கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 31 10

“கண்ணாடி வீட்டுல இருந்துண்டு நீங்க அடுத்தவா ஆத்துகுள்ல கல் எறியறேள்…நம்மாத்து கதை காத்துல பறக்குது…”

“என்னடீச் சொல்றே?”

“அவாளுக்கு ஒரு நியாயம், நமக்குன்னா வேற ஒரு நியாயமான்னு கேக்கறேன்..”

“செத்தப் புரியற மாதிரி சொல்லேன்டீ”

“மேல இருக்கறவன் போட்ட முடிச்சை யாராலயாவது மாத்த முடியுமோ?” சியாமளா புன்னகைத்தாள்.

“முடியவே முடியாது” ராமசாமி தீர்க்கமாகச் சொன்னார்.

“உங்களால உங்கப் பொண்ணுக்கு அந்த ஈஸ்வரன் போட்ட முடிச்சை… மாத்த முடிஞ்சுதோ?”

“முடியல்லே..”

“லலிதான்னு ஆசையா பேரு வெச்சேள்? மார்லே போட்டுண்டு ஊரெல்லாம் திரிஞ்சேள்… உங்கப் பொண்ணு உங்கப் பேச்சைக் கேட்டாளோ? சர்ச்சுக்குப் போய்தானே ஒரு டேவிட் கையால மோதிரம் மாட்டிக்கிட்டா?”

“ஆமாம்.. என் பொண்ணு என் பேச்சைக் கேக்கலே.. ஒப்புக்கறேன்..”

“அப்போ நீங்க ஏன் அடுத்தவா வீட்டு விஷயத்துல கெடந்து அல்லாடறேள்…? ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கு இப்ப காலங்காத்தால ஏன் மழைக் காலத்து வரட்டுத் தவளை மாதிரி கத்திண்டு குதிக்கறேள்..?” சியாமளாவின் பதிலும் தீர்மானமாக வந்தது.

சியாமளாவும், ராமசுவாமியும் இருவேறு துருவங்கள். கல்யாணமாகி ஓரே வீட்டில் இத்தனை வருஷங்களாக அவர்கள் இணைந்து வாழ்வதுதான் உலகின் எட்டாவது அதிசயம். ராமசாமி எதற்கும் முதலில் உச்ச ஸ்தாயியில் கூச்சலிடுவார். எதையும் புரிந்து கொள்ளாமல், எல்லாம் புரிந்தது போல், அர்த்தமில்லாமல் ஜம்பமாக குதிப்பார். அவர் பேச்சை யாரும் கேட்கவில்லை என்பது அவருக்கு புரிந்ததும். மெல்ல மெல்ல பெட்டிப் பாம்பாக அடங்குவார். வீட்டிலும் சரி. வேலை பார்த்த இடத்திலும் சரி. இதுதான் அவர் வழக்கம்.

சியாமளா எல்லா விஷயங்களிலும் அழுத்தம். நேர்மையான பரந்த மனசு உள்ளவள். தன் வீட்டுக் குப்பை தன் வீட்டுக்குள்ளேயே ஒரு மூலையில் குவிப்பதை விரும்புபவள். அடுத்தவர் பாராதிருக்கும் போது தெருவில் கொட்ட மாட்டாள். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை அவள் முகத்திலிருந்து யாராலும் படிக்க முடியாது.

சியாமளாவை பத்து தரம் கேட்டால் ஒரு தரம் நிதானமாக யோசித்து பதில் சொல்லுவாள். அடுத்தவர்கள் பேசுவதை நடுவில் குறுக்கிடாமல் முதலில் அமைதியாக கேட்ப்பாள். அவள் பதிலைக் கேட்டவர்கள் அடுத்த கேள்வி அவளைக் கேட்கவே மாட்டார்கள். பொறுமைக்கு சியாமளாவை உதாரணமாக காட்டலாம்.

ஆண்டவன் போடும் முடிச்சுக்களில்தான் எத்தனை அர்த்தமிருக்கிறது. ஆட்டுக்கும் வாலை அவன் அளந்துதானே கொடுத்திருக்கிறான். அவன் அளந்து கொடுப்பதில் அர்த்தம் இருக்கத்தானே செய்கிறது…

“சியாம்ளீ… என்னதான் நீ சொன்னாலும் நேக்கு மனசு கேக்கலடீ?”

“இப்ப என்ன பண்ணணுங்கறேள்?”

“இந்த காலத்து யூத்துக்கு சுத்தமா டிஸிப்ளீன்ங்கறதே இல்லேடீ? சீனு தொண்டை முட்ட தண்ணியும் போடுவான்… ரயில் வண்டியா குப் குப்புன்னு புகையும் ஊதுவான்.”

“அன்னைக்கு இந்த சீனு நடராஜன் வீட்டுல பேசிக்கிட்டு இருக்கும் போது, மாமான்னு சொல்லிண்டு என் கிட்ட வந்தான்… குப்புன்னு ஒரே நாத்தம்… நேக்கு குடலைப் பொரட்டிக்கிட்டு வந்திடிச்சி… அவனொரு உருப்படாத தறுதலை… சுத்தமா காரக்டர் இல்லாதவன்.. இவனைப் போய் மீனாட்சி ஆசைப்படறாளே?”

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அந்த சீனு நல்லப்பையன்தான். சின்ன வயசுலேருந்தே அவங்க வீட்டுக்கு வர்றவன்.. போறவன்.. அவன் பொறந்த குடும்பமும் நல்ல குடும்பம்… பகவானை சேவிக்கற குடும்பம்.. நேக்கு அவாளைப் பத்தி நன்னாத் தெரியும்… இந்த காலத்துல யாருங்க சிகரெட் பிடிக்கலை…?”

“க்க்க்கும்ம்ம்ம்…” அவர் தொண்டையை உரக்க கனைத்தார்.

“இப்பல்லாம் உங்க மாட்டுப்பொண்ணே உங்க பிள்ளைக்கு சரி சமமா உக்காந்துண்டு வீக் எண்டுல தீர்த்தம் சாப்பிடறாளாம்… சிகரெட்டும் ஊதறாளாம்… மாம்பலமே நாறிப் போகுதாம்…”

“அந்த ஓடுகாலியைப் பத்தி என்னண்டை பேசாதேங்கறேன்?”

“ஆகாசத்துல பறக்கறதுலேருந்து… தரையில ஓடறது வரைக்கும், வீட்டுலயே அடிச்சி, அவிச்சி, பொரிச்சி, பொங்கித் திங்கறாளாம். உங்க புள்ளைக்கும் ஆசையா ஊட்டி விடறாளாம்…அவனும் நாக்கைச் சப்பு கொட்டிண்டு திங்கறானாம்.”

“இதெலாம் நோக்கு யார் சொன்னது?”

“போன வாரம் அந்த சத்தியபாமா கோவில்ல நின்னுண்டு நம்பாத்து கதையை சொல்லி சொல்லி சிரிச்சிண்டு இருந்தா… தூண் ஓரமா நின்னுண்டு இருந்தேன்.. அவ என்னை கெவனிக்கலே..!!