீ”

“ஆமாம்.. ஏங்கினதெல்லாம் பிராமணனுக்கு இப்ப மறந்து போச்சாக்கும்; என் வாயை கெளறாதேள்…?”

“சரிடீ… நோக்கு அப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள இருந்தா சட்டுன்னு ஒண்ணு குடுத்துடேன்…” ராமசாமி தன் உதடுகளை புன்னகையுடன் குவித்தார்.

“ஆமாம் இப்ப எதுக்கு நீங்க அசடு வழியறேள்?”

“நானும் ஒரு காலத்துல ஊத்துகுளி வெண்ணைய் மாதிரி திக்கா வழிஞ்சிண்டுதான் இருந்தேன்… மறந்து போயிட்டியோ?”

“உங்க வாயை செத்த மூடுங்களேன்… இதென்ன வாசல்ல உக்காந்துண்டு விதாண்டாவாதம் பண்றேள்?”

“நோக்கு நம்ம பழங்கால கதையை செத்த ஞாபகப்படுத்தறேன்… நீ மறந்துட்டியே?”

“டிபன் இன்னும் ஆகல்லே? என்னைக்குமே நேரத்துக்கு செஞ்சுக் குடுக்கமாட்டியோ? அப்புறமா இப்படீல்லாம் நீங்க கொக்கரிக்க மாட்டேள்ன்னா உங்க வெட்டிக் கதையை கேக்கறதுக்கு இப்ப நான் தயார்..!!” சியாமளா அறிக்கை விட்டவள், தன் தோளை மொத்தமாக முந்தானையால் போர்த்திக்கொண்டாள்.

“செத்த பக்கத்துலதான் உக்காரேன்டீ… என்னமோ யாராத்துலயோ ஊர் பேர் தெரியாதவன் முன்ன நிக்கற மாதிரி போத்திக்கிடறே? என் மனசுல இருக்கறதை உங்கிட்ட கொட்டிப்பிடறேன்..”

“சொல்லித் தொலைங்கோ..” சியாமளா ராமசாமியின் எதிரில் காலை நீட்டிக்கொண்டு ஒரு பெருமூச்சுடன் உட்க்கார்ந்தாள். நீட்டிய பாதங்களில் ஈரத்தில் நின்று வேலை செய்வதால் வந்த வெடிப்புகள்.

“சியாம்ளீ…அந்த க்ராக் கீரீமை எடுத்து கால்லே பூசக் கூடாதோ? பாளம் பாளமா வெடிச்சிருக்கே… நடக்கும் போது நோக்கு வலிக்குமேடீ? கொண்டவளை ராமசாமி ஆசையுடன் ஒரு பார்வை பார்த்து வைத்தார்.

“போதும்… நீங்க என் மேல வெச்சிருக்கற அக்கறையை இப்படி தெரு வாசல்ல உக்காந்துண்டு டாம் டாம் அடிக்கவேண்டாம்…” கெழ பிராமணனுக்கு வயசானாலும் என் மேல இன்னும் அக்கறை மிச்சமிருக்கு… சியாமளியின் மனம் சக்கரையாக தித்தித்தது.

“சியாம்ளீ… நடராஜன் எவ்வள சாதுவான மனுஷன். தெருவுல வர்றதும் தெரியலை. வீட்டுக்குள்ள போறதும் தெரியலை. அவர் வேலையைப் பாத்துண்டு செவனேன்னு இருக்கார்.”

“அவர் பெத்த பொண்ணு மீனாட்சி பண்ற வேலையைப் பாத்தியோடி? அவர் பொண்ணோட இந்த தடியன் சீனு அவங்க வீட்டுக்குள்ளவே பண்ற அட்டூழியம் எங்கேயாவது அடுக்குமாடீ…? என்னக் கொடுமைடீ இது?”

“ம்ம்ம்..ரொம்ப நன்னாருக்கே நீங்க சொல்றது?”

“சியாம்ளீ… அந்த சீனுவோட குலமென்ன? கோத்ரமென்ன? அவா நெடுக நாமம் போடறவா… நடராஜன் சுத்த சைவன். அகலமா நெத்தியில பட்டை அடிக்கறவா? ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்துப் போகுமோடீ?”

“பேசமா இருங்கோன்னா… அந்தப் பையன் சீனுவாசனும் ஒரு மனுஷன்… மனுஷனை மனுஷளாப் பாக்கறதுதானே ஞாயம்.. அதெ விட்டுட்டு உங்களுக்கு ஏன்னா ஊர் வம்பு? யாரையும் இந்த வயசுலே இப்படி கண்ணை மூடிண்டு வெறுக்காதீங்கோ..!”

“அவனை நான் ஏன்டீ வெறுக்கணும்?”

“அந்தப் புள்ளாண்டானை கண்டாலே உங்களுக்கு எப்பவும் ஆகறதில்லே?”

“சரியான தண்ணி வண்டிடீ அவன்! பத்து நாள் முன்னாடீ ராத்திரி நேரத்துல கா.. கறி வாங்கிண்டு ஆத்துக்கு திரும்பி வர்றேன்; அந்தக் கடங்காரன் தண்ணியைப் போட்டுட்டு, என் கிட்ட நெருப்பு பொட்டி இருக்காங்கறான்..!!

“பளேர்ன்னு ஓண்ணு கன்னத்துல குடுக்கலாமான்னு வந்தது நேக்கு… என்னடா? உடம்பு எப்படி இருக்குன்னேன்? மாமா நீங்களா? தலையில மஃப்ளரு சுத்தியிருக்கேளா? அடையாளம் தெரியாம கேட்டுட்டேன்னு பவ்யமா ஒதுங்கி நிக்கறவன் மாதிரி நடிக்கறான்… குடிகாரப் பாவி… மீனாட்சி கிளியாட்டம் இருக்கா… அழகான கிளியை பூனை கைய்யில சிக்கவிடலாமோ?

“வாழ்க்கையை எதார்த்தமா பாருங்கோ… சின்னஞ்சிறுசுங்க… ஒருத்தரை ஒருத்தர் விரும்பிண்டுருக்காளோ என்னவோ?

ஏதோ அவா மனசுல கிளர்ச்சி… நெருங்கி நின்னுண்டு, தொட்டு பேசிண்டிருந்துருக்கலாம். உங்களுக்கு அப்பப்ப பக்கத்துல நிக்கற என் மூஞ்சே தெரியலங்கறேள்… மொட்டை மாடீலேருந்து நீங்க என்னத்தைப் பாத்தேள்”

“என்னடீ நோக்கு கிண்டலா போயிட்டேனா நான்?”

“இன்னைக்குத்தான் பெண்கள் பாய் ஃப்ரெண்ட்ஸூம், பையங்கள் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்ன்னும், சொல்லிண்டு சகஜமா தோள்லே கை போட்டுண்டு ரோடுல வீதி வலம் வர்றதுகள்..!! இதை நீங்க பெரிசுப்படுத்தாதீங்கோ!!”

“வெக்கக்கேடு! என்ன நெஞ்சழுத்தமிருந்தா… கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடீ… வீட்டுக்கு வெளியிலே முத்தத்துல நின்னுண்டு அவா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிண்டு கன்னத்துல முத்தம் கொடுத்துக்குவா; என் கண்ணால பாத்தேண்டி?

“இந்த வயசுலயும் உங்களுக்கு பரந்த மனசுயில்லயே?”

“நோக்கு… ரொம்பத்தான் பரந்த மனசு…போ…”